நீதிமொழிகள் 13
Tamil Bible (BSI 1957) • 25 verses
1ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான்.
Relatedநீதிமொழிகள் 15:5 · நீதிமொழிகள் 9:7-8 · நீதிமொழிகள் 15:20 · நீதிமொழிகள் 4:1-14 · நீதிமொழிகள் 10:1 · I சாமுவேல் 2:25
2மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும்.
Relatedநீதிமொழிகள் 12:14 · நீதிமொழிகள் 18:20 · நீதிமொழிகள் 10:11 · சங்கீதம் 140:11 · நீதிமொழிகள் 1:31 · சங்கீதம் 75:8
3தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான்.
Relatedநீதிமொழிகள் 21:23 · நீதிமொழிகள் 18:21 · நீதிமொழிகள் 18:7 · யாக்கோபு 3:2-12 · சங்கீதம் 39:1 · மத்தேயு 12:36-37
4சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும்;
Relatedநீதிமொழிகள் 12:24 · நீதிமொழிகள் 12:11 · II பேதுரு 1:5-11 · நீதிமொழிகள் 10:4 · நீதிமொழிகள் 2:2-9 · நீதிமொழிகள் 11:25
5நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான்.
Relatedகொலோசெயர் 3:9 · சங்கீதம் 119:163 · எபேசியர் 4:25 · எசேக்கியேல் 20:43 · எசேக்கியேல் 36:31 · வெளிப்படுத்தின விசேஷம் 21:8
6நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும்.
Relatedநீதிமொழிகள் 11:3 · நீதிமொழிகள் 11:5-6 · சங்கீதம் 140:11 · சங்கீதம் 26:1 · சங்கீதம் 25:21 · நீதிமொழிகள் 21:12
7ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டு; மிகுந்த செல்வமிருக்கத் தன்னைத் தரித்திரனாகப் பாராட்டுகிறவனும் உண்டு.
Relatedலூக்கா 18:11-14 · வெளிப்படுத்தின விசேஷம் 3:17 · நீதிமொழிகள் 11:24 · நீதிமொழிகள் 12:9 · நீதிமொழிகள் 13:11 · II கொரிந்தியர் 4:7
8மனுஷனுடைய ஐசுவரியம் அவன் பிராணனை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேளாதிருக்கிறான்.
Relatedமத்தேயு 16:26 · I பேதுரு 1:18-19 · சங்கீதம் 49:6-10 · II இராஜாக்கள் 24:14 · செப்பனியா 3:12 · யோபு 2:4
9நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோகும்.
Relatedநீதிமொழிகள் 24:20 · நீதிமொழிகள் 4:18 · நீதிமொழிகள் 20:20 · சங்கீதம் 112:4 · சங்கீதம் 97:11 · மத்தேயு 25:8
10அகந்தையினால் மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.
Relatedநீதிமொழிகள் 19:20 · நீதிமொழிகள் 12:15-16 · I தீமோத்தேயு 6:4 · நீதிமொழிகள் 17:14 · யாக்கோபு 4:1 · லூக்கா 22:24
11வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோகும்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.
Relatedநீதிமொழிகள் 20:21 · நீதிமொழிகள் 10:2 · யாக்கோபு 5:1-5 · நீதிமொழிகள் 28:8 · நீதிமொழிகள் 27:23-27 · யோபு 27:16-17
12நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
Relatedயோவான் 16:22 · நீதிமொழிகள் 13:19 · சங்கீதம் 119:81-83 · நீதிமொழிகள் 11:30 · சங்கீதம் 17:15 · நீதிமொழிகள் 3:18
13திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான்.
Relatedஎண்ணாகமம் 15:31 · II நாளாகமம் 36:16 · II யோவான் 1:8 · சங்கீதம் 119:165 · எசேக்கியேல் 20:16 · சங்கீதம் 19:11
14ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
Relatedநீதிமொழிகள் 10:11 · நீதிமொழிகள் 14:27 · சங்கீதம் 18:5 · II சாமுவேல் 22:6-7 · சங்கீதம் 116:3 · நீதிமொழிகள் 16:6
15நற்புத்தி தயையை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது.
Relatedஎரேமியா 2:19 · நீதிமொழிகள் 4:19 · நீதிமொழிகள் 15:10 · ரோமர் 6:21 · நீதிமொழிகள் 3:4 · சங்கீதம் 95:9-11
16விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.
Relatedநீதிமொழிகள் 15:2 · எபேசியர் 5:17 · நீதிமொழிகள் 12:22-23 · பிரசங்கி 10:3 · ஏசாயா 52:13 · ரோமர் 16:19
17துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்; உண்மையுள்ள ஸ்தானாபதியோ ஒளஷதம்.
Relatedநீதிமொழிகள் 25:13 · எசேக்கியேல் 33:7-8 · II கொரிந்தியர் 5:20 · I கொரிந்தியர் 4:2 · I தீமோத்தேயு 1:12 · II தீமோத்தேயு 2:2
18புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்து கொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான்.
Relatedநீதிமொழிகள் 15:5 · நீதிமொழிகள் 15:31-32 · நீதிமொழிகள் 25:12 · நீதிமொழிகள் 12:1 · நீதிமொழிகள் 13:13 · நீதிமொழிகள் 5:9-14
19வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு.
Relatedநீதிமொழிகள் 13:12 · வெளிப்படுத்தின விசேஷம் 7:14-17 · நீதிமொழிகள் 29:27 · II தீமோத்தேயு 2:19 · நீதிமொழிகள் 16:17 · சங்கீதம் 34:14
20ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்.
RelatedI கொரிந்தியர் 15:33-34 · நீதிமொழிகள் 15:31 · நீதிமொழிகள் 9:6 · II கொரிந்தியர் 6:14-18 · சங்கீதம் 119:63 · வெளிப்படுத்தின விசேஷம் 18:4
21பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும்.
Relatedசங்கீதம் 32:10 · ஏசாயா 3:10-11 · ரோமர் 2:7-10 · நீதிமொழிகள் 13:13 · ஆதியாகமம் 4:7 · சங்கீதம் 140:11
22நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும்.
Relatedபிரசங்கி 2:26 · யோபு 27:16-17 · நீதிமொழிகள் 28:8 · சங்கீதம் 37:25 · சங்கீதம் 112:2 · ஆதியாகமம் 17:7-8
23ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்; நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு.
Relatedநீதிமொழிகள் 12:11 · நீதிமொழிகள் 28:19 · பிரசங்கி 5:9 · பிரசங்கி 8:5-6 · சங்கீதம் 112:5 · நீதிமொழிகள் 27:18
24பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான்.
Relatedநீதிமொழிகள் 29:17 · நீதிமொழிகள் 23:13-14 · நீதிமொழிகள் 29:15 · நீதிமொழிகள் 19:18 · எபிரெயர் 12:6-8 · நீதிமொழிகள் 22:15
25நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்; துன்மார்க்கருடைய வயிறோ பசித்திருக்கும்.
Relatedசங்கீதம் 34:10 · நீதிமொழிகள் 10:3 · எபிரெயர் 13:5 · I தீமோத்தேயு 4:8 · நீதிமொழிகள் 6:11 · உபாகமம் 32:24
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS