எபிரெயர் 6
Tamil Bible (BSI 1957) • 20 verses
1ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,
Relatedஎபிரெயர் 5:12-14 · II கொரிந்தியர் 7:1 · எபிரெயர் 9:14 · பிலிப்பியர் 3:12-15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:20 · எபிரெயர் 12:13
2ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக.
RelatedI கொரிந்தியர் 15:13-57 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:31-32 · ரோமர் 6:3-5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:6 · எசேக்கியேல் 37:1-14 · எபிரெயர் 9:10
3தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம்.
RelatedI கொரிந்தியர் 16:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:21 · I கொரிந்தியர் 4:19 · யாக்கோபு 4:15 · ரோமர் 15:32
4ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும்,
Relatedஎபிரெயர் 10:26-29 · II பேதுரு 2:20-22 · மத்தேயு 5:13 · யோவான் 15:6 · மத்தேயு 7:21-22 · எபிரெயர் 12:15-17
5தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும்,
RelatedI பேதுரு 2:3 · லூக்கா 8:13 · மத்தேயு 13:20-21 · II பேதுரு 2:20 · மாற்கு 4:16-17 · எபிரெயர் 2:5
6மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்.
RelatedII பேதுரு 2:21 · எபிரெயர் 10:29 · எபிரெயர் 6:4 · I யோவான் 5:16 · ஏசாயா 1:28 · II தீமோத்தேயு 2:25
7எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரைமுளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.
Relatedஓசியா 10:12 · ஏசாயா 44:3 · ஏசாயா 55:10-13 · சங்கீதம் 65:9-13 · யோவேல் 2:21-26 · சங்கீதம் 126:6
8முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.
Relatedயோவான் 15:6 · ஆதியாகமம் 3:17-18 · லூக்கா 13:7-9 · உபாகமம் 29:28 · ஏசாயா 5:1-7 · எரேமியா 44:22
9பிரியமானவர்களே, நாங்கள் இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்புக்குரியவைகளுமான காரியங்கள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம்.
Relatedஎபிரெயர் 10:39 · எபிரெயர் 2:3 · கலாத்தியர் 5:22-23 · எபிரெயர் 6:4-6 · II கொரிந்தியர் 7:10 · மத்தேயு 5:3-12
10ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.
Relatedஎபிரெயர் 13:16 · மத்தேயு 10:42 · கலாத்தியர் 6:10 · I தெசலோனிக்கேயர் 1:3 · கொலோசெயர் 3:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:4
11நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து,
RelatedII பேதுரு 1:5-8 · எபிரெயர் 3:6 · ரோமர் 5:2-5 · எபிரெயர் 3:14 · II பேதுரு 1:10 · எபிரெயர் 10:22
12உங்களுக்கு நம்பிக்கையின் பூரணநிச்சயமுண்டாகும்படி நீங்கள்யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.
13ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு:
Relatedஆதியாகமம் 22:15-18 · சங்கீதம் 105:9-10 · லூக்கா 1:73 · ஏசாயா 45:23 · மீகா 7:20 · எபிரெயர் 6:16-18
14நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
Relatedஆதியாகமம் 22:17 · உபாகமம் 1:10 · நெகேமியா 9:23 · யாத்திராகமம் 32:13 · ஆதியாகமம் 17:2 · ஆதியாகமம் 48:4
15அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான்.
Relatedஆதியாகமம் 12:2-3 · ரோமர் 4:17-25 · ஆதியாகமம் 15:2-6 · ஆதியாகமம் 21:2-7 · எபிரெயர் 6:12 · ஆதியாகமம் 17:16-17
16மனுஷர் தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு.
Relatedயாத்திராகமம் 22:11 · எபிரெயர் 6:13 · எசேக்கியேல் 17:16-20 · ஆதியாகமம் 21:30-31 · ஆதியாகமம் 14:22 · ஆதியாகமம் 31:53
17அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார்.
Relatedஎபிரெயர் 6:18 · நீதிமொழிகள் 19:21 · ஏசாயா 55:11 · ஏசாயா 14:24 · சங்கீதம் 110:4 · எபிரெயர் 11:9
18நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப்பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.
Relatedஎண்ணாகமம் 23:19 · தீத்து 1:2 · I சாமுவேல் 15:29 · II தீமோத்தேயு 2:13 · ரோமர் 3:4 · சங்கீதம் 46:1
19அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப்போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.
Relatedசங்கீதம் 43:5 · ரோமர் 5:5-10 · ரோமர் 8:28-39 · எபிரெயர் 9:7 · லேவியராகமம் 16:2 · லேவியராகமம் 16:15
20நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.
📖 எபிரெயர்All 13 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS