எபிரெயர் 7
Tamil Bible (BSI 1957) • 28 verses
1இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான்.
2இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம்.
Relatedஎண்ணாகமம் 18:21 · I நாளாகமம் 22:9 · II சாமுவேல் 8:15 · II சாமுவேல் 23:3 · ஆதியாகமம் 28:22 · I சாமுவேல் 8:17
3இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.
Relatedஎபிரெயர் 7:17 · யாத்திராகமம் 6:20-27 · எபிரெயர் 7:23-28 · எபிரெயர் 7:6 · மத்தேயு 4:3 · யாத்திராகமம் 6:18
4இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான்.
Relatedஆதியாகமம் 14:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:29 · ஆதியாகமம் 17:5-6 · ஆதியாகமம் 12:2 · கலாத்தியர் 3:28-29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:8-9
5லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்துவந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள்.
Relatedலேவியராகமம் 27:30-33 · II நாளாகமம் 31:4-6 · எண்ணாகமம் 16:10-11 · எண்ணாகமம் 18:21-32 · எண்ணாகமம் 18:7 · நெகேமியா 13:10
6ஆகிலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான்.
Relatedரோமர் 4:13 · ஆதியாகமம் 13:14-17 · ஆதியாகமம் 17:4-8 · எபிரெயர் 7:3-4 · எபிரெயர் 11:17 · ஆதியாகமம் 12:2
7சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை.
Relatedஆதியாகமம் 48:15-20 · II நாளாகமம் 30:27 · லூக்கா 24:50-51 · ஆதியாகமம் 27:20-40 · I இராஜாக்கள் 8:55 · II கொரிந்தியர் 13:14
8அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான்.
Relatedஎபிரெயர் 6:20 · எபிரெயர் 5:6 · வெளிப்படுத்தின விசேஷம் 1:18 · எபிரெயர் 7:23 · யோவான் 14:19 · எபிரெயர் 3:16
9அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால்,
10தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம்.
11அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரியமுறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன?
Relatedஎபிரெயர் 8:7 · கலாத்தியர் 2:21 · எபிரெயர் 7:17-19 · கலாத்தியர் 4:9 · எபிரெயர் 8:10-13 · எபிரெயர் 7:21
12ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும்.
13இவைகள் எவரைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ. அவர் வேறொரு கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனாகிலும் பலிபீடத்து ஊழியம் செய்ததில்லையே.
14நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.
Relatedமீகா 5:2 · ஏசாயா 11:1 · லூக்கா 3:33 · வெளிப்படுத்தின விசேஷம் 5:5 · ரோமர் 1:3 · ஆதியாகமம் 49:10
15அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது.
16அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல்,
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 1:18 · கொலோசெயர் 2:20 · கலாத்தியர் 4:9 · கலாத்தியர் 4:3 · கொலோசெயர் 2:14 · எபிரெயர் 7:28
17நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார்.
Relatedசங்கீதம் 110:4 · எபிரெயர் 5:6 · எபிரெயர் 7:21 · எபிரெயர் 7:15 · எபிரெயர் 5:10 · எபிரெயர் 6:20
18முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது.
Relatedரோமர் 8:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:39 · கலாத்தியர் 4:9 · எபிரெயர் 7:11-12 · எபிரெயர் 7:19 · எபிரெயர் 8:7-13
19நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 13:39 · எபிரெயர் 9:9 · எபிரெயர் 4:16 · ரோமர் 8:3 · எபிரெயர் 10:1 · எபிரெயர் 6:18
20அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ; நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம்மாறாமலும் இருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார்.
21ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ,
22அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார்.
RelatedI கொரிந்தியர் 11:25 · எபிரெயர் 8:6-12 · லூக்கா 22:20 · எபிரெயர் 13:20 · எபிரெயர் 12:24 · ஆதியாகமம் 44:32
23அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்.
24இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார்.
Relatedயோவான் 12:34 · எபிரெயர் 7:28 · ஏசாயா 9:6-7 · வெளிப்படுத்தின விசேஷம் 1:18 · எபிரெயர் 13:8 · எபிரெயர் 7:8-25
25மேலும், தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்.
26பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.
RelatedII கொரிந்தியர் 5:21 · I பேதுரு 2:22 · எபிரெயர் 4:14-15 · I யோவான் 2:2 · எபிரெயர் 8:1 · எபிரெயர் 1:3
27அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார்.
28நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.
Relatedஎபிரெயர் 2:10 · எபிரெயர் 1:2 · எபிரெயர் 7:21 · எபிரெயர் 5:1-2 · சங்கீதம் 110:4 · லூக்கா 13:32
📖 எபிரெயர்All 13 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS