லூக்கா 18
Tamil Bible (BSI 1957) • 43 verses
1சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
Relatedகொலோசெயர் 4:2 · ரோமர் 12:12 · I தெசலோனிக்கேயர் 5:17 · பிலிப்பியர் 4:6 · எபேசியர் 6:18 · சங்கீதம் 55:16-17
2ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.
Relatedலூக்கா 18:4 · நீதிமொழிகள் 29:7 · சங்கீதம் 8:1-4 · எசேக்கியேல் 22:6-8 · எரேமியா 22:16-17 · ரோமர் 3:14-18
3அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.
4வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,
5இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
Relatedலூக்கா 11:8 · லூக்கா 18:39 · நியாயாதிபதிகள் 16:16 · மாற்கு 10:47-48 · மத்தேயு 15:23 · II சாமுவேல் 13:24-27
6பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
Relatedலூக்கா 7:13
7அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
RelatedII பேதுரு 3:9 · எபிரெயர் 10:35-37 · லூக்கா 11:13 · I தீமோத்தேயு 5:5 · எரேமியா 20:11-13 · II தெசலோனிக்கேயர் 1:6
8சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
Relatedஎபிரெயர் 10:23-26 · II பேதுரு 3:8-9 · மத்தேயு 24:9-13 · சங்கீதம் 46:5 · லூக்கா 17:26-30 · I தெசலோனிக்கேயர் 5:1-3
9அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
10இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
Relatedமத்தேயு 21:31-32 · II இராஜாக்கள் 20:5 · I இராஜாக்கள் 8:30 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:1 · II இராஜாக்கள் 20:8 · லூக்கா 1:9-10
11பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
Relatedமத்தேயு 6:5 · வெளிப்படுத்தின விசேஷம் 3:17 · ஏசாயா 65:5 · எரேமியா 2:35 · மாற்கு 11:25 · யாக்கோபு 2:9-12
12வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
Relatedலூக்கா 11:42 · மத்தேயு 23:23-24 · லூக்கா 17:10 · மத்தேயு 9:14 · மல்கியா 3:8 · லேவியராகமம் 27:30-33
13ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
Relatedஎஸ்றா 9:6 · I யோவான் 1:8-10 · I தீமோத்தேயு 1:15 · சங்கீதம் 41:4 · எபிரெயர் 8:12 · லூக்கா 7:6-7
14அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
Relatedலூக்கா 14:11 · லூக்கா 16:15 · மத்தேயு 23:12 · யாக்கோபு 4:10 · நீதிமொழிகள் 29:23 · யாக்கோபு 4:6
15பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
16இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
Relatedமத்தேயு 18:3-4 · I கொரிந்தியர் 14:20 · I கொரிந்தியர் 7:14 · உபாகமம் 31:12 · I பேதுரு 2:2 · ஆதியாகமம் 21:4
17எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
18அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
Relatedமாற்கு 10:17-31 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:30 · மத்தேயு 19:16-30 · லூக்கா 10:25-28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:37 · எசேக்கியேல் 33:31
19அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
20விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.
Relatedயாத்திராகமம் 20:12-17 · உபாகமம் 5:16-21 · ரோமர் 13:9 · மத்தேயு 19:17-19 · ரோமர் 7:7-11 · ஏசாயா 8:20
21அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
Relatedபிலிப்பியர் 3:6 · மத்தேயு 19:20-21 · மாற்கு 10:20-21 · லூக்கா 18:11-12 · லூக்கா 15:7 · லூக்கா 15:29
22இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
Relatedலூக்கா 12:33 · I தீமோத்தேயு 6:18-19 · மத்தேயு 19:21 · மத்தேயு 6:19-20 · லூக்கா 16:9 · லூக்கா 10:42
23அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
Relatedஎசேக்கியேல் 33:31 · I யோவான் 2:15 · லூக்கா 21:34 · மத்தேயு 19:22 · யோபு 31:24-25 · மாற்கு 10:22
24அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.
Relatedநீதிமொழிகள் 11:28 · நீதிமொழிகள் 30:9 · மாற்கு 10:23-27 · யாக்கோபு 2:5-7 · சங்கீதம் 10:3 · I தீமோத்தேயு 6:9-10
25ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
Relatedமத்தேயு 23:24
26அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
Relatedலூக்கா 13:23
27அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
28அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.
29அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,
30இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Relatedயோபு 42:10 · எபிரெயர் 13:5-6 · வெளிப்படுத்தின விசேஷம் 2:17 · லூக்கா 12:31-32 · மத்தேயு 12:32 · ரோமர் 6:21-23
31பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.
Relatedமத்தேயு 20:17-19 · ஏசாயா 53:1-12 · மாற்கு 10:32-34 · சங்கீதம் 22:1-31 · லூக்கா 24:44-46 · மத்தேயு 16:21
32எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.
Relatedலூக்கா 23:11 · ஏசாயா 50:6 · ஏசாயா 53:3 · மாற்கு 14:65 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:13 · மத்தேயு 26:67
33அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
34இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
35பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
Relatedமத்தேயு 20:29-34 · லூக்கா 16:20-21 · யோவான் 9:8 · மாற்கு 10:46-52 · I சாமுவேல் 2:8 · லூக்கா 19:1
36ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.
37நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
38முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
39இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
Relatedஆதியாகமம் 32:26-28 · சங்கீதம் 141:1 · லூக்கா 11:8-10 · மத்தேயு 26:40-44 · லூக்கா 18:15 · II கொரிந்தியர் 12:8
40அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:
41நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
42இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
43உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.
📖 லூக்காAll 24 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS