சங்கீதம் 5
Tamil Bible (BSI 1957) • 12 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும்.
RelatedI யோவான் 5:14-15 · சங்கீதம் 54:2 · சங்கீதம் 19:14 · I பேதுரு 3:12 · சங்கீதம் 55:1-2 · சங்கீதம் 64:1
2நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன்; என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
Relatedசங்கீதம் 65:2 · சங்கீதம் 3:4 · சங்கீதம் 145:1 · ஏசாயா 33:22 · சங்கீதம் 84:3 · சங்கீதம் 24:7-8
3கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
Relatedசங்கீதம் 119:147 · சங்கீதம் 88:13 · சங்கீதம் 130:6 · மாற்கு 1:35 · சங்கீதம் 55:17 · ஏசாயா 26:9
4நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.
Relatedசங்கீதம் 11:5 · எபிரெயர் 12:14 · மல்கியா 2:17 · வெளிப்படுத்தின விசேஷம் 21:27 · சங்கீதம் 50:21 · சங்கீதம் 92:15
5வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர்.
Relatedசங்கீதம் 11:5 · சங்கீதம் 1:5 · ஓசியா 9:15 · நீதிமொழிகள் 6:16-19 · லேவியராகமம் 20:23 · மத்தேயு 25:41
6பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப் பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.
Relatedசங்கீதம் 55:23 · வெளிப்படுத்தின விசேஷம் 21:8 · வெளிப்படுத்தின விசேஷம் 22:15 · ஏசாயா 26:21 · ஆதியாகமம் 34:25-26 · சங்கீதம் 4:2
7நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.
Relatedசங்கீதம் 132:7 · சங்கீதம் 138:2 · எபிரெயர் 4:16 · எபிரெயர் 12:28-29 · சங்கீதம் 69:13 · ஏசாயா 55:7
8கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
Relatedசங்கீதம் 27:11 · சங்கீதம் 25:4-5 · நீதிமொழிகள் 3:5-6 · சங்கீதம் 119:10 · சங்கீதம் 86:11 · சங்கீதம் 143:8-10
9அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி; தங்கள் நாவினால் இச்சகம் பேசுகிறார்கள்.
10தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்; அவர்கள் தங்கள் ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்; அவர்கள் துரோகங்களினுடைய திரட்சியினிமித்தம் அவர்களைத் தள்ளிவிடும்; உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்களே.
Relatedஏசாயா 63:10 · சங்கீதம் 140:9-10 · II சாமுவேல் 17:14 · I கொரிந்தியர் 3:19 · II சாமுவேல் 15:31 · சங்கீதம் 31:18
11உம்மில் அடைக்கலம் புகுவோர் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
Relatedரோமர் 8:28 · வெளிப்படுத்தின விசேஷம் 19:1-7 · சங்கீதம் 68:3 · சங்கீதம் 40:16 · I கொரிந்தியர் 2:9 · யாக்கோபு 1:12
12கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.
Relatedசங்கீதம் 84:11 · சங்கீதம் 32:10 · சங்கீதம் 115:13 · சங்கீதம் 1:1-3 · சங்கீதம் 112:1 · சங்கீதம் 32:7
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS