ஏசாயா 55
Tamil Bible (BSI 1957) • 13 verses
1ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள்.
Relatedயோவான் 7:37-38 · வெளிப்படுத்தின விசேஷம் 21:6 · வெளிப்படுத்தின விசேஷம் 22:17 · யோவான் 4:10-14 · ஏசாயா 44:3 · ஏசாயா 41:17-18
2நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.
Relatedயோவான் 6:48-58 · எரேமியா 2:13 · சங்கீதம் 22:26 · ரோமர் 10:2-3 · சங்கீதம் 36:8 · எபிரெயர் 13:9
3உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்.
Relatedஎரேமியா 32:40 · மத்தேயு 11:28 · நீதிமொழிகள் 4:20 · யோவான் 10:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:34 · ஆதியாகமம் 17:7
4இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 1:5 · ஏசாயா 9:6-7 · எபிரெயர் 2:10 · வெளிப்படுத்தின விசேஷம் 3:14 · மத்தேயு 28:18-20 · சங்கீதம் 18:43
5இதோ, நீ அறியாதிருந்த ஜாதியை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த ஜாதி உன் தேவனாகிய கர்த்தரின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைப்படுத்தியிருக்கிறார்;
6கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
Relatedஎரேமியா 29:12-14 · சங்கீதம் 145:18 · ஏசாயா 45:19 · சங்கீதம் 32:6 · சங்கீதம் 14:2 · ஏசாயா 65:24
7துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.
Relatedநீதிமொழிகள் 28:13 · யாக்கோபு 4:8-10 · எசேக்கியேல் 18:21-23 · ஏசாயா 44:22 · லூக்கா 15:10 · யோனா 3:10
8என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Relatedசங்கீதம் 92:5 · சங்கீதம் 40:5 · ஓசியா 14:9 · சங்கீதம் 25:10 · எசேக்கியேல் 18:29 · தானியேல் 4:37
9பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
Relatedசங்கீதம் 103:11 · ரோமர் 11:31-36 · மத்தேயு 11:25 · சங்கீதம் 77:19 · சங்கீதம் 36:5 · சங்கீதம் 89:2
10மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும் புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,
RelatedII கொரிந்தியர் 9:9-11 · உபாகமம் 32:2 · ஏசாயா 30:23 · எசேக்கியேல் 34:26 · ஓசியா 10:12 · ஏசாயா 61:11
11அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.
12நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள்; பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
Relatedகலாத்தியர் 5:22 · ரோமர் 15:13 · ஏசாயா 44:23 · சங்கீதம் 105:43 · சங்கீதம் 96:11-13 · சங்கீதம் 98:7-9
13முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும்; காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.
Relatedஎபேசியர் 3:20-21 · I பேதுரு 2:9-10 · ஏசாயா 41:19 · II கொரிந்தியர் 5:17 · எரேமியா 33:9 · ஏசாயா 61:3
📖 ஏசாயாAll 66 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS