சங்கீதம் 25
Tamil Bible (BSI 1957) • 22 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
2என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும்.
3உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக.
4கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.
Relatedசங்கீதம் 86:11 · சங்கீதம் 143:8 · சங்கீதம் 27:11 · சங்கீதம் 119:27 · சங்கீதம் 5:8 · யாத்திராகமம் 33:13
5உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.
Relatedநீதிமொழிகள் 8:34 · ஏசாயா 30:18 · சங்கீதம் 25:10 · சங்கீதம் 43:3-4 · யோவான் 14:26 · யோவான் 16:13
6கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவை அநாதி காலமுதல் இருக்கின்றனவே.
Relatedகொலோசெயர் 3:12 · லூக்கா 1:50 · சங்கீதம் 103:17 · லூக்கா 1:78 · II கொரிந்தியர் 1:3 · யாத்திராகமம் 34:6
7என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.
8கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.
Relatedயாக்கோபு 1:5 · எபேசியர் 1:17-18 · சங்கீதம் 32:8 · யோவான் 6:44-45 · சங்கீதம் 92:15 · மத்தேயு 9:13
9சிறுமைபட்டவர்களை நியாயத்திலே நடத்தி, சிறுமைபட்டவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.
Relatedநீதிமொழிகள் 3:5-6 · சங்கீதம் 23:3 · மத்தேயு 5:5 · யோவான் 14:6 · கலாத்தியர் 5:23 · I பேதுரு 3:15
10கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவை.
Relatedயாக்கோபு 5:11 · ரோமர் 8:28 · சங்கீதம் 40:11 · எபிரெயர் 8:8-12 · சங்கீதம் 103:17-18 · யோவான் 1:17
11கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்.
Relatedசங்கீதம் 79:9 · I யோவான் 2:12 · ஏசாயா 43:25 · சங்கீதம் 31:3 · ரோமர் 5:20-21 · எசேக்கியேல் 20:9
12கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
Relatedசங்கீதம் 37:23 · சங்கீதம் 32:8 · யோவான் 7:17 · சங்கீதம் 111:10 · பிரசங்கி 12:13 · ஏசாயா 50:10
13அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும்.
Relatedசங்கீதம் 37:11 · நீதிமொழிகள் 19:23 · நீதிமொழிகள் 1:33 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:39 · ஏசாயா 65:23 · செப்பனியா 3:17
14கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.
Relatedயோவான் 15:15 · யோவான் 14:21-23 · யோவான் 7:17 · எபேசியர் 1:9 · எபேசியர் 1:18 · I கொரிந்தியர் 2:14
15என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கின்றன; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார்.
Relatedசங்கீதம் 141:8 · சங்கீதம் 124:7-8 · சங்கீதம் 31:4 · சங்கீதம் 121:1-2 · சங்கீதம் 123:2 · எரேமியா 5:26
16என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்பட்டவனுமாய் இருக்கிறேன்.
Relatedசங்கீதம் 86:16 · மீகா 7:19 · தானியேல் 9:17 · சங்கீதம் 69:14-20 · சங்கீதம் 143:4 · சங்கீதம் 60:1
17என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கின்றன; என் இடுக்கண்களிலிருந்து என்னை நீங்கலாக்கிவிடும்.
Relatedசங்கீதம் 107:6 · சங்கீதம் 34:19 · II கொரிந்தியர் 4:8-9 · சங்கீதம் 42:7 · I கொரிந்தியர் 4:11-13 · சங்கீதம் 38:1-8
18என் சிறுமையையும் என் துன்பத்தையும் பார்த்து, என்பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.
RelatedII சாமுவேல் 16:12 · சங்கீதம் 119:132 · மத்தேயு 9:2 · புலம்பல் 5:1 · சங்கீதம் 32:1-5 · சங்கீதம் 51:8-9
19என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிர வெறுப்பாய் என்னை வெறுக்கிறார்கள்.
Relatedசங்கீதம் 27:12 · சங்கீதம் 143:3 · சங்கீதம் 140:11 · சங்கீதம் 52:2 · சங்கீதம் 3:1-2 · சங்கீதம் 86:14
20என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
Relatedசங்கீதம் 121:7 · சங்கீதம் 71:1-2 · யோவேல் 2:26-27 · சங்கீதம் 17:8 · சங்கீதம் 86:2 · சங்கீதம் 22:20-21
21உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
Relatedநீதிமொழிகள் 11:3 · சங்கீதம் 41:12 · நீதிமொழிகள் 20:7 · சங்கீதம் 26:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:16 · சங்கீதம் 26:11
22தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS