சங்கீதம் 95
Tamil Bible (BSI 1957) • 11 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.
RelatedI கொரிந்தியர் 10:4 · சங்கீதம் 81:1 · II சாமுவேல் 22:47 · சங்கீதம் 150:6 · சங்கீதம் 96:1-2 · I நாளாகமம் 16:9
2துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.
Relatedஎபேசியர் 5:19 · சங்கீதம் 100:4 · எரேமியா 31:12-13 · சங்கீதம் 105:2 · மீகா 6:6 · சங்கீதம் 17:13
3கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.
Relatedசங்கீதம் 96:4 · எரேமியா 10:6-7 · சங்கீதம் 145:3 · சங்கீதம் 97:9 · சங்கீதம் 135:5 · யாத்திராகமம் 18:11
4பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.
5சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.
Relatedஆதியாகமம் 1:9-10 · நீதிமொழிகள் 8:29 · எரேமியா 5:22 · யோனா 1:9 · யோபு 38:10-11 · சங்கீதம் 146:6
6நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.
Relatedபிலிப்பியர் 2:10 · சங்கீதம் 100:3 · எபேசியர் 3:14 · சங்கீதம் 95:1 · I கொரிந்தியர் 6:20 · தானியேல் 6:10
7அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
Relatedஎபிரெயர் 4:7 · எபிரெயர் 3:15 · வெளிப்படுத்தின விசேஷம் 3:20 · எபிரெயர் 3:7-11 · சங்கீதம் 48:14 · யோவான் 10:14-16
8இன்று அவருடைய சத்தத்தைக்கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
Relatedயாத்திராகமம் 17:7 · எபிரெயர் 3:8-9 · எண்ணாகமம் 20:13 · எண்ணாகமம் 14:11 · எண்ணாகமம் 14:22 · எபிரெயர் 3:15-19
9அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.
Relatedஎண்ணாகமம் 14:22 · I கொரிந்தியர் 10:9 · சங்கீதம் 78:56 · சங்கீதம் 78:40-41 · சங்கீதம் 78:17-18 · மத்தேயு 11:20-22
10நாற்பதுவருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
Relatedஎபிரெயர் 3:17 · எபிரெயர் 3:9-10 · நீதிமொழிகள் 1:22-29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:18 · ஏசாயா 63:17 · எண்ணாகமம் 32:13
11என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS