I தெசலோனிக்கேயர் 2
Tamil Bible (BSI 1957) • 20 verses
1சகோதரரே, நாங்கள் உங்களிடத்தில் பிரவேசித்தது வீணாயிருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள்.
RelatedII தெசலோனிக்கேயர் 3:1 · I கொரிந்தியர் 15:2 · ஆபகூக் 2:13 · I தெசலோனிக்கேயர் 2:13 · பிலிப்பியர் 2:16 · I கொரிந்தியர் 15:58
2உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிபட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 16:22-24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:13 · II தீமோத்தேயு 1:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:2-9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:37 · எபிரெயர் 12:2-3
3எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை.
RelatedII கொரிந்தியர் 2:17 · II கொரிந்தியர் 4:2 · I தெசலோனிக்கேயர் 4:7 · I தெசலோனிக்கேயர் 2:5-6 · II கொரிந்தியர் 12:16-18 · II கொரிந்தியர் 7:2
4சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.
Relatedகலாத்தியர் 1:10 · ரோமர் 8:27 · கலாத்தியர் 2:7 · சங்கீதம் 17:3 · II தீமோத்தேயு 1:14 · II கொரிந்தியர் 4:2
5உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி.
Relatedரோமர் 1:9 · II கொரிந்தியர் 12:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:33 · கலாத்தியர் 1:20 · II பேதுரு 2:3 · தீத்து 1:7
6நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக்கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது,. மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை.
Relatedகலாத்தியர் 1:10 · யோவான் 5:44 · யோவான் 5:41 · பிலேமோன் 1:8-9 · I தெசலோனிக்கேயர் 2:9 · II கொரிந்தியர் 13:10
7உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,
Relatedஏசாயா 66:13 · II தீமோத்தேயு 2:24-25 · I தெசலோனிக்கேயர் 2:11 · ஏசாயா 49:23 · கலாத்தியர் 5:22-23 · II கொரிந்தியர் 10:1
8நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.
RelatedI யோவான் 3:16 · II கொரிந்தியர் 12:15 · பிலிப்பியர் 2:17 · ரோமர் 1:11-12 · கலாத்தியர் 4:19 · எபிரெயர் 13:17
9சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்.
RelatedII தெசலோனிக்கேயர் 3:7-9 · II கொரிந்தியர் 11:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:3 · II கொரிந்தியர் 12:13-14 · I தீமோத்தேயு 5:5 · I கொரிந்தியர் 9:6-7
10விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி.
RelatedI பேதுரு 5:3 · II கொரிந்தியர் 1:12 · I தெசலோனிக்கேயர் 1:5 · தீத்து 2:7-8 · II தீமோத்தேயு 3:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:18
11மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று,
RelatedI கொரிந்தியர் 4:14-15 · எபிரெயர் 13:22 · I தீமோத்தேயு 5:21 · II தெசலோனிக்கேயர் 3:12 · II தீமோத்தேயு 4:1-2 · I நாளாகமம் 28:20
12தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள்.
Relatedஎபேசியர் 4:1 · I யோவான் 2:6 · I யோவான் 1:6-7 · II தெசலோனிக்கேயர் 2:13-14 · I தெசலோனிக்கேயர் 4:12 · I பேதுரு 5:10
13ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர்வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது.
14எப்படியெனில், சகோதரரே, யூதேயாதேசத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதராலே எப்படிப் பாடுபட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்கள் சுய ஜனங்களாலே பாடுபட்டீர்கள்.
RelatedI தெசலோனிக்கேயர் 3:4 · எபிரெயர் 10:33-34 · எபிரெயர் 5:7-8 · II தெசலோனிக்கேயர் 1:4 · II கொரிந்தியர் 8:1-2 · கலாத்தியர் 1:22
15அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து,
Relatedமத்தேயு 5:12 · லூக்கா 11:48-53 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:52 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:23 · லூக்கா 13:33-34 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:15
16புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள்; இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 17:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:5 · மாற்கு 16:16 · மல்கியா 4:1 · மத்தேயு 23:32
17சகோதரரே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சக்காலம் உங்களைவிட்டுப் பிரிந்திருந்தபடியினாலே, உங்கள் முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடே அதிகமாய்ப் பிரயத்தனம்பண்ணினோம்.
Relatedகொலோசெயர் 2:5 · I கொரிந்தியர் 5:3 · I தெசலோனிக்கேயர் 3:6 · ரோமர் 1:13 · I தெசலோனிக்கேயர் 3:10-11 · II சாமுவேல் 13:39
18ஆகையால், நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.
Relatedரோமர் 15:22 · ரோமர் 1:13 · வெளிப்படுத்தின விசேஷம் 2:10 · சகரியா 3:1-2 · II கொரிந்தியர் 11:12-14 · யோபு 33:14
19எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;
Relatedபிலிப்பியர் 4:1 · I தெசலோனிக்கேயர் 3:13 · I தெசலோனிக்கேயர் 5:23 · பிலிப்பியர் 2:16 · II கொரிந்தியர் 1:14 · மத்தேயு 16:27
20நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.
📖 I தெசலோனிக்கேயர்All 5 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS