மத்தேயு 8
Tamil Bible (BSI 1957) • 34 verses
1அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்.
2அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான்.
Relatedமாற்கு 1:40-45 · மத்தேயு 18:26 · மத்தேயு 15:25 · லூக்கா 17:12-19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:25 · லேவியராகமம் 13:44-46
3இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
Relatedலூக்கா 5:13 · சங்கீதம் 33:9 · மத்தேயு 11:4-5 · II இராஜாக்கள் 5:14 · மாற்கு 1:41 · யோவான் 5:21
4இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.
Relatedலேவியராகமம் 14:2-32 · லூக்கா 17:14 · லூக்கா 5:14 · மாற்கு 7:36 · லேவியராகமம் 13:2-46 · மாற்கு 6:11
5இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து:
Relatedலூக்கா 7:1-10 · மத்தேயு 27:54 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:43 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:31 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:1-33 · மத்தேயு 4:13
6ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
Relatedகொலோசெயர் 4:1 · மத்தேயு 4:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:33 · கொலோசெயர் 3:11 · பிலேமோன் 1:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:7
7அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.
8நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
Relatedசங்கீதம் 107:20 · லூக்கா 7:6-7 · சங்கீதம் 33:9 · மாற்கு 1:25-27 · மத்தேயு 8:3 · மத்தேயு 15:26-27
9நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.
Relatedதீத்து 2:9 · சங்கீதம் 107:25-29 · லூக்கா 4:35-36 · லூக்கா 7:8 · சங்கீதம் 148:8 · கொலோசெயர் 3:22
10இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
11அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.
Relatedலூக்கா 13:28-29 · எபேசியர் 3:6 · மல்கியா 1:11 · எபேசியர் 2:11-14 · கலாத்தியர் 3:28-29 · மீகா 4:1-2
12ராஜ்யத்தின் புத்திரரோ, புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
13பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான்.
14இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜூரமாய்க் கிடக்கிறதைக் கண்டார்.
Relatedலூக்கா 4:38-41 · மாற்கு 1:29-34 · I கொரிந்தியர் 9:5 · மத்தேயு 17:25 · எபிரெயர் 13:4 · I தீமோத்தேயு 3:2
15அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
RelatedII இராஜாக்கள் 13:21 · மாற்கு 1:41 · லூக்கா 8:54 · லூக்கா 4:38-39 · மத்தேயு 8:3 · மத்தேயு 14:36
16அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்.
Relatedயாத்திராகமம் 15:26 · மாற்கு 1:32-34 · மத்தேயு 14:14 · லூக்கா 4:40 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:15 · மாற்கு 5:8
17அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
18பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார்.
19அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
Relatedலூக்கா 22:33-34 · லூக்கா 14:33 · யோவான் 13:36-38 · லூக்கா 14:25-27 · மாற்கு 12:32-34 · I கொரிந்தியர் 1:20
20அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
Relatedசங்கீதம் 84:3 · லூக்கா 2:7 · ஏசாயா 53:2-3 · லூக்கா 2:16 · சங்கீதம் 104:17 · II கொரிந்தியர் 8:9
21அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான்.
Relatedலூக்கா 9:59-62 · மத்தேயு 19:29 · லேவியராகமம் 21:11-12 · எண்ணாகமம் 6:6-7 · I இராஜாக்கள் 19:20-21 · ஆகாய் 1:2
22அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார்.
23அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள்.
24அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார்.
Relatedலூக்கா 8:23 · யோனா 1:4-5 · மாற்கு 4:37-38 · சங்கீதம் 107:23-27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:14-38 · யோவான் 6:17-18
25அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள்.
Relatedயோனா 1:6 · மாற்கு 4:38-39 · சங்கீதம் 44:22-23 · II நாளாகமம் 14:11 · II நாளாகமம் 20:12 · ஏசாயா 51:9-10
26அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
Relatedஏசாயா 41:10-14 · சங்கீதம் 65:7 · சங்கீதம் 107:28-30 · சங்கீதம் 89:9 · மத்தேயு 6:30 · லூக்கா 8:24-25
27அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.
28அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது.
Relatedலூக்கா 8:26-39 · மாற்கு 5:1-20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:38 · மத்தேயு 4:24 · நியாயாதிபதிகள் 5:6 · ஆதியாகமம் 15:21
29அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள்.
30அவர்களுக்குக் கொஞ்சதூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
31அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவுகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 20:1-2 · மாற்கு 5:12 · வெளிப்படுத்தின விசேஷம் 12:12 · லூக்கா 8:30-33 · மாற்கு 5:7
32அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்தில் போயின; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து ஜலத்தில் மாண்டுபோயின.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 20:7 · மாற்கு 5:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:23 · I இராஜாக்கள் 22:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:28 · லூக்கா 8:33
33அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள்.
34அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 16:39 · லூக்கா 8:37-39 · லூக்கா 5:8 · யோபு 21:14 · மாற்கு 5:17-18 · யோபு 22:17
📖 மத்தேயுAll 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS