எசேக்கியேல் 9
Tamil Bible (BSI 1957) • 11 verses
1பின்பு அவர் என் காதுகள் கேட்க மகா சத்தமாய்; நகரத்தின் விசாரிப்புக்காரர் சங்கரிக்கும் ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டுவரக்கடவர்கள் என்று சொன்னார்.
Relatedஏசாயா 6:8 · வெளிப்படுத்தின விசேஷம் 14:7 · II இராஜாக்கள் 10:24 · எசேக்கியேல் 43:6-7 · வெளிப்படுத்தின விசேஷம் 1:10-11 · ஆமோஸ் 3:7-8
2அப்பொழுது இதோ, ஆறு புருஷர், வெட்டுகிற ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு, வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள்; அவர்களில் சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே பிரவேசித்து, வெண்கல பலிபீடத்தண்டையிலே நின்றார்கள்.
Relatedலேவியராகமம் 16:4 · எசேக்கியேல் 10:2 · எசேக்கியேல் 10:6-7 · வெளிப்படுத்தின விசேஷம் 15:6 · II இராஜாக்கள் 15:35 · எரேமியா 1:15
3அப்பொழுது இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன்மேலிருந்தெழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்து, சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷனைக் கூப்பிட்டு,
Relatedஎசேக்கியேல் 10:4 · எசேக்கியேல் 11:22-23 · எசேக்கியேல் 3:23 · எசேக்கியேல் 43:2-4 · எசேக்கியேல் 8:4
4கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 9:4 · II கொரிந்தியர் 1:22 · வெளிப்படுத்தின விசேஷம் 14:1 · வெளிப்படுத்தின விசேஷம் 7:2-3 · வெளிப்படுத்தின விசேஷம் 20:4 · II தீமோத்தேயு 2:19
5பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும்,
Relatedஎசேக்கியேல் 5:11 · எசேக்கியேல் 9:10 · எசேக்கியேல் 7:4 · எண்ணாகமம் 25:7-8 · உபாகமம் 32:39-42 · யாத்திராகமம் 32:27
6முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள், என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்கு முன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம்பண்ணினார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 9:4 · யாத்திராகமம் 12:23 · எரேமியா 25:29 · II தீமோத்தேயு 2:19 · I பேதுரு 4:17-18 · வெளிப்படுத்தின விசேஷம் 7:3
7அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, பிராகாரங்களைக் கொலையுண்டவர்களாலே நிரப்பி, புறப்பட்டுப்போங்கள் என்றார்; அவர்கள் நகரத்தில் போய் வெட்டினார்கள்.
8அவர்கள் வெட்டிக்கொண்டுபோகையில் நான் மாத்திரம் தனித்து, முகங்குப்புற விழுந்து: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் எருசலேமின்மேல் உமது உக்கிரத்தை ஊற்றுகையில் இஸ்ரவேலின் மீதியானவர்களையெல்லாம் அழிப்பீரோ என்று முறையிட்டேன்.
Relatedஎசேக்கியேல் 11:13 · I நாளாகமம் 21:16 · யோசுவா 7:6 · எசேக்கியேல் 4:14 · எண்ணாகமம் 16:45 · எண்ணாகமம் 14:5
9அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.
Relatedஎசேக்கியேல் 8:12 · யோபு 22:13 · எசேக்கியேல் 7:23 · II நாளாகமம் 36:14-16 · ஏசாயா 29:15 · மீகா 3:1-3
10ஆகையால் என் கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கஞ்செய்வதுமில்லை; அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் சிரசின்மேல் இறங்கப்பண்ணுவேன் என்றார்.
Relatedஎசேக்கியேல் 7:4 · ஏசாயா 65:6 · எசேக்கியேல் 8:18 · எசேக்கியேல் 11:21 · ஓசியா 9:7 · எசேக்கியேல் 5:11
11இதோ, சணல்நூல் அங்கி தரித்து, தன் அரையில் மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷன் வந்து: நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே செய்தேன் என்று காரியத்தைத் தெரிவித்தான்.
📖 எசேக்கியேல்All 48 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS