கலாத்தியர் 1
Tamil Bible (BSI 1957) • 24 verses
1மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும்,
Relatedகலாத்தியர் 1:11-12 · I கொரிந்தியர் 1:1 · ரோமர் 1:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15-16 · வெளிப்படுத்தின விசேஷம் 1:5 · எபேசியர் 3:8
2என்னுடனேகூட இருக்கிற சகோதரரெல்லாரும், கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது:
Relatedபிலிப்பியர் 4:21 · I கொரிந்தியர் 16:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:5-6 · பிலிப்பியர் 2:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:31
3பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக;
RelatedII யோவான் 1:3 · II கொரிந்தியர் 13:14 · ரோமர் 1:7-15 · I கொரிந்தியர் 1:3 · பிலிப்பியர் 1:2 · II தெசலோனிக்கேயர் 1:2
4அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்;
Relatedமத்தேயு 20:28 · ரோமர் 4:25 · கலாத்தியர் 2:20 · I யோவான் 5:19-20 · I யோவான் 2:15-17 · I பேதுரு 2:24
5அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
6உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;
RelatedII கொரிந்தியர் 11:4 · கலாத்தியர் 5:7-8 · ஏசாயா 29:13 · சங்கீதம் 106:13 · கலாத்தியர் 3:1-5 · I தீமோத்தேயு 1:3
7வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:24 · ரோமர் 16:17-18 · கலாத்தியர் 5:10 · II கொரிந்தியர் 11:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:1-5 · I யோவான் 4:1
8நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
RelatedII கொரிந்தியர் 11:13-14 · கலாத்தியர் 1:9 · வெளிப்படுத்தின விசேஷம் 22:18-19 · I கொரிந்தியர் 16:22 · ரோமர் 9:3 · மத்தேயு 25:41
9முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
Relatedரோமர் 16:17 · நீதிமொழிகள் 30:6 · உபாகமம் 4:2 · வெளிப்படுத்தின விசேஷம் 22:18-19 · உபாகமம் 12:32-13:11 · II கொரிந்தியர் 1:17
10இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
RelatedI தெசலோனிக்கேயர் 2:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:29 · எபேசியர் 6:6 · யாக்கோபு 4:4 · மத்தேயு 22:16 · கொலோசெயர் 3:22
11மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
Relatedகலாத்தியர் 1:1 · எபேசியர் 3:3-8 · I கொரிந்தியர் 2:9-10 · I கொரிந்தியர் 11:23 · I கொரிந்தியர் 15:1-3 · ரோமர் 2:16
12நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
Relatedகலாத்தியர் 1:16 · I கொரிந்தியர் 2:10 · கலாத்தியர் 1:1 · II கொரிந்தியர் 12:1 · I கொரிந்தியர் 11:23
13நான் யூதமார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடக்கையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி;
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 8:3 · I கொரிந்தியர் 15:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3-5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:4-5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:26 · I தீமோத்தேயு 1:13
14என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.
Relatedகொலோசெயர் 2:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:5 · பிலிப்பியர் 3:4-6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3 · மத்தேயு 15:6 · I பேதுரு 1:8
15அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,
Relatedஎரேமியா 1:5 · ஏசாயா 49:5 · ஏசாயா 49:1 · II தீமோத்தேயு 1:9 · எபேசியர் 1:5 · II தெசலோனிக்கேயர் 2:13-14
16தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும் பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்;
Relatedமத்தேயு 16:17 · எபேசியர் 3:5-10 · எபேசியர் 1:17-18 · ரோமர் 15:16-19 · I கொரிந்தியர் 2:9-13 · லூக்கா 9:59-62
17எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.
18மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:22-23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:17-18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:26-29
19கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை.
20நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன்.
21பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 15:41 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:30 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:25-26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:1
22மேலும் யூதேயா தேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன்.
RelatedI தெசலோனிக்கேயர் 2:14 · ரோமர் 16:7 · I தெசலோனிக்கேயர் 1:1 · பிலிப்பியர் 1:1 · II தெசலோனிக்கேயர் 1:1 · I கொரிந்தியர் 1:30
23முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதை மாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து,
RelatedI கொரிந்தியர் 15:8-10 · I தீமோத்தேயு 1:13-16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:7
24என்னைப்பற்றி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
📖 கலாத்தியர்All 6 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS