சங்கீதம் 119
Tamil Bible (BSI 1957) • 176 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
Relatedலூக்கா 11:28 · எசேக்கியேல் 11:20 · யாக்கோபு 1:25 · சங்கீதம் 128:1 · யோவான் 13:17 · லூக்கா 1:6
2அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
Relatedஎரேமியா 29:13 · உபாகமம் 4:29 · சங்கீதம் 119:10 · யோவான் 14:23 · சங்கீதம் 25:10 · எசேக்கியேல் 36:27
3அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
4உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.
5உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.
Relatedசங்கீதம் 51:10 · II தெசலோனிக்கேயர் 3:5 · எபிரெயர் 13:21 · எரேமியா 31:33 · ரோமர் 7:22-24 · சங்கீதம் 119:36
6நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.
RelatedI யோவான் 2:28 · சங்கீதம் 119:80 · யோவான் 15:14 · யோபு 22:26 · தானியேல் 12:2-3 · யாக்கோபு 2:10
7உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.
Relatedசங்கீதம் 119:171 · யோவான் 6:45 · சங்கீதம் 119:12 · சங்கீதம் 25:4-5 · I நாளாகமம் 29:13-17 · ஏசாயா 48:17
8உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.
Relatedசங்கீதம் 71:9 · சங்கீதம் 51:11 · பிலிப்பியர் 4:13 · சங்கீதம் 38:21-22 · சங்கீதம் 119:176 · சங்கீதம் 71:18
9வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.
RelatedII தீமோத்தேயு 2:22 · யாக்கோபு 1:21-25 · II தீமோத்தேயு 3:15-17 · யோசுவா 1:7 · சங்கீதம் 119:11 · சங்கீதம் 25:7
10என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.
Relatedசங்கீதம் 119:34 · II நாளாகமம் 15:15 · சங்கீதம் 119:2 · சங்கீதம் 23:3 · சங்கீதம் 119:133 · ஏசாயா 35:8
11நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.
12கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Relatedசங்கீதம் 119:64 · I யோவான் 2:27 · லூக்கா 24:45 · சங்கீதம் 25:4-5 · சங்கீதம் 86:11 · சங்கீதம் 119:108
13உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
Relatedசங்கீதம் 71:15-18 · சங்கீதம் 37:30 · சங்கீதம் 40:9-10 · சங்கீதம் 34:11 · சங்கீதம் 118:17 · சங்கீதம் 119:46
14திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.
Relatedமத்தேயு 13:44 · எரேமியா 15:16 · சங்கீதம் 119:162 · சங்கீதம் 19:9-10 · சங்கீதம் 112:1 · யோபு 23:12
15உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.
Relatedயாக்கோபு 1:25 · சங்கீதம் 1:2 · சங்கீதம் 119:148 · சங்கீதம் 119:97 · சங்கீதம் 119:78 · சங்கீதம் 119:48
16உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்.
Relatedசங்கீதம் 119:24 · சங்கீதம் 119:47 · நீதிமொழிகள் 3:1 · சங்கீதம் 119:35 · ரோமர் 7:22 · சங்கீதம் 119:77
17உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
Relatedசங்கீதம் 13:6 · தீத்து 2:11-12 · எபேசியர் 2:4-5 · சங்கீதம் 116:7 · சங்கீதம் 119:124 · சங்கீதம் 119:65
18உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
Relatedஎபேசியர் 1:17-18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:18 · ஏசாயா 35:5 · ஏசாயா 32:3 · மத்தேயு 13:13 · II கொரிந்தியர் 4:4-6
19பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.
RelatedI நாளாகமம் 29:15 · சங்கீதம் 39:12 · எபிரெயர் 11:13-16 · சங்கீதம் 119:10 · I பேதுரு 2:11 · II கொரிந்தியர் 5:6
20உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்து போகிறது.
Relatedசங்கீதம் 42:1-2 · சங்கீதம் 84:2 · சங்கீதம் 63:1 · யோபு 23:11-12 · சங்கீதம் 119:131 · சங்கீதம் 119:174
21உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.
Relatedசங்கீதம் 119:10 · I பேதுரு 5:5 · சங்கீதம் 119:118 · லூக்கா 18:14 · உபாகமம் 28:15 · சங்கீதம் 119:110
22நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறேன்.
Relatedசங்கீதம் 39:8 · சங்கீதம் 119:39 · I பேதுரு 2:20 · I பேதுரு 4:14-16 · I பேதுரு 3:16-17 · யோபு 16:20
23பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.
Relatedசங்கீதம் 2:1-2 · I சாமுவேல் 22:7-13 · லூக்கா 23:10-11 · I சாமுவேல் 20:31 · லூக்கா 22:66 · லூக்கா 23:1-2
24உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது.
Relatedசங்கீதம் 119:92 · II தீமோத்தேயு 3:15-17 · கொலோசெயர் 3:16 · சங்கீதம் 119:16 · யோசுவா 1:8 · சங்கீதம் 119:97-100
25என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.
Relatedஉபாகமம் 30:6 · சங்கீதம் 71:20 · சங்கீதம் 119:159 · கொலோசெயர் 3:2 · ரோமர் 7:22-24 · சங்கீதம் 44:25
26என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Relatedசங்கீதம் 86:11 · சங்கீதம் 25:4 · சங்கீதம் 27:11 · சங்கீதம் 32:5 · சங்கீதம் 25:8-9 · நீதிமொழிகள் 28:13
27உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.
Relatedசங்கீதம் 145:5-6 · சங்கீதம் 105:2 · வெளிப்படுத்தின விசேஷம் 15:3 · சங்கீதம் 71:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:11 · சங்கீதம் 111:4
28சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்து போகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும்.
Relatedபிலிப்பியர் 4:13 · சங்கீதம் 22:14 · I பேதுரு 5:10 · சங்கீதம் 27:14 · ஏசாயா 40:29 · சகரியா 10:12
29பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும்.
RelatedI யோவான் 2:4 · I யோவான் 1:8 · நீதிமொழிகள் 30:8 · எபிரெயர் 8:10-11 · சங்கீதம் 119:37 · எபேசியர் 4:22-25
30மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்.
Relatedயோவான் 3:19-21 · சங்கீதம் 119:29 · நீதிமொழிகள் 1:29 · லூக்கா 10:42 · யோசுவா 24:15 · I பேதுரு 2:2
31உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.
Relatedநீதிமொழிகள் 23:23 · ரோமர் 5:5 · யோவான் 8:31 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:23 · ஏசாயா 45:17 · சங்கீதம் 25:20
32நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன்.
RelatedI இராஜாக்கள் 4:29 · II கொரிந்தியர் 3:17 · எபிரெயர் 12:1 · சங்கீதம் 18:36 · யோவான் 8:32 · யோவான் 8:36
33கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன்.
Relatedசங்கீதம் 119:26-27 · I யோவான் 2:27 · பிலிப்பியர் 1:6 · ஏசாயா 54:13 · சங்கீதம் 119:12 · மத்தேயு 24:13
34எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன்.
Relatedமத்தேயு 7:24 · யாக்கோபு 1:5 · நீதிமொழிகள் 2:5-6 · சங்கீதம் 119:73 · யாக்கோபு 1:25 · யாக்கோபு 2:8-12
35உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன்.
Relatedஎசேக்கியேல் 36:26-27 · சங்கீதம் 23:3 · சங்கீதம் 25:4 · நீதிமொழிகள் 4:11 · I யோவான் 5:3 · பிலிப்பியர் 2:13
36என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்.
Relatedஎபிரெயர் 13:5 · லூக்கா 12:15 · மாற்கு 7:21-22 · I இராஜாக்கள் 8:58 · சங்கீதம் 51:10 · II பேதுரு 2:3
37மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
RelatedI யோவான் 2:16 · நீதிமொழிகள் 4:25 · ஏசாயா 33:15 · யோபு 31:1 · எண்ணாகமம் 15:39 · நீதிமொழிகள் 23:5
38உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.
Relatedஎரேமியா 32:39-41 · சங்கீதம் 147:11 · சங்கீதம் 103:17 · II கொரிந்தியர் 1:20 · II சாமுவேல் 7:25-29 · சங்கீதம் 103:11
39நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
RelatedI தீமோத்தேயு 3:7 · தீத்து 2:8 · சங்கீதம் 119:22 · வெளிப்படுத்தின விசேஷம் 19:2 · சங்கீதம் 57:3 · சங்கீதம் 39:8
40இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.
Relatedயோவான் 10:10 · சங்கீதம் 119:20 · II கொரிந்தியர் 7:1 · சங்கீதம் 119:159 · பிலிப்பியர் 3:13-14 · சங்கீதம் 119:37
41கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.
Relatedசங்கீதம் 69:16 · சங்கீதம் 119:58 · சங்கீதம் 119:76-77 · சங்கீதம் 119:132 · லூக்கா 2:28-32 · சங்கீதம் 106:4-5
42அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 27:25 · மத்தேயு 27:63 · நீதிமொழிகள் 27:11 · சங்கீதம் 119:49 · சங்கீதம் 119:81 · II சாமுவேல் 16:7-8
43சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன்.
Relatedசங்கீதம் 9:4 · I பேதுரு 2:23 · எபேசியர் 1:13 · சங்கீதம் 119:13 · சங்கீதம் 119:175 · சங்கீதம் 71:17-18
44நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன்.
45நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன்.
Relatedசங்கீதம் 119:133 · சங்கீதம் 119:94 · யாக்கோபு 1:25 · நீதிமொழிகள் 4:12 · யோவான் 8:30-36 · யோவான் 5:39
46நான் உம்முடைய சாட்சிகளைக் குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன்.
Relatedரோமர் 1:16 · மத்தேயு 10:18-19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:1-2 · மாற்கு 8:38 · தானியேல் 3:16-18 · I பேதுரு 4:14-16
47நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன்.
Relatedசங்கீதம் 119:48 · சங்கீதம் 119:97 · சங்கீதம் 119:127 · சங்கீதம் 19:7-10 · யோவான் 4:34 · சங்கீதம் 119:16
48நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன்.
Relatedசங்கீதம் 119:15 · சங்கீதம் 1:2 · மத்தேயு 7:21 · யோவான் 15:14 · யோவான் 13:17 · எசேக்கியேல் 44:12
49நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
RelatedII சாமுவேல் 7:25 · சங்கீதம் 106:45 · சங்கீதம் 106:4 · I பேதுரு 1:13 · சங்கீதம் 119:81 · சங்கீதம் 105:42
50அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது.
Relatedரோமர் 15:4 · யோவான் 6:63 · சங்கீதம் 94:19 · சங்கீதம் 28:7 · சங்கீதம் 42:11 · எபிரெயர் 6:17-19
51அகந்தைக்காரர் என்னை மிகவும் பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை.
Relatedயோபு 23:11 · எரேமியா 20:7 · சங்கீதம் 44:18 · சங்கீதம் 119:157 · சங்கீதம் 123:3-4 · சங்கீதம் 119:21
52கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன்.
Relatedசங்கீதம் 77:11-12 · சங்கீதம் 105:5 · சங்கீதம் 103:18 · II பேதுரு 2:4-9 · உபாகமம் 1:35-36 · உபாகமம் 4:3-4
53உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது.
Relatedஎஸ்றா 9:3 · சங்கீதம் 119:158 · பிலிப்பியர் 3:18 · எரேமியா 13:17 · எஸ்றா 10:6 · சங்கீதம் 119:136
54நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின.
55கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன்.
Relatedசங்கீதம் 63:6 · சங்கீதம் 42:8 · ஏசாயா 26:9 · யோபு 35:9-10 · சங்கீதம் 139:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25
56நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது.
57கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன்.
Relatedபுலம்பல் 3:24 · சங்கீதம் 16:5 · சங்கீதம் 142:5 · எரேமியா 10:16 · சங்கீதம் 73:26 · சங்கீதம் 119:115
58முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும்.
Relatedசங்கீதம் 119:41 · எபிரெயர் 10:22 · சங்கீதம் 119:170 · சங்கீதம் 119:10 · I இராஜாக்கள் 13:6 · சங்கீதம் 27:8
59என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன்.
RelatedII கொரிந்தியர் 13:5 · புலம்பல் 3:40 · எசேக்கியேல் 18:28 · II கொரிந்தியர் 12:21 · லூக்கா 15:17-20 · ஆகாய் 1:7
60உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன்.
61துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை.
Relatedரோமர் 12:17-21 · சங்கீதம் 119:176 · ஓசியா 6:9 · நீதிமொழிகள் 24:29 · சங்கீதம் 140:5 · சங்கீதம் 119:95
62உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25 · சங்கீதம் 42:8 · மாற்கு 1:35 · சங்கீதம் 119:164 · சங்கீதம் 119:7 · சங்கீதம் 119:137
63உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.
Relatedசங்கீதம் 101:6 · நீதிமொழிகள் 13:20 · I யோவான் 1:3 · மல்கியா 3:16-18 · சங்கீதம் 119:79 · சங்கீதம் 16:3
64கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Relatedசங்கீதம் 33:5 · மத்தேயு 11:29 · சங்கீதம் 119:12 · சங்கீதம் 145:9 · ஏசாயா 48:17-18 · சங்கீதம் 119:26
65கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.
Relatedசங்கீதம் 30:11 · சங்கீதம் 13:6 · சங்கீதம் 119:17 · சங்கீதம் 16:5-6 · சங்கீதம் 116:7 · சங்கீதம் 18:35
66உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன்.
Relatedபிலிப்பியர் 1:9 · நீதிமொழிகள் 2:1-9 · I இராஜாக்கள் 3:9 · யாக்கோபு 3:13-18 · சங்கீதம் 119:34 · மத்தேயு 13:11
67நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.
Relatedஎரேமியா 31:18-19 · சங்கீதம் 119:71 · ஓசியா 5:15-6:1 · சங்கீதம் 119:75 · சங்கீதம் 119:176 · எபிரெயர் 12:5-11
68தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Relatedசங்கீதம் 119:12 · சங்கீதம் 106:1 · சங்கீதம் 86:5 · யாத்திராகமம் 34:6-7 · மத்தேயு 19:17 · சங்கீதம் 107:1
69அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன்.
Relatedயோபு 13:4 · மத்தேயு 5:11-12 · சங்கீதம் 119:157 · சங்கீதம் 109:2-3 · மத்தேயு 26:59-68 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:5
70அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்.
Relatedசங்கீதம் 17:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:27 · சங்கீதம் 73:7 · ஏசாயா 6:10 · சங்கீதம் 119:16 · சங்கீதம் 40:8
71நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
72அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்.
Relatedநீதிமொழிகள் 8:10-11 · சங்கீதம் 19:10 · சங்கீதம் 119:127 · நீதிமொழிகள் 16:16 · சங்கீதம் 119:162 · மத்தேயு 13:44-46
73உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.
Relatedசங்கீதம் 139:14-16 · யோபு 31:15 · சங்கீதம் 138:8 · சங்கீதம் 111:10 · II தீமோத்தேயு 2:7 · சங்கீதம் 119:125
74நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்.
Relatedசங்கீதம் 66:16 · சங்கீதம் 34:2-6 · சங்கீதம் 119:79 · சங்கீதம் 119:42 · ஆதியாகமம் 32:11-12 · லூக்கா 21:33
75கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 3:19 · எபிரெயர் 12:10-11 · ரோமர் 3:4-5 · சங்கீதம் 89:30-33 · சங்கீதம் 119:128 · சங்கீதம் 119:160
76நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக.
77நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
Relatedசங்கீதம் 119:174 · புலம்பல் 3:22-23 · சங்கீதம் 1:2 · சங்கீதம் 119:41 · சங்கீதம் 119:24 · சங்கீதம் 119:47
78அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன்.
Relatedசங்கீதம் 25:3 · சங்கீதம் 119:51 · யோவான் 15:25 · I பேதுரு 2:20 · சங்கீதம் 119:23 · I சாமுவேல் 26:18
79உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக.
80நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.
Relatedஉபாகமம் 26:16 · I யோவான் 2:28 · II நாளாகமம் 12:14 · சங்கீதம் 119:6 · யோவான் 1:47 · II கொரிந்தியர் 1:12
81உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
Relatedசங்கீதம் 84:2 · சங்கீதம் 119:40 · சங்கீதம் 73:26 · சங்கீதம் 119:114 · உன்னதப்பாட்டு 5:8 · சங்கீதம் 119:77
82எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது.
Relatedசங்கீதம் 69:3 · சங்கீதம் 119:123 · நீதிமொழிகள் 13:12 · சங்கீதம் 86:17 · சங்கீதம் 90:13-15 · உபாகமம் 28:32
83புகையிலுள்ள துருத்தியைப் போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன்.
Relatedயோபு 30:30 · சங்கீதம் 119:176 · சங்கீதம் 119:16 · சங்கீதம் 102:3-4 · சங்கீதம் 119:61 · சங்கீதம் 22:15
84உமது அடியேனுடைய நாட்கள் எம்மாத்திரம்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்பு செய்வீர்?
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 6:10-11 · சங்கீதம் 90:12 · சங்கீதம் 89:47-48 · சங்கீதம் 7:6 · சங்கீதம் 39:4-5 · யோபு 7:6-8
85உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள்.
Relatedநீதிமொழிகள் 16:27 · சங்கீதம் 35:7 · எரேமியா 18:20 · சங்கீதம் 7:15 · சங்கீதம் 119:78 · சங்கீதம் 36:11
86உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும்.
Relatedசங்கீதம் 35:19 · சங்கீதம் 70:5 · சங்கீதம் 119:78 · சங்கீதம் 109:26 · சங்கீதம் 35:7 · சங்கீதம் 119:151
87அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை.
Relatedமத்தேயு 10:28 · ஏசாயா 58:2 · சங்கீதம் 119:61 · I சாமுவேல் 26:24 · சங்கீதம் 119:51 · I சாமுவேல் 20:3
88உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்.
Relatedசங்கீதம் 25:10 · சங்கீதம் 119:25 · சங்கீதம் 119:40 · சங்கீதம் 119:146 · சங்கீதம் 119:159 · சங்கீதம் 119:2
89கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது.
RelatedI பேதுரு 1:25 · மத்தேயு 5:18 · மத்தேயு 24:34-35 · சங்கீதம் 119:160 · சங்கீதம் 119:152 · சங்கீதம் 89:2
90உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது.
Relatedசங்கீதம் 100:5 · சங்கீதம் 36:5 · மீகா 7:20 · சங்கீதம் 148:6 · சங்கீதம் 89:1-2 · சங்கீதம் 93:1
91உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும்.
92உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
Relatedரோமர் 15:4 · நீதிமொழிகள் 6:22-23 · சங்கீதம் 119:143 · சங்கீதம் 94:18-19 · சங்கீதம் 119:77 · சங்கீதம் 119:24
93நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர்.
94நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன்.
Relatedசெப்பனியா 3:17 · ஏசாயா 64:8-10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:23-24 · சங்கீதம் 86:2 · சங்கீதம் 119:27 · ஏசாயா 44:2
95துன்மார்க்கர் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.
Relatedசங்கீதம் 119:167 · சங்கீதம் 119:31 · சங்கீதம் 119:85-87 · சங்கீதம் 119:69 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:3 · சங்கீதம் 10:8-10
96சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம்.
Relatedமத்தேயு 24:35 · பிரசங்கி 2:11 · மத்தேயு 5:18 · பிரசங்கி 1:2-3 · சங்கீதம் 39:5-6 · II சாமுவேல் 17:23
97உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுவதும் அது என் தியானம்.
Relatedசங்கீதம் 1:2 · நீதிமொழிகள் 2:10 · சங்கீதம் 119:159 · சங்கீதம் 119:48 · யோசுவா 1:8 · உபாகமம் 17:19
98நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.
Relatedநீதிமொழிகள் 2:6 · யாக்கோபு 1:25 · கொலோசெயர் 3:16 · சங்கீதம் 119:104-105 · உபாகமம் 4:6 · சங்கீதம் 119:11
99உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.
Relatedமத்தேயு 13:11 · மத்தேயு 11:25 · II தீமோத்தேயு 3:15-17 · சங்கீதம் 119:24 · மத்தேயு 23:24-36 · II நாளாகமம் 29:15-36
100உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்.
101உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன்.
Relatedநீதிமொழிகள் 1:15 · I பேதுரு 3:10-11 · சங்கீதம் 119:104 · ஏசாயா 55:7 · ஏசாயா 53:6 · I பேதுரு 2:1-2
102நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன்.
RelatedI யோவான் 2:27 · நீதிமொழிகள் 5:7 · சங்கீதம் 18:21 · I தெசலோனிக்கேயர் 2:13 · எரேமியா 32:40 · எபேசியர் 4:20-24
103உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.
Relatedநீதிமொழிகள் 8:11 · சங்கீதம் 19:10 · நீதிமொழிகள் 24:13-14 · சங்கீதம் 63:5 · யோபு 23:12 · நீதிமொழிகள் 3:17
104உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
Relatedசங்கீதம் 119:128 · நீதிமொழிகள் 8:13 · நீதிமொழிகள் 14:12 · சங்கீதம் 119:98 · சங்கீதம் 97:10 · சங்கீதம் 119:100
105உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
Relatedநீதிமொழிகள் 6:23 · சங்கீதம் 43:3 · சங்கீதம் 18:28 · II பேதுரு 1:19 · யோபு 29:3 · சங்கீதம் 19:8
106உம்முடைய நீதி நியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன்.
Relatedநெகேமியா 10:29 · சங்கீதம் 56:12 · II கொரிந்தியர் 8:5 · சங்கீதம் 66:13-14 · II இராஜாக்கள் 23:3 · பிரசங்கி 5:4-5
107நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும்.
Relatedசங்கீதம் 34:19 · சங்கீதம் 143:11 · சங்கீதம் 119:25 · சங்கீதம் 119:88 · சங்கீதம் 22:14-18 · சங்கீதம் 6:1
108கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும்.
Relatedஎபிரெயர் 13:15 · ஓசியா 14:2 · எண்ணாகமம் 29:39 · சங்கீதம் 119:12 · சங்கீதம் 119:169 · சங்கீதம் 119:130
109என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன்.
Relatedநியாயாதிபதிகள் 12:3 · யோபு 13:14 · I கொரிந்தியர் 15:31 · ரோமர் 8:36 · I சாமுவேல் 20:3 · சங்கீதம் 119:117
110துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழிதவறேன்.
Relatedசங்கீதம் 140:5 · சங்கீதம் 119:95 · சங்கீதம் 141:9 · சங்கீதம் 119:10 · சங்கீதம் 119:85 · எரேமியா 18:22
111உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி.
Relatedஎரேமியா 15:16 · சங்கீதம் 16:5 · சங்கீதம் 119:174 · சங்கீதம் 119:92 · I பேதுரு 1:4 · சங்கீதம் 119:74
112முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன்.
Relatedசங்கீதம் 119:33 · சங்கீதம் 119:36 · I இராஜாக்கள் 8:58 · சங்கீதம் 141:4 · யோசுவா 24:23 · சங்கீதம் 119:44
113வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன்.
Relatedயாக்கோபு 1:8 · எரேமியா 4:14 · ஏசாயா 55:7 · சங்கீதம் 119:97 · மாற்கு 7:21 · II கொரிந்தியர் 10:5
114என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
Relatedசங்கீதம் 91:1-2 · சங்கீதம் 32:7 · சங்கீதம் 3:3 · ஏசாயா 32:2 · சங்கீதம் 130:5-6 · சங்கீதம் 119:81
115பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன்.
RelatedI கொரிந்தியர் 15:33 · மத்தேயு 7:23 · சங்கீதம் 6:8 · சங்கீதம் 119:106 · சங்கீதம் 26:5 · சங்கீதம் 139:19
116நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும்.
117என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பேன்.
Relatedசங்கீதம் 119:6 · யூதா 1:24 · சங்கீதம் 71:6 · யோவான் 10:28-29 · சங்கீதம் 139:10 · சங்கீதம் 17:5
118உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துப் போடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே.
Relatedசங்கீதம் 119:10 · சங்கீதம் 119:21 · வெளிப்படுத்தின விசேஷம் 18:23 · சங்கீதம் 119:29 · எபேசியர் 4:22 · ஏசாயா 63:3
119பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன்.
Relatedமத்தேயு 7:23 · மல்கியா 3:2-3 · எசேக்கியேல் 22:18-22 · சங்கீதம் 119:126-128 · சங்கீதம் 119:111 · மத்தேயு 13:49-50
120உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன்.
Relatedதானியேல் 10:8-11 · ஆபகூக் 3:16 · எபிரெயர் 12:21 · எபிரெயர் 12:28-29 · பிலிப்பியர் 2:12 · ஏசாயா 66:2
121நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்.
Relatedசங்கீதம் 18:20-24 · II சாமுவேல் 8:15 · சங்கீதம் 37:33 · II கொரிந்தியர் 1:12 · I சாமுவேல் 25:28 · சங்கீதம் 7:3-5
122உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னையொடுக்கவொட்டாதேயும்.
Relatedஎபிரெயர் 7:22 · சங்கீதம் 119:21 · நீதிமொழிகள் 22:26-27 · ஏசாயா 38:14 · யோபு 17:3 · பிலேமோன் 1:18-19
123உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது.
124உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Relatedசங்கீதம் 119:12 · தானியேல் 9:18 · சங்கீதம் 119:76-77 · சங்கீதம் 103:10 · சங்கீதம் 130:7 · சங்கீதம் 69:13
125நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும்.
Relatedயாக்கோபு 3:13-17 · சங்கீதம் 116:16 · II கொரிந்தியர் 3:5-6 · யாக்கோபு 1:5 · சங்கீதம் 119:34 · நீதிமொழிகள் 14:8
126நீதியைச்செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிராணத்தை மீறினார்கள்.
127ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன்.
Relatedசங்கீதம் 19:10 · மத்தேயு 13:45-46 · நீதிமொழிகள் 16:16 · நீதிமொழிகள் 3:13-18 · நீதிமொழிகள் 8:11 · சங்கீதம் 119:72
128எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
Relatedசங்கீதம் 119:104 · ரோமர் 7:22 · சங்கீதம் 19:7-8 · சங்கீதம் 119:6 · நீதிமொழிகள் 30:5 · உபாகமம் 4:8
129உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும்.
Relatedசங்கீதம் 139:6 · சங்கீதம் 25:10 · சங்கீதம் 119:18 · ஏசாயா 25:1 · சங்கீதம் 119:2 · சங்கீதம் 119:146
130உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும்.
Relatedசங்கீதம் 119:105 · நீதிமொழிகள் 6:23 · II கொரிந்தியர் 4:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:18 · சங்கீதம் 19:7 · லூக்கா 1:77-79
131உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன்.
Relatedசங்கீதம் 42:1 · சங்கீதம் 119:20 · I பேதுரு 2:2 · எபிரெயர் 12:14 · ஏசாயா 26:8-9 · சங்கீதம் 81:10
132உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும்.
Relatedசங்கீதம் 106:4 · சங்கீதம் 119:124 · I சாமுவேல் 1:11 · சங்கீதம் 25:18 · சங்கீதம் 25:16 · யாத்திராகமம் 4:31
133உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும்.
Relatedசங்கீதம் 17:5 · சங்கீதம் 19:13 · சங்கீதம் 119:116 · சங்கீதம் 32:8 · ரோமர் 6:12-14 · I சாமுவேல் 2:9
134மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன்.
Relatedசங்கீதம் 119:122 · சங்கீதம் 56:1-2 · எசேக்கியேல் 11:17-20 · லூக்கா 1:74-75 · சங்கீதம் 105:43-45 · எசேக்கியேல் 36:24-27
135உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.
Relatedஎண்ணாகமம் 6:25-26 · சங்கீதம் 4:6 · சங்கீதம் 80:7 · சங்கீதம் 80:3 · லூக்கா 24:45 · சங்கீதம் 80:19
136உம்முடைய வேதத்தை மனுஷர் காத்துநடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது.
Relatedஎரேமியா 9:1 · எசேக்கியேல் 9:4 · சங்கீதம் 119:53 · சங்கீதம் 119:158 · எரேமியா 14:17 · எரேமியா 9:18
137கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள்.
Relatedஎரேமியா 12:1 · எஸ்றா 9:15 · தானியேல் 9:7 · சங்கீதம் 145:17 · நெகேமியா 9:33 · வெளிப்படுத்தின விசேஷம் 16:7
138நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள்.
139என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது.
Relatedசங்கீதம் 69:9 · யோவான் 2:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:27 · I இராஜாக்கள் 19:10 · மத்தேயு 9:13 · மத்தேயு 21:13
140உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன்.
Relatedநீதிமொழிகள் 30:5 · சங்கீதம் 19:8 · II பேதுரு 1:21 · சங்கீதம் 12:6 · ரோமர் 7:22 · சங்கீதம் 119:128
141நான் சிறியவனும் அசட்டைபண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன்.
Relatedசங்கீதம் 22:6 · II கொரிந்தியர் 8:9 · யாக்கோபு 2:5 · லூக்கா 6:20 · லூக்கா 9:58 · சங்கீதம் 40:17
142உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம்.
143இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி.
Relatedயோபு 23:12 · சங்கீதம் 119:107 · சங்கீதம் 119:77 · சங்கீதம் 130:1 · சங்கீதம் 119:47 · சங்கீதம் 119:16
144உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன்.
Relatedசங்கீதம் 119:169 · தானியேல் 12:10 · எரேமியா 4:22 · II கொரிந்தியர் 4:6 · I பேதுரு 1:23-25 · I யோவான் 5:20-21
145முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்.
Relatedசங்கீதம் 119:10 · எரேமியா 29:13 · சங்கீதம் 102:1 · சங்கீதம் 119:106 · சங்கீதம் 119:44 · சங்கீதம் 62:8
146உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன்.
147அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன்.
Relatedமாற்கு 1:35 · சங்கீதம் 5:3 · சங்கீதம் 130:5-6 · சங்கீதம் 88:13 · சங்கீதம் 56:4 · சங்கீதம் 119:81
148உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும்.
Relatedசங்கீதம் 63:6 · லூக்கா 6:12 · புலம்பல் 2:19 · சங்கீதம் 63:1 · சங்கீதம் 139:17-18 · சங்கீதம் 119:62
149உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்பின்படி என்னை உயிர்ப்பியும்.
Relatedஏசாயா 63:7 · சங்கீதம் 55:2 · சங்கீதம் 109:21 · சங்கீதம் 51:1 · சங்கீதம் 119:40 · சங்கீதம் 5:2-3
150தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள்.
Relatedசங்கீதம் 27:2 · நீதிமொழிகள் 28:9 · I சாமுவேல் 23:16 · சங்கீதம் 22:11-13 · சங்கீதம் 22:16 · யோபு 21:14
151கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை.
Relatedசங்கீதம் 145:18 · சங்கீதம் 119:142 · சங்கீதம் 139:2 · சங்கீதம் 34:18 · சங்கீதம் 119:138 · உபாகமம் 4:7
152நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன்.
Relatedலூக்கா 21:33 · சங்கீதம் 111:7-8 · பிரசங்கி 3:14 · சங்கீதம் 119:160 · சங்கீதம் 119:144 · சங்கீதம் 89:34-37
153என் உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறவேன்.
Relatedசங்கீதம் 119:176 · புலம்பல் 5:1 · சங்கீதம் 9:13 · சங்கீதம் 25:19 · சங்கீதம் 119:141 · நீதிமொழிகள் 3:1
154எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.
Relatedசங்கீதம் 35:1 · எரேமியா 50:34 · மீகா 7:9 · I சாமுவேல் 24:15 · சங்கீதம் 119:40 · சங்கீதம் 119:25
155இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள்.
156கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும்.
Relatedசங்கீதம் 86:15 · சங்கீதம் 86:13 · சங்கீதம் 51:1 · ஏசாயா 63:7 · சங்கீதம் 86:5 · I நாளாகமம் 21:13
157என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டுவிலகேன்.
RelatedI கொரிந்தியர் 15:58 · சங்கீதம் 119:51 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:23-24 · யோபு 17:9 · ஏசாயா 42:4 · யோபு 23:11
158உமது வசனத்தைக் காத்துக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது.
159இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும்.
160உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம்.
Relatedநீதிமொழிகள் 30:5 · II தீமோத்தேயு 3:16 · சங்கீதம் 119:144 · மத்தேயு 5:18 · சங்கீதம் 119:142 · பிரசங்கி 3:14
161பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது.
Relatedசங்கீதம் 119:157 · I சாமுவேல் 26:18 · I சாமுவேல் 24:9-15 · ஏசாயா 66:2 · சங்கீதம் 119:23 · யோவான் 15:25
162மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின் பேரில் மகிழுகிறேன்.
Relatedஎரேமியா 15:16 · சங்கீதம் 119:72 · சங்கீதம் 119:111 · I சாமுவேல் 30:16 · ஏசாயா 9:3 · நீதிமொழிகள் 16:19
163பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன்.
Relatedசங்கீதம் 119:128 · நீதிமொழிகள் 6:16-19 · ரோமர் 12:9 · சங்கீதம் 119:29 · ஆமோஸ் 5:15 · சங்கீதம் 101:7
164உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன்.
Relatedசங்கீதம் 119:62 · சங்கீதம் 55:17 · சங்கீதம் 97:8 · சங்கீதம் 48:11 · வெளிப்படுத்தின விசேஷம் 19:2
165உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.
Relatedநீதிமொழிகள் 3:1-2 · ஏசாயா 32:17 · ஏசாயா 26:3 · யோவான் 14:27 · பிலிப்பியர் 4:7 · கலாத்தியர் 5:22-23
166கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன்.
Relatedஆதியாகமம் 49:18 · சங்கீதம் 119:81 · சங்கீதம் 119:174 · யோவான் 7:17 · I யோவான் 2:3-4 · சங்கீதம் 130:5-7
167என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன்.
Relatedரோமர் 7:22 · சங்கீதம் 40:8 · எபிரெயர் 10:16 · யோவான் 14:21-24 · யோவான் 15:9-10 · சங்கீதம் 119:97
168உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது.
Relatedநீதிமொழிகள் 5:21 · சங்கீதம் 139:3 · சங்கீதம் 44:20-21 · யோபு 34:21 · எரேமியா 23:24 · வெளிப்படுத்தின விசேஷம் 2:23
169கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும்.
Relatedயாக்கோபு 1:5 · சங்கீதம் 119:144-145 · சங்கீதம் 18:6 · நீதிமொழிகள் 2:3-5 · II நாளாகமம் 1:10 · II நாளாகமம் 30:27
170என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.
Relatedசங்கீதம் 119:41 · சங்கீதம் 28:2 · சங்கீதம் 89:20-25 · ஆதியாகமம் 32:9-12 · II சாமுவேல் 7:25 · சங்கீதம் 31:2
171உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும்.
Relatedசங்கீதம் 71:23-24 · சங்கீதம் 94:12 · சங்கீதம் 71:17 · சங்கீதம் 51:15 · சங்கீதம் 119:7 · சங்கீதம் 50:23
172உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச் சொல்லும்.
Relatedஎபேசியர் 4:29 · ரோமர் 7:14 · சங்கீதம் 37:30 · மத்தேயு 12:34-35 · ரோமர் 7:12 · சங்கீதம் 119:138
173நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக.
Relatedஏசாயா 41:10-14 · யோசுவா 24:22 · உபாகமம் 30:19 · லூக்கா 10:42 · I இராஜாக்கள் 3:11-12 · சங்கீதம் 119:40
174கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.
Relatedசங்கீதம் 119:166-167 · சங்கீதம் 119:16 · சங்கீதம் 1:2 · சங்கீதம் 119:162 · சங்கீதம் 119:47 · சங்கீதம் 119:111
175என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக.
Relatedஏசாயா 55:3 · சங்கீதம் 51:14-15 · சங்கீதம் 118:18-19 · ஏசாயா 26:8-9 · ஏசாயா 38:19 · ரோமர் 8:28
176காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன்.
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS