மத்தேயு 28
Tamil Bible (BSI 1957) • 20 verses
1ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள்.
Relatedமாற்கு 16:1-8 · யோவான் 20:1-10 · லூக்கா 23:56-24:10 · மத்தேயு 27:56 · லூக்கா 24:22 · மத்தேயு 27:61
2அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 16:26 · மாற்கு 16:3-5 · யோவான் 20:12-13 · லூக்கா 24:2-5 · யோவான் 20:1 · மத்தேயு 27:51-53
3அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்தமழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 1:10 · மாற்கு 9:3 · மாற்கு 16:5 · யோவான் 20:12 · வெளிப்படுத்தின விசேஷம் 18:1 · வெளிப்படுத்தின விசேஷம் 10:1
4காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 1:17 · தானியேல் 10:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:29 · மத்தேயு 28:11 · மத்தேயு 27:65-66 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:3-7
5தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 1:17-18 · எபிரெயர் 1:14 · ஏசாயா 41:10 · லூக்கா 1:30 · லூக்கா 24:5 · மத்தேயு 28:10
6அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்;
7சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
8அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
Relatedசங்கீதம் 2:11 · மாற்கு 16:8 · லூக்கா 24:36-41 · யோவான் 16:20 · யோவான் 20:20-21 · யோவான் 16:22
9அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப்போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரை பணிந்துகொண்டார்கள்.
Relatedமத்தேயு 28:17 · மத்தேயு 14:33 · யோவான் 20:28 · யோவான் 20:14-17 · லூக்கா 24:52 · வெளிப்படுத்தின விசேஷம் 5:11-14
10அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப்போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
11அவர்கள் போகையில், காவல்சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.
12இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைப்பண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:
Relatedமத்தேயு 27:1-2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:5-22 · மத்தேயு 26:3-4 · மத்தேயு 27:62-64 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:40 · யோவான் 11:47
13நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
Relatedமத்தேயு 26:64
14இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
15அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.
16பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
Relatedமத்தேயு 26:32 · மத்தேயு 28:10 · மத்தேயு 28:7 · மாற்கு 16:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:13-26 · I கொரிந்தியர் 15:15
17அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
Relatedசங்கீதம் 45:11 · மத்தேயு 16:28 · மத்தேயு 28:9 · சங்கீதம் 2:12 · யோவான் 5:23 · I கொரிந்தியர் 15:6
18அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
Relatedயோவான் 3:35 · I பேதுரு 3:22 · மத்தேயு 11:27 · எபேசியர் 1:20-22 · எபிரெயர் 2:8 · I கொரிந்தியர் 15:27
19ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
Relatedமாற்கு 16:15-16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38-39 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8 · லூக்கா 24:47-48 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:3-5 · ஏசாயா 49:6
20நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
📖 மத்தேயுAll 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS