பிலிப்பியர் 3
Tamil Bible (BSI 1957) • 21 verses
1மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும்.
Relatedபிலிப்பியர் 4:4 · ரோமர் 5:11 · யாக்கோபு 1:2 · யோவேல் 2:23 · சங்கீதம் 37:4 · I தெசலோனிக்கேயர் 5:16
2நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
RelatedII கொரிந்தியர் 11:13 · தீத்து 1:16 · வெளிப்படுத்தின விசேஷம் 22:15 · ஏசாயா 56:10-11 · II தீமோத்தேயு 3:1-6 · கலாத்தியர் 5:15
3ஏனெனில் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.
4மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம்.
RelatedII கொரிந்தியர் 11:18-22
5நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்;
RelatedII கொரிந்தியர் 11:22 · ரோமர் 11:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:4-5 · ஆதியாகமம் 17:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3
6பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.
Relatedகலாத்தியர் 1:13-14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:9-10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3-4 · ரோமர் 9:31-32 · மத்தேயு 5:20
7ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்.
Relatedலூக்கா 14:33 · மத்தேயு 16:26 · மத்தேயு 13:44-46 · லூக்கா 14:26 · நீதிமொழிகள் 13:8 · பிலிப்பியர் 3:8-10
8அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின்மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
Relatedஎரேமியா 9:23-24 · ரோமர் 8:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:24 · பிலிப்பியர் 3:7 · யோவான் 17:3 · பிலிப்பியர் 3:10
9நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும்,
RelatedII கொரிந்தியர் 5:21 · I கொரிந்தியர் 1:30 · கலாத்தியர் 2:16 · ரோமர் 4:13-15 · ரோமர் 4:5-6 · ரோமர் 1:17
10இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,
Relatedகலாத்தியர் 2:20 · I பேதுரு 4:1-2 · II தீமோத்தேயு 2:11-12 · ரோமர் 8:17 · ரோமர் 6:3-11 · எபேசியர் 1:19-21
11அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்.
Relatedலூக்கா 20:35-36 · வெளிப்படுத்தின விசேஷம் 20:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:6 · எபிரெயர் 11:35 · II கொரிந்தியர் 11:3
12நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்.
RelatedI தீமோத்தேயு 6:11-12 · II பேதுரு 1:5-8 · சங்கீதம் 138:8 · ஓசியா 6:3 · I பேதுரு 3:11-13 · II கொரிந்தியர் 7:1
13சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி,
Relatedலூக்கா 9:62 · எபிரெயர் 12:1-2 · பிலிப்பியர் 3:12 · I கொரிந்தியர் 9:24-27 · சங்கீதம் 27:4 · பிலிப்பியர் 3:8
14கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.
RelatedI கொரிந்தியர் 9:24 · I பேதுரு 5:10 · வெளிப்படுத்தின விசேஷம் 3:21 · II தீமோத்தேயு 4:7-8 · ரோமர் 8:28-30 · I தெசலோனிக்கேயர் 2:12
15ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்.
Relatedயோவான் 7:17 · நீதிமொழிகள் 2:3-6 · கலாத்தியர் 5:10 · I கொரிந்தியர் 2:6 · யாக்கோபு 1:4-5 · கொலோசெயர் 4:12
16ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.
Relatedகொலோசெயர் 2:6 · வெளிப்படுத்தின விசேஷம் 3:3 · வெளிப்படுத்தின விசேஷம் 2:4-5 · கலாத்தியர் 6:16 · ரோமர் 15:5 · எபிரெயர் 10:38-39
17சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள்.
Relatedபிலிப்பியர் 4:9 · I கொரிந்தியர் 4:16 · I பேதுரு 5:3 · I தீமோத்தேயு 4:12 · எபிரெயர் 13:7 · II தெசலோனிக்கேயர் 3:9
18ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
Relatedஎபேசியர் 4:17 · ஏசாயா 8:11 · கலாத்தியர் 6:12 · கலாத்தியர் 1:7 · எரேமியா 13:17 · கலாத்தியர் 2:14
19அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
Relatedரோமர் 16:18 · ரோமர் 8:5-7 · II பேதுரு 2:3 · கொலோசெயர் 3:2 · யூதா 1:12-13 · II கொரிந்தியர் 11:15
20நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
Relatedஎபேசியர் 2:19 · கொலோசெயர் 3:1-3 · II கொரிந்தியர் 4:18-5:1 · எபிரெயர் 12:22 · I பேதுரு 1:3-4 · II தீமோத்தேயு 4:8
21அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.
RelatedI யோவான் 3:2 · கொலோசெயர் 3:4 · I கொரிந்தியர் 15:42-56 · ரோமர் 8:29 · யோவான் 11:24-26 · ஏசாயா 26:19
📖 பிலிப்பியர்All 4 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS