கொலோசெயர் 3
Tamil Bible (BSI 1957) • 25 verses
1நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
Relatedரோமர் 8:6 · மத்தேயு 6:33 · II கொரிந்தியர் 4:18 · கொலோசெயர் 3:2 · மத்தேயு 6:20 · சங்கீதம் 73:25-26
2பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
RelatedI யோவான் 2:15-17 · I நாளாகமம் 22:19 · கொலோசெயர் 3:1 · மத்தேயு 16:23 · ரோமர் 8:4-6 · மத்தேயு 6:19
3ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
4நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
RelatedI யோவான் 3:2 · யோவான் 11:25 · கலாத்தியர் 2:20 · I பேதுரு 1:13 · பிலிப்பியர் 3:21 · யோவான் 17:24
5ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்யிச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்.
Relatedரோமர் 8:13 · கலாத்தியர் 5:19-21 · கலாத்தியர் 5:24 · I பேதுரு 2:11 · ரோமர் 6:13 · I கொரிந்தியர் 6:9-10
6இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.
Relatedஎபேசியர் 5:6 · ரோமர் 1:18 · I பேதுரு 1:14 · எசேக்கியேல் 16:45-46 · ஏசாயா 57:4 · வெளிப்படுத்தின விசேஷம் 22:15
7நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்.
8இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
Relatedஎபேசியர் 4:29 · எபேசியர் 4:22 · யாக்கோபு 1:20-21 · எபேசியர் 5:4 · கொலோசெயர் 3:5 · எபேசியர் 4:26
9ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
Relatedஎபேசியர் 4:22 · எபேசியர் 4:25 · லேவியராகமம் 19:11 · ரோமர் 6:6 · யோவான் 8:44 · வெளிப்படுத்தின விசேஷம் 22:15
10தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.
Relatedஎபேசியர் 4:23-24 · ரோமர் 12:2 · கொலோசெயர் 3:12 · எபேசியர் 2:10 · II கொரிந்தியர் 5:17 · சங்கீதம் 51:10
11அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும், விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார்.
Relatedகலாத்தியர் 3:28-29 · I கொரிந்தியர் 12:13 · ரோமர் 10:12 · எபேசியர் 3:6 · எபேசியர் 1:23 · ரோமர் 9:24-26
12ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு;
Relatedஎபேசியர் 4:32 · எபேசியர் 4:2 · I யோவான் 4:19 · II பேதுரு 1:5-8 · கலாத்தியர் 5:22-23 · கொலோசெயர் 3:10
13ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
14இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
RelatedI பேதுரு 4:8 · எபேசியர் 5:2 · I கொரிந்தியர் 13:1-13 · கொலோசெயர் 2:2 · ரோமர் 13:8 · யோவான் 13:34
15தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள்.
Relatedயோவான் 14:27 · பிலிப்பியர் 4:6-7 · ஏசாயா 26:3 · ரோமர் 15:13 · சங்கீதம் 29:11 · I தெசலோனிக்கேயர் 5:18
16கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;
Relatedசங்கீதம் 119:11 · எபேசியர் 5:19 · யோவான் 15:7 · ரோமர் 10:17 · எரேமியா 15:16 · எபிரெயர் 4:12-13
17வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
RelatedI கொரிந்தியர் 10:31 · கொலோசெயர் 3:23 · நீதிமொழிகள் 3:6 · எபேசியர் 5:20 · I தெசலோனிக்கேயர் 5:18 · I பேதுரு 4:11
18மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.
Relatedஎபேசியர் 5:22-6:9 · தீத்து 2:4-5 · I கொரிந்தியர் 11:3 · I பேதுரு 3:1-6 · ஆதியாகமம் 3:16 · I தீமோத்தேயு 2:12
19புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.
RelatedI பேதுரு 3:7 · ஆதியாகமம் 2:23-24 · எபேசியர் 5:25 · கொலோசெயர் 3:21 · எபேசியர் 5:28-29 · எபேசியர் 5:33
20பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது.
Relatedயாத்திராகமம் 20:12 · எபேசியர் 6:1-3 · நீதிமொழிகள் 6:20 · மத்தேயு 15:4-6 · மத்தேயு 19:19 · லேவியராகமம் 19:3
21பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.
Relatedநீதிமொழிகள் 4:1-4 · எபேசியர் 6:4 · சங்கீதம் 103:13 · நீதிமொழிகள் 3:12 · எபிரெயர் 12:5-11 · I தெசலோனிக்கேயர் 2:11
22வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக்காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள்.
Relatedஎபேசியர் 6:5-7 · I தீமோத்தேயு 6:1-2 · கலாத்தியர் 1:10 · I பேதுரு 2:18-19 · தீத்து 2:9-10 · I தெசலோனிக்கேயர் 2:4
23நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,
Relatedகொலோசெயர் 3:17 · எபேசியர் 6:6-7 · ரோமர் 14:8 · II நாளாகமம் 31:21 · பிரசங்கி 9:10 · I பேதுரு 2:15
24எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.
Relatedஎபேசியர் 6:8 · கலாத்தியர் 1:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:32 · I கொரிந்தியர் 7:22 · லூக்கா 14:14 · எபிரெயர் 10:35
25அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.
📖 கொலோசெயர்All 4 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS