ஓசியா 6
Tamil Bible (BSI 1957) • 11 verses
1கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
2இரண்டுநாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம்.
RelatedII இராஜாக்கள் 20:5 · I கொரிந்தியர் 15:4 · ஏசாயா 26:19 · எசேக்கியேல் 37:11-13 · ஓசியா 13:14 · சங்கீதம் 30:4-5
3அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார்.
Relatedஎரேமியா 24:7 · ஓசியா 14:5 · சங்கீதம் 72:6 · நீதிமொழிகள் 2:1-5 · பிலிப்பியர் 3:13-15 · மத்தேயு 13:11
4எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது.
Relatedசங்கீதம் 78:34-37 · ஓசியா 11:8 · ஓசியா 13:3 · சங்கீதம் 106:12-13 · II பேதுரு 2:20-22 · மத்தேயு 13:21
5ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாய்மொழிகளைக்கொண்டு அவர்களை அதம்பண்ணினேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும்.
Relatedஎரேமியா 23:29 · எரேமியா 1:10 · எரேமியா 5:14 · எபிரெயர் 4:12 · வெளிப்படுத்தின விசேஷம் 2:16 · சங்கீதம் 119:120
6பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.
Relatedமத்தேயு 9:13 · மத்தேயு 12:7 · நீதிமொழிகள் 21:3 · I சாமுவேல் 15:22 · ஆமோஸ் 5:21 · பிரசங்கி 5:1
7அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணினார்கள்.
8கீலேயாத் அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம்; அது இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கிறது.
9பறிகாரரின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்குப் போகிற வழியிலே கொலைசெய்கிற ஆசாரியரின் கூட்டம் காத்திருக்கிறது; தோஷமான காரியங்களையே செய்கிறார்கள்.
10பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று.
Relatedஓசியா 5:3 · எரேமியா 23:14 · எசேக்கியேல் 23:5 · எரேமியா 5:30-31 · எரேமியா 3:6 · எரேமியா 2:12-13
11யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.
Relatedயோவேல் 3:13 · யோபு 42:10 · மீகா 4:12 · வெளிப்படுத்தின விசேஷம் 14:15 · எரேமியா 51:33 · சங்கீதம் 126:1
📖 ஓசியாAll 14 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS