பிரசங்கி 1
Tamil Bible (BSI 1957) • 18 verses
1தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள்.
Relatedபிரசங்கி 12:8-10 · பிரசங்கி 1:12 · பிரசங்கி 7:27 · I இராஜாக்கள் 11:42-43 · II நாளாகமம் 9:30 · நெகேமியா 6:7
2மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.
Relatedசங்கீதம் 144:4 · ரோமர் 8:20 · பிரசங்கி 5:10 · சங்கீதம் 39:5-6 · பிரசங்கி 12:8 · பிரசங்கி 2:26
3சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?
Relatedபிரசங்கி 3:9 · பிரசங்கி 5:16 · பிரசங்கி 2:22 · பிரசங்கி 2:11 · மாற்கு 8:36-37 · நீதிமொழிகள் 23:4-5
4ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.
Relatedசங்கீதம் 104:5 · சகரியா 1:5 · பிரசங்கி 6:12 · மத்தேயு 24:35 · சங்கீதம் 119:90-91 · II பேதுரு 3:10-13
5சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் தீவிரிக்கிறது.
Relatedசங்கீதம் 42:1 · சங்கீதம் 19:4-6 · ஆபகூக் 3:11 · சங்கீதம் 104:19-23 · சங்கீதம் 89:36-37 · யோசுவா 10:13-14
6காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.
7எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.
8எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லிமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை.
Relatedநீதிமொழிகள் 27:20 · மத்தேயு 11:28 · பிரசங்கி 4:8 · பிரசங்கி 2:26 · பிரசங்கி 7:24-26 · பிரசங்கி 2:11
9முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.
Relatedபிரசங்கி 3:15 · பிரசங்கி 6:10 · வெளிப்படுத்தின விசேஷம் 21:1 · பிரசங்கி 2:12 · பிரசங்கி 7:10 · ஏசாயா 43:19
10இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51 · மத்தேயு 23:30-32 · லூக்கா 17:26-30 · மத்தேயு 5:12 · II தீமோத்தேயு 3:8 · I தெசலோனிக்கேயர் 2:14-16
11முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனி மேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது.
12பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலருக்கு ராஜாவாயிருந்தேன்.
13வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்கு தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்.
Relatedபிரசங்கி 3:10 · ஆதியாகமம் 3:19 · பிரசங்கி 8:16-17 · I தீமோத்தேயு 4:15 · பிரசங்கி 1:17 · பிரசங்கி 12:12
14சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
Relatedபிரசங்கி 2:11 · பிரசங்கி 2:26 · பிரசங்கி 2:17 · பிரசங்கி 6:9 · சங்கீதம் 39:5-6 · பிரசங்கி 4:4
15கோணலானதை நேராக்கக்கூடாது; குறைவானதை எண்ணிமுடியாது.
16இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்; என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது என்று நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன்.
Relatedபிரசங்கி 2:9 · I இராஜாக்கள் 4:30 · I இராஜாக்கள் 10:7 · எபிரெயர் 5:14 · II நாளாகமம் 2:12 · II நாளாகமம் 1:10-12
17ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன்.
Relatedபிரசங்கி 2:3 · I தெசலோனிக்கேயர் 5:21 · பிரசங்கி 2:10-12 · பிரசங்கி 1:13-14 · பிரசங்கி 7:23-25
18அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்.
📖 பிரசங்கிAll 12 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS