நீதிமொழிகள் 3
Tamil Bible (BSI 1957) • 35 verses
1என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.
Relatedயோவான் 14:21-24 · நீதிமொழிகள் 4:5 · உபாகமம் 6:6-9 · சங்கீதம் 119:16 · நீதிமொழிகள் 1:8 · சங்கீதம் 119:34
2அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.
Relatedஎபேசியர் 6:1-3 · நீதிமொழிகள் 4:10 · சங்கீதம் 91:16 · நீதிமொழிகள் 9:11 · சங்கீதம் 128:6 · ரோமர் 15:13
3கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள்.
RelatedII கொரிந்தியர் 3:3 · நீதிமொழிகள் 7:3 · எபிரெயர் 10:16 · உபாகமம் 11:18-21 · மல்கியா 2:6 · நீதிமொழிகள் 6:21
4அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.
Relatedலூக்கா 2:52 · I சாமுவேல் 2:26 · ரோமர் 14:18 · சங்கீதம் 111:10 · ஆதியாகமம் 39:2-4 · ஆதியாகமம் 39:21
5உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
Relatedசங்கீதம் 37:5 · எரேமியா 17:7-8 · நீதிமொழிகள் 28:26 · சங்கீதம் 37:3 · சங்கீதம் 62:8 · ஏசாயா 26:3-4
6உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
Relatedநீதிமொழிகள் 16:3 · சங்கீதம் 32:8 · பிலிப்பியர் 4:6 · நீதிமொழிகள் 16:9 · எரேமியா 10:23 · யாக்கோபு 1:5
7நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
8அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும்.
Relatedநீதிமொழிகள் 4:22 · சங்கீதம் 147:3 · நீதிமொழிகள் 16:24 · யோபு 21:24 · எசேக்கியேல் 16:4-5 · ஏசாயா 1:6
9உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.
Relatedஉபாகமம் 26:2-15 · I கொரிந்தியர் 16:2 · நீதிமொழிகள் 14:31 · யாத்திராகமம் 23:19 · பிலிப்பியர் 4:17-18 · மல்கியா 3:8-10
10அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.
Relatedநீதிமொழிகள் 19:17 · உபாகமம் 28:8 · நீதிமொழிகள் 11:24-25 · யோவேல் 2:24 · நீதிமொழிகள் 22:9 · II கொரிந்தியர் 9:6-11
11என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
Relatedயோபு 5:17 · வெளிப்படுத்தின விசேஷம் 3:19 · எபிரெயர் 12:5-12 · சங்கீதம் 94:12 · ஏசாயா 40:30-31 · I கொரிந்தியர் 11:32
12தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
Relatedஉபாகமம் 8:5 · வெளிப்படுத்தின விசேஷம் 3:19 · நீதிமொழிகள் 29:17 · நீதிமொழிகள் 13:24 · சங்கீதம் 103:13
13ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள்.
Relatedநீதிமொழிகள் 8:32-35 · நீதிமொழிகள் 4:5-9 · பிரசங்கி 9:15-18 · I இராஜாக்கள் 10:23-24 · I இராஜாக்கள் 10:1-9 · நீதிமொழிகள் 2:4
14அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.
Relatedநீதிமொழிகள் 16:16 · நீதிமொழிகள் 8:19 · யோபு 28:13-19 · வெளிப்படுத்தின விசேஷம் 3:18 · சங்கீதம் 119:111 · மத்தேயு 16:26
15முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.
Relatedநீதிமொழிகள் 8:11 · யோபு 28:18 · நீதிமொழிகள் 31:10 · சங்கீதம் 73:25-26 · ரோமர் 8:18 · நீதிமொழிகள் 20:15
16அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
Relatedநீதிமொழிகள் 3:2 · II கொரிந்தியர் 6:10 · நீதிமொழிகள் 22:4 · I இராஜாக்கள் 3:13 · மாற்கு 10:30 · I தீமோத்தேயு 4:8
17அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.
Relatedலூக்கா 1:79 · ஏசாயா 26:3 · பிலிப்பியர் 4:8-9 · நீதிமொழிகள் 2:10 · சங்கீதம் 119:165 · நீதிமொழிகள் 22:18
18அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
Relatedநீதிமொழிகள் 11:30 · நீதிமொழிகள் 15:4 · வெளிப்படுத்தின விசேஷம் 2:7 · ஆதியாகமம் 2:9 · நீதிமொழிகள் 13:12 · ஆதியாகமம் 3:22
19கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.
Relatedசங்கீதம் 104:24 · எரேமியா 10:12 · யோவான் 1:3 · எரேமியா 51:15 · சங்கீதம் 136:5 · நீதிமொழிகள் 8:27-29
20அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது.
Relatedஆதியாகமம் 7:11 · சங்கீதம் 65:9-12 · ஆதியாகமம் 1:9 · யோபு 38:26-28 · ஆதியாகமம் 27:28 · யோபு 36:27-28
21என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள்.
Relatedயோசுவா 1:8 · உபாகமம் 6:6-9 · உபாகமம் 32:46-47 · நீதிமொழிகள் 4:21 · எபிரெயர் 2:1-3 · உபாகமம் 4:9
22அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.
23அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது.
Relatedநீதிமொழிகள் 4:12 · நீதிமொழிகள் 10:9 · சங்கீதம் 121:3 · சங்கீதம் 91:11-12 · சங்கீதம் 37:31 · சங்கீதம் 37:23-24
24நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.
Relatedசங்கீதம் 3:5 · சங்கீதம் 4:8 · நீதிமொழிகள் 6:22 · யோபு 11:19 · சங்கீதம் 121:4-7 · எரேமியா 31:26
25சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்.
Relatedஏசாயா 41:10-14 · சங்கீதம் 112:7 · I பேதுரு 3:14 · சங்கீதம் 91:5 · ஏசாயா 8:12-13 · மத்தேயு 8:24-26
26கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
27நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
28உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
Relatedலேவியராகமம் 19:13 · உபாகமம் 24:12-15 · II கொரிந்தியர் 8:11 · பிரசங்கி 9:10 · I தீமோத்தேயு 6:18 · பிரசங்கி 11:6
29அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாகத் தீங்கு நினையாதே.
Relatedநீதிமொழிகள் 6:14 · சங்கீதம் 55:20 · சங்கீதம் 35:20 · நீதிமொழிகள் 16:29-30 · சங்கீதம் 59:3 · மீகா 2:1-2
30ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.
RelatedII தீமோத்தேயு 2:24 · நீதிமொழிகள் 29:22 · ரோமர் 12:18-21 · நீதிமொழிகள் 18:6 · நீதிமொழிகள் 25:8-9 · நீதிமொழிகள் 17:14
31கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.
Relatedநீதிமொழிகள் 24:1 · சங்கீதம் 37:1 · பிரசங்கி 5:8 · கலாத்தியர் 5:21 · நீதிமொழிகள் 23:17 · நீதிமொழிகள் 12:12
32மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.
Relatedசங்கீதம் 25:14 · நீதிமொழிகள் 11:20 · யோவான் 15:15 · நீதிமொழிகள் 17:15 · நீதிமொழிகள் 8:13 · மத்தேயு 13:11
33துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
Relatedசங்கீதம் 37:22 · லேவியராகமம் 26:14-46 · யோபு 8:6-7 · சங்கீதம் 91:10 · மல்கியா 2:2 · நீதிமொழிகள் 21:12
34இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.
Relatedயாக்கோபு 4:6 · I பேதுரு 5:5 · சங்கீதம் 138:6 · நீதிமொழிகள் 9:12 · நீதிமொழிகள் 21:24 · ஏசாயா 57:15
35ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS