சங்கீதம் 10
Tamil Bible (BSI 1957) • 18 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? துன்பம் நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
Relatedசங்கீதம் 22:1 · சங்கீதம் 27:9 · சங்கீதம் 13:1-3 · சங்கீதம் 46:1 · எரேமியா 14:8 · சங்கீதம் 44:24
2துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
Relatedசங்கீதம் 59:12 · சங்கீதம் 36:11 · சங்கீதம் 7:16 · நீதிமொழிகள் 5:22 · சங்கீதம் 31:18 · சங்கீதம் 119:122
3துன்மார்க்கன் தன் உள்ளத்தின் இச்சையில் பெருமை பாராட்டுகிறான், பொருளை அபகரிக்கிறவன் கர்த்தரைச் சபித்து அசட்டைபண்ணுகிறான்.
Relatedசங்கீதம் 94:4 · லூக்கா 12:19 · சகரியா 11:5-8 · மீகா 6:10-12 · சங்கீதம் 49:11-13 · சங்கீதம் 35:21
4துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே.
Relatedசங்கீதம் 14:1-2 · ரோமர் 1:28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:22 · ஆதியாகமம் 6:5 · உபாகமம் 8:14 · ரோமர் 1:21
5அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கின்றன; தன் எதிராளிகள் எல்லார்மேலும் சீறுகிறான்.
6"நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை" என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
Relatedபிரசங்கி 8:11 · ஏசாயா 56:12 · மத்தேயு 24:48 · சங்கீதம் 11:1 · சங்கீதம் 15:5 · I தெசலோனிக்கேயர் 5:3
7அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
Relatedசங்கீதம் 7:14 · சங்கீதம் 140:9 · சங்கீதம் 64:3 · சங்கீதம் 140:3 · சங்கீதம் 59:12 · யாக்கோபு 3:6-8
8கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கின்றன.
Relatedஆபகூக் 3:14 · எரேமியா 22:17 · I சாமுவேல் 22:18 · சங்கீதம் 17:11 · நீதிமொழிகள் 6:12-13 · I சாமுவேல் 23:23
9தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, அவனைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.
10திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான்.
11" தேவன் அதை மறந்தார் என்று, அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார்" என்றும், தன் இருதயத்திலே சொல்லிகொள்ளுகிறான்.
Relatedஎசேக்கியேல் 8:12 · சங்கீதம் 94:7 · சங்கீதம் 10:6 · சங்கீதம் 73:11 · பிரசங்கி 8:11 · சங்கீதம் 64:5
12கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; சிறுமைப்பட்டவர்களை மறவாதேயும்.
13துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி, "நீர் கேட்டு விசாரிப்பதில்லை" என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்?
Relatedலூக்கா 10:16 · II சாமுவேல் 12:9-10 · I தெசலோனிக்கேயர் 4:8 · எண்ணாகமம் 11:20 · சங்கீதம் 74:18 · II நாளாகமம் 24:22
14அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.
15துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய துன்மார்கம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.
Relatedசங்கீதம் 37:17 · யோபு 38:15 · செப்பனியா 1:12 · சங்கீதம் 7:9 · எசேக்கியேல் 30:21-22 · எரேமியா 2:34
16கர்த்தர் சதாகாலங்களுக்கும் இராஜாவாயிருக்கிறார்; புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள்.
Relatedசங்கீதம் 29:10 · எரேமியா 10:10 · I தீமோத்தேயு 1:17 · தானியேல் 6:26 · உபாகமம் 8:20 · சங்கீதம் 145:13
17கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.
Relatedசங்கீதம் 145:19 · II நாளாகமம் 34:27 · சங்கீதம் 34:15 · I பேதுரு 3:12 · ஏசாயா 65:24 · சங்கீதம் 37:4
18மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.
Relatedசங்கீதம் 9:9 · சங்கீதம் 82:3 · ஏசாயா 11:4 · லூக்கா 18:7-8 · சங்கீதம் 17:14 · I கொரிந்தியர் 15:47-48
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS