யோபு 17
Tamil Bible (BSI 1957) • 16 verses
1என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது.
2பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது.
3தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்?
Relatedநீதிமொழிகள் 11:15 · ஏசாயா 38:14 · எபிரெயர் 7:22 · சங்கீதம் 119:122 · ஆதியாகமம் 43:9 · ஆதியாகமம் 44:32
4நீர் அவர்கள் இருதயத்துக்கு ஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர்.
Relatedமத்தேயு 11:25 · மத்தேயு 13:11 · II சாமுவேல் 17:14 · I கொரிந்தியர் 1:20 · ஏசாயா 19:14 · ரோமர் 11:8
5எவன் தன் சிநேகிதருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவன் பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும்.
Relatedசங்கீதம் 12:2-3 · நீதிமொழிகள் 20:19 · நீதிமொழிகள் 29:5 · யாத்திராகமம் 20:5 · I இராஜாக்கள் 11:12 · யோபு 11:20
6ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன்.
7இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது.
Relatedயோபு 16:16 · சங்கீதம் 6:7 · சங்கீதம் 31:9-10 · புலம்பல் 5:17 · சங்கீதம் 109:23 · பிரசங்கி 6:12
8சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான்.
9நீதிமான் தன்வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான்.
Relatedநீதிமொழிகள் 4:18 · ஏசாயா 1:15-16 · யோபு 22:30 · நீதிமொழிகள் 14:16 · II கொரிந்தியர் 12:9-10 · சங்கீதம் 84:7
10இப்போதும் நீங்கள் எல்லாரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன்.
11என் நாட்கள் போயிற்று; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று.
12அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று எண்ணச்செய்தது.
13அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன்.
14அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன்.
Relatedசங்கீதம் 16:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:27-31 · I கொரிந்தியர் 15:42 · சங்கீதம் 49:9 · யோபு 24:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:34-37
15என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்?
16அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.
Relatedயோபு 3:17-19 · யோனா 2:6 · சங்கீதம் 88:4-8 · எசேக்கியேல் 37:11 · ஏசாயா 38:17-18 · II கொரிந்தியர் 1:9
📖 யோபுAll 42 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS