II தெசலோனிக்கேயர் 3
Tamil Bible (BSI 1957) • 18 verses
1கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும்,
RelatedI தெசலோனிக்கேயர் 5:25 · கொலோசெயர் 4:3 · எபேசியர் 6:19-20 · I கொரிந்தியர் 16:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 19:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:24
2துர்க்குணராகிய பொல்லாத மனுஷர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே.
RelatedII கொரிந்தியர் 4:3-4 · ரோமர் 15:31 · உபாகமம் 32:20 · II கொரிந்தியர் 1:8-10 · லூக்கா 18:8 · ரோமர் 10:16
3கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.
RelatedII தீமோத்தேயு 4:18 · I தெசலோனிக்கேயர் 5:24 · I கொரிந்தியர் 10:13 · சங்கீதம் 121:7 · I கொரிந்தியர் 1:9 · யோவான் 17:15
4மேலும், நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறோம்.
Relatedபிலிப்பியர் 1:6 · பிலேமோன் 1:21 · I தெசலோனிக்கேயர் 4:10 · பிலிப்பியர் 2:12 · II கொரிந்தியர் 2:3 · II தெசலோனிக்கேயர் 3:6
5கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக.
Relatedசங்கீதம் 119:36 · I நாளாகமம் 29:18 · உபாகமம் 30:6 · I யோவான் 4:19 · வெளிப்படுத்தின விசேஷம் 3:10-11 · எபிரெயர் 12:2-3
6மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.
RelatedII தெசலோனிக்கேயர் 3:10-11 · II தெசலோனிக்கேயர் 3:7 · கொலோசெயர் 3:17 · ரோமர் 16:17 · I தெசலோனிக்கேயர் 5:14 · I தெசலோனிக்கேயர் 4:1
7இன்னவிதமாய் எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்றுநடவாமலும்,
RelatedII தெசலோனிக்கேயர் 3:6 · II தெசலோனிக்கேயர் 3:9 · I கொரிந்தியர் 4:16 · I கொரிந்தியர் 11:1 · பிலிப்பியர் 3:17 · தீத்து 2:7
8ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.
Relatedமத்தேயு 6:11 · I தெசலோனிக்கேயர் 2:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:3 · எபேசியர் 4:28 · I தெசலோனிக்கேயர் 4:11 · I கொரிந்தியர் 4:12
9உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம்.
RelatedII தெசலோனிக்கேயர் 3:7 · I கொரிந்தியர் 9:4-14 · I தெசலோனிக்கேயர் 2:6 · கலாத்தியர் 6:6 · யோவான் 13:15 · மத்தேயு 10:10
10ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
Relatedஆதியாகமம் 3:19 · நீதிமொழிகள் 13:4 · I தெசலோனிக்கேயர் 4:11 · நீதிமொழிகள் 20:4 · நீதிமொழிகள் 21:25 · நீதிமொழிகள் 24:30-34
11உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
12இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச்சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
Relatedஎபேசியர் 4:28 · I தெசலோனிக்கேயர் 4:11 · II தெசலோனிக்கேயர் 3:8 · நீதிமொழிகள் 17:1 · லூக்கா 11:3 · பிரசங்கி 4:6
13சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.
Relatedகலாத்தியர் 6:9-10 · எபிரெயர் 12:3 · II கொரிந்தியர் 4:1 · II கொரிந்தியர் 4:16 · ஏசாயா 40:29-31 · லூக்கா 18:1
14மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.
Relatedதீத்து 3:10 · II தெசலோனிக்கேயர் 3:6 · I கொரிந்தியர் 5:11 · சங்கீதம் 83:16 · I தெசலோனிக்கேயர் 4:8 · எரேமியா 6:15
15ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.
Relatedதீத்து 3:10 · I கொரிந்தியர் 5:5 · I தெசலோனிக்கேயர் 5:14 · கலாத்தியர் 6:1 · I கொரிந்தியர் 4:14 · நீதிமொழிகள் 25:12
16சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
Relatedசங்கீதம் 29:11 · யோவான் 16:33 · மத்தேயு 1:23 · யோவான் 14:27 · ரோமர் 15:33 · நியாயாதிபதிகள் 6:24
17பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.
RelatedI கொரிந்தியர் 16:21 · கொலோசெயர் 4:18 · II தெசலோனிக்கேயர் 1:5 · யோசுவா 2:12 · I சாமுவேல் 17:18
18நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
📖 II தெசலோனிக்கேயர்All 3 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS