II நாளாகமம் 12
Tamil Bible (BSI 1957) • 16 verses
1ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலர் அனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள்.
RelatedII நாளாகமம் 11:17 · II நாளாகமம் 12:13 · II நாளாகமம் 26:13-16 · I இராஜாக்கள் 14:22-24 · எரேமியா 2:31 · மீகா 6:16
2அவர்கள் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியினால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதினாயிரம் குதிரைவீரரோடும் எருசலேமுக்கு விரோதமாய் வந்தான்;
RelatedI இராஜாக்கள் 11:40 · II நாளாகமம் 7:19-20 · சங்கீதம் 106:43-44 · I நாளாகமம் 28:9 · எரேமியா 44:22-23 · புலம்பல் 5:15
3அவனோடேகூட எகிப்திலிருந்து வந்த லூபியர், சூக்கியர், எத்தியோப்பியரான ஜனங்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்களாயிருந்தார்கள்.
Relatedநாகூம் 3:9 · II நாளாகமம் 16:8 · தானியேல் 11:43 · வெளிப்படுத்தின விசேஷம் 9:16 · I சாமுவேல் 13:5 · II நாளாகமம் 14:9
4அவன் யூதாவுக்கு அடுத்த அரணான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம் மட்டும் வந்தான்.
RelatedII நாளாகமம் 11:5-12 · ஏசாயா 8:8 · ஏசாயா 36:1 · II இராஜாக்கள் 18:17 · ஏசாயா 10:11 · எரேமியா 5:10
5அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்துக்கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்துக்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழும்படி விட்டுவிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
RelatedII நாளாகமம் 11:2 · II நாளாகமம் 15:2 · I இராஜாக்கள் 12:22 · எரேமியா 4:18 · எரேமியா 23:33 · எரேமியா 5:19
6அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்தி: கர்த்தர் நீதியுள்ளவர் என்றார்கள்.
Relatedயாத்திராகமம் 9:27 · தானியேல் 9:14 · நியாயாதிபதிகள் 1:7 · யாத்திராகமம் 10:3 · ரோமர் 10:3 · லூக்கா 18:14
7அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக்கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன்.
RelatedII நாளாகமம் 34:25 · ஏசாயா 42:25 · I இராஜாக்கள் 21:28-29 · எரேமியா 3:13 · II நாளாகமம் 34:21 · லேவியராகமம் 26:41-42
8ஆனாலும் என்னைச் சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களைச் சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனைச் சேவிக்கிறவர்களாவார்கள் என்றார்.
Relatedஉபாகமம் 28:47-48 · ஏசாயா 26:13 · நியாயாதிபதிகள் 3:1 · ஓசியா 8:10 · எரேமியா 10:24 · நெகேமியா 9:36
9அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
RelatedI இராஜாக்கள் 10:16-17 · II நாளாகமம் 9:15-16 · I இராஜாக்கள் 14:25-28 · II இராஜாக்கள் 16:8 · II இராஜாக்கள் 18:15-16 · புலம்பல் 1:10
10அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான்.
RelatedI நாளாகமம் 11:25 · புலம்பல் 4:1 · II சாமுவேல் 23:23 · II சாமுவேல் 8:18 · உன்னதப்பாட்டு 3:7-8 · I இராஜாக்கள் 14:27
11ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
12அவன் தன்னைத் தாழ்த்தினபடியினால், கர்த்தர் அவனை முழுதும் அழிக்காதபடிக்கு அவருடைய கோபம் அவனை விட்டுத் திரும்பிற்று; யூதாவிலே இன்னும் சில காரியங்கள் சீராயிருந்தது.
RelatedII நாளாகமம் 19:3 · I இராஜாக்கள் 14:13 · புலம்பல் 3:22 · II நாளாகமம் 12:6-7 · II நாளாகமம் 33:12-13 · புலம்பல் 3:42
13அப்படியே ராஜாவாகிய ரெகொபெயாம் எருசலேமிலே தன்னைத் திடப்படுத்திக்கொண்டு அரசாண்டான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின் பேர் நாமாள்.
RelatedI இராஜாக்கள் 14:21 · உபாகமம் 12:5 · II நாளாகமம் 6:6 · I இராஜாக்கள் 11:1 · உபாகமம் 23:3 · யாத்திராகமம் 20:24
14அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான்.
RelatedII நாளாகமம் 19:3 · I கொரிந்தியர் 15:58 · I கொரிந்தியர் 16:13 · எசேக்கியேல் 33:31 · ஏசாயா 55:6-7 · ஏசாயா 45:19
15ரெகொபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
RelatedII நாளாகமம் 9:29 · II நாளாகமம் 12:5 · II நாளாகமம் 13:22 · I இராஜாக்கள் 12:22 · I இராஜாக்கள் 14:29-30
16ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம் பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய அபியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
📖 II நாளாகமம்All 36 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS