ஆபகூக் 1
Tamil Bible (BSI 1957) • 17 verses
1ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாய்க் கண்ட பாரம்.
2கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே!
Relatedசங்கீதம் 22:1-2 · சங்கீதம் 13:1-2 · புலம்பல் 3:8 · எரேமியா 14:9 · சங்கீதம் 94:3 · வெளிப்படுத்தின விசேஷம் 6:10
3நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு.
Relatedசங்கீதம் 55:9-11 · எரேமியா 20:8 · மீகா 7:1-4 · பிரசங்கி 5:8 · எரேமியா 9:2-6 · சங்கீதம் 120:5-6
4ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்ளுகிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது.
Relatedயோபு 21:7 · சங்கீதம் 119:126 · ஏசாயா 1:21-23 · சங்கீதம் 94:20-21 · எரேமியா 12:1 · எசேக்கியேல் 9:9
5நீங்கள் புறஜாதிகளை நோக்கிப்பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 13:40-41 · ஏசாயா 29:14 · புலம்பல் 4:12 · எரேமியா 5:12-13 · எரேமியா 9:25-26 · எரேமியா 18:18
6இதோ, நான் கல்தேயரென்னும் கொடிதும் வேகமுமான ஜாதியாரை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத வாசஸ்தலங்களைக் கட்டிக்கொள்ள தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள்.
RelatedII இராஜாக்கள் 24:2 · எரேமியா 5:15 · II நாளாகமம் 36:17 · II நாளாகமம் 36:6 · எரேமியா 25:9 · ஏசாயா 23:13
7அவர்கள் கெடியும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும்.
Relatedஎரேமியா 39:5-9 · எரேமியா 52:9-11 · உபாகமம் 5:19 · எரேமியா 52:25-27 · ஏசாயா 18:7 · உபாகமம் 5:27
8அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளிலும் வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்து வருவார்கள்.
9அவர்களெல்லாரும் கொடுமை செய்யவருவார்கள்; அவர்களுடைய முகங்கள் சுவறச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணலத்தனை ஜனங்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள்.
Relatedஎரேமியா 25:9 · எசேக்கியேல் 17:10 · ரோமர் 9:27 · எரேமியா 15:8 · ஆபகூக் 1:6 · எசேக்கியேல் 19:12
10அவர்கள் ராஜாக்களை ஆகடியம்பண்ணுவார்கள்; அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள்; அவர்கள் அரண்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள்.
RelatedII நாளாகமம் 36:6 · II நாளாகமம் 36:10 · எரேமியா 32:24 · ஏசாயா 14:16 · II இராஜாக்கள் 25:6-7 · எரேமியா 33:4
11அப்பொழுது அவனுடைய மனம்மாற, அவன் தன் பெலன் தன் தேவனாலே உண்டானதென்று சொல்லி மிஞ்சிப்போய்க் குற்றவாளியாவான்.
12கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை; கர்த்தாவே, நியாயத்தீர்ப்புச் செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.
13தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக் கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன?
Relatedசங்கீதம் 5:4-5 · சங்கீதம் 34:15-16 · எரேமியா 12:1-2 · ஆபகூக் 1:3-4 · நீதிமொழிகள் 31:8-9 · II சாமுவேல் 4:11
14மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன?
Relatedநீதிமொழிகள் 6:7
15அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக்கொள்ளுகிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் பறியிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான்.
16ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான்.
Relatedஉபாகமம் 8:17 · ஆபகூக் 1:11 · எசேக்கியேல் 28:3 · தானியேல் 4:30 · எசேக்கியேல் 29:3 · தானியேல் 5:23
17இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் ஜாதிகளை எப்போதும் கொன்றுபோடவேண்டுமோ?
Relatedஎசேக்கியேல் 25:1-17 · ஆபகூக் 1:9-10 · எரேமியா 52:1-34 · ஆபகூக் 2:17 · ஏசாயா 14:6 · ஆபகூக் 2:5-8
📖 ஆபகூக்All 3 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS