லூக்கா 21
Tamil Bible (BSI 1957) • 38 verses
1அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப்பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.
Relatedமாற்கு 12:41-44 · யோவான் 8:20 · மத்தேயு 27:6 · II நாளாகமம் 36:18 · நெகேமியா 13:13 · II இராஜாக்கள் 24:13
2ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:
Relatedமாற்கு 12:42
3இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
RelatedII கொரிந்தியர் 8:12 · II கொரிந்தியர் 8:2-3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:34 · மாற்கு 12:43-44 · யாத்திராகமம் 35:21-29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:27
4அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்து தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.
5பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்து சிலர் சொன்னபோது,
6அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.
Relatedமாற்கு 13:2 · மத்தேயு 24:2 · சகரியா 14:2 · புலம்பல் 5:18 · லூக்கா 19:44-48 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:13-14
7அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.
Relatedமாற்கு 13:14 · மாற்கு 13:3-4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:6-7 · லூக்கா 21:27-28 · லூக்கா 21:20-21 · மத்தேயு 24:15-16
8அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.
RelatedI யோவான் 4:1 · எபேசியர் 5:6 · மாற்கு 13:5-6 · II தெசலோனிக்கேயர் 2:3 · மத்தேயு 24:4-5 · மாற்கு 13:21-23
9யுத்தங்களையும் கலகங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.
Relatedலூக்கா 21:28 · மத்தேயு 24:6-8 · மாற்கு 13:7-8 · ஏசாயா 51:12-13 · லூக்கா 21:18-19 · சங்கீதம் 46:1-2
10அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 2:19-20 · மாற்கு 13:8 · சகரியா 14:13 · சகரியா 14:2-3 · II நாளாகமம் 15:5-6 · எபிரெயர் 12:27
11பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
12இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
RelatedI பேதுரு 4:12-14 · மத்தேயு 24:9-10 · யோவான் 15:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:1-2 · மத்தேயு 10:16-25 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:30-31
13ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.
14ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.
15உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
Relatedஎரேமியா 1:9 · எபேசியர் 6:19 · லூக்கா 12:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:10 · யாத்திராகமம் 4:11-12 · கொலோசெயர் 4:3-4
16பெற்றோராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.
Relatedலூக்கா 12:53 · வெளிப்படுத்தின விசேஷம் 6:9 · மீகா 7:5-6 · மத்தேயு 10:21 · மாற்கு 13:12 · எரேமியா 9:4
17என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.
Relatedயோவான் 15:19 · லூக்கா 6:22 · II கொரிந்தியர் 12:10 · யோவான் 15:21 · வெளிப்படுத்தின விசேஷம் 2:3 · மாற்கு 13:13
18ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது.
Relatedமத்தேயு 10:30 · I சாமுவேல் 14:45 · லூக்கா 12:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:34 · II சாமுவேல் 14:11 · I சாமுவேல் 25:29
19உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
Relatedஎபிரெயர் 10:36 · யாக்கோபு 1:3 · மத்தேயு 10:22 · வெளிப்படுத்தின விசேஷம் 3:10 · ரோமர் 5:3 · வெளிப்படுத்தின விசேஷம் 13:10
20எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
21அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும்கடவர்கள்.
Relatedஎரேமியா 6:1 · யாத்திராகமம் 9:20-21 · மாற்கு 13:15 · ஆதியாகமம் 19:17 · லூக்கா 17:31-33 · ஆதியாகமம் 19:26
22எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.
23அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
24பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.
Relatedரோமர் 11:25 · வெளிப்படுத்தின விசேஷம் 11:2 · ஏசாயா 63:18 · தானியேல் 12:7 · தானியேல் 9:27 · ஏசாயா 5:5
25சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.
Relatedஏசாயா 13:10 · யோவேல் 2:30-31 · வெளிப்படுத்தின விசேஷம் 6:12-14 · ஏசாயா 24:23 · எசேக்கியேல் 32:7-8 · தானியேல் 12:1
26வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துக்களுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோகும்.
Relatedஉபாகமம் 28:65-67 · மத்தேயு 24:29 · II பேதுரு 3:10-12 · லேவியராகமம் 26:36 · மாற்கு 13:25 · எபிரெயர் 10:26-27
27அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 1:7 · மத்தேயு 24:30 · மாற்கு 13:26 · மத்தேயு 26:64 · தானியேல் 7:13 · மத்தேயு 25:31
28இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
29அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.
30அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.
Relatedலூக்கா 12:57
31அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
Relatedயாக்கோபு 5:9 · எபிரெயர் 10:37 · I பேதுரு 4:7 · மத்தேயு 16:1-4 · மத்தேயு 3:2 · லூக்கா 12:51-57
32இவையெல்லாம் சம்பவிக்குமுன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
33வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
34உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
Relatedமாற்கு 4:19 · I தெசலோனிக்கேயர் 5:2-8 · லூக்கா 12:45-46 · லூக்கா 12:40 · I பேதுரு 4:3-7 · I கொரிந்தியர் 6:10
35பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 16:15 · எரேமியா 48:43-44 · லூக்கா 17:37 · ஏசாயா 24:17-18 · சங்கீதம் 11:6 · பிரசங்கி 9:12
36ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
RelatedI யோவான் 2:28 · மத்தேயு 25:13 · I பேதுரு 5:8 · மத்தேயு 24:42 · I பேதுரு 4:7 · I கொரிந்தியர் 16:13
37அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
Relatedலூக்கா 22:39 · மத்தேயு 26:55 · மத்தேயு 21:1 · மாற்கு 11:19 · மத்தேயு 21:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:12
38ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.
Relatedயோவான் 8:1-2
📖 லூக்காAll 24 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS