எண்ணாகமம் 6
Tamil Bible (BSI 1957) • 27 verses
1கர்த்தர் மோசேயை நோக்கி:
2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப்பண்ணினால்,
Relatedநியாயாதிபதிகள் 13:5 · ஆமோஸ் 2:11-12 · ரோமர் 1:1 · எபிரெயர் 7:27 · லூக்கா 1:15 · எண்ணாகமம் 6:5-6
3அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்சவற்றல்களையாவது புசியாமலும்,
Relatedலூக்கா 1:15 · I தீமோத்தேயு 5:23 · நியாயாதிபதிகள் 13:14 · எபேசியர் 5:18 · ஆமோஸ் 2:12 · லேவியராகமம் 10:9
4தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன்.
5அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.
RelatedI சாமுவேல் 1:11 · நியாயாதிபதிகள் 13:5 · நியாயாதிபதிகள் 16:17 · I கொரிந்தியர் 11:10-15 · நியாயாதிபதிகள் 16:19 · புலம்பல் 4:7-8
6அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது.
Relatedலேவியராகமம் 19:28 · லேவியராகமம் 21:11 · மத்தேயு 8:21-22 · லூக்கா 9:59-60 · எரேமியா 16:5-6 · II கொரிந்தியர் 5:16
7அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.
8அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்.
RelatedII கொரிந்தியர் 6:17-18
9அவனண்டையிலே ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால், நசரேய விரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதேயாகில், அவன் தன் சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டு,
Relatedஎண்ணாகமம் 6:18 · லேவியராகமம் 14:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:23-24 · எண்ணாகமம் 19:14-19 · பிலிப்பியர் 3:8-9
10எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன்.
Relatedலேவியராகமம் 1:14 · லேவியராகமம் 15:29 · லேவியராகமம் 15:14 · லேவியராகமம் 12:6 · யோவான் 2:1-2 · லேவியராகமம் 9:1-21
11அப்பொழுது ஆசாரியன் ஒன்றைப்பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, பிணத்தினால் அவனுக்கு உண்டான தீட்டை நிவிர்த்திசெய்து, அவன் தலையை அந்நாளில் பரிசுத்தப்படுத்துவானாக.
12அவன் திரும்பவும் தன் விரதநாட்களைக் கர்த்தருக்கென்று காத்து, ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரக்கடவன்; அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதினால் சென்ற நாட்கள் விருதாவாகும்.
Relatedலேவியராகமம் 5:6 · லேவியராகமம் 14:24 · யாக்கோபு 2:10 · மத்தேயு 3:15 · II யோவான் 1:8 · மத்தேயு 24:13
13நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே வந்து,
14சர்வாங்க தகனபலியாக ஒருவருஷத்து பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், பாவநிவாரணபலியாக ஒருவருஷத்து பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும்,
Relatedலேவியராகமம் 4:32 · லேவியராகமம் 3:6 · லேவியராகமம் 1:10-13 · I பேதுரு 1:19 · I நாளாகமம் 15:28-29 · மல்கியா 1:13-14
15ஒரு கூடையில் எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் கர்த்தருக்குத் தன் காணிக்கையாகச் செலுத்தக்கடவன்.
Relatedலேவியராகமம் 2:4 · யாத்திராகமம் 29:2 · எண்ணாகமம் 15:10 · லேவியராகமம் 8:2 · லேவியராகமம் 9:4 · யோவேல் 2:14
16அவைகளை ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரணபலியையும் அவனுடைய சர்வாங்கதகனபலியையும் செலுத்தி,
17ஆட்டுக்கடாவைக் கூடையிலிருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதான பலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைப்பானாக.
18அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 21:24 · எண்ணாகமம் 6:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:18 · லூக்கா 17:10 · எண்ணாகமம் 6:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:26
19நசரேயன் பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டபின்பு, ஆசாரியன் ஆட்டுக்கடாவினுடைய வேவிக்கப்பட்ட ஒரு முன்னந்தொடையையும், கூடையில் இருக்கிறவைகளிலே புளிப்பில்லாத ஒரு அதிரசத்தையும் புளிப்பில்லாத ஒரு அடையையும் எடுத்து, அவனுடைய உள்ளங்கைகளில் வைத்து,
RelatedI சாமுவேல் 2:15 · லேவியராகமம் 7:30 · லேவியராகமம் 8:27 · யாத்திராகமம் 29:23-28 · லேவியராகமம் 8:31
20அவைகளைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டக்கடவன்; அது அசைவாட்டப்பட்ட மார்க்கண்டத்தோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும், ஆசாரியனைச் சேரும்; அது பரிசுத்தமானது. பின்பு நசரேயன் திராட்சரசம் குடிக்கலாம்.
Relatedபிரசங்கி 9:7 · யாத்திராகமம் 29:27-28 · எண்ணாகமம் 5:25 · ஏசாயா 25:6 · ஏசாயா 53:10-12 · II தீமோத்தேயு 4:7-8
21பொருத்தனைபண்ணின நசரேயனுக்கும், அவன் தன் கைக்கு உதவுகிறதையல்லாமல், தன் நசரேய விரதத்தினிமித்தம் கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன் பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்க செய்து தீரவேண்டும் என்று சொல் என்றார்.
22பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:
23நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது:
Relatedஉபாகமம் 21:5 · ஆதியாகமம் 48:20 · I நாளாகமம் 23:13 · எபிரெயர் 7:1 · ஆதியாகமம் 27:27-29 · II கொரிந்தியர் 13:14
24கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.
RelatedI தெசலோனிக்கேயர் 5:23 · சங்கீதம் 121:4-7 · பிலிப்பியர் 4:7 · யூதா 1:24 · ஏசாயா 42:6 · சங்கீதம் 91:11
25கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.
Relatedசங்கீதம் 80:19 · சங்கீதம் 119:135 · சங்கீதம் 31:16 · சங்கீதம் 67:1 · தானியேல் 9:17 · சங்கீதம் 80:7
26கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே.
Relatedசங்கீதம் 4:6 · II தெசலோனிக்கேயர் 3:16 · சங்கீதம் 29:11 · ரோமர் 15:13 · யோவான் 16:33 · ஏசாயா 26:3
27இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.
RelatedII நாளாகமம் 7:14 · தானியேல் 9:18-19 · உபாகமம் 28:10 · எபேசியர் 1:3 · எரேமியா 14:9 · சங்கீதம் 115:12-13
📖 எண்ணாகமம்All 36 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS