II கொரிந்தியர் 13
Tamil Bible (BSI 1957) • 14 verses
1இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டுமமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.
Relatedமத்தேயு 18:16 · உபாகமம் 19:15 · உபாகமம் 17:6 · யோவான் 8:17-18 · எண்ணாகமம் 35:30 · II கொரிந்தியர் 12:14
2நான் இரண்டாந்தரம் உங்களிடத்திலிருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரமாயிருந்தும் உங்களிடத்திலிருக்கிறவனாக, நான் மறுபடியும் வந்தால் தப்பவிடமாட்டேனென்று முன்பு பாவஞ்செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன்.
RelatedII கொரிந்தியர் 1:23 · II கொரிந்தியர் 10:8-11 · I கொரிந்தியர் 5:5 · II கொரிந்தியர் 12:20-21 · II கொரிந்தியர் 10:1-2 · I கொரிந்தியர் 4:19-21
3கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார்.
Relatedமத்தேயு 10:20 · II கொரிந்தியர் 10:8-10 · லூக்கா 21:15 · II கொரிந்தியர் 12:12 · I கொரிந்தியர் 9:1-3 · I கொரிந்தியர் 5:4-5
4ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம்.
RelatedI பேதுரு 3:18 · ரோமர் 6:4 · II கொரிந்தியர் 10:3-4 · II தீமோத்தேயு 2:11-12 · ரோமர் 6:8-11 · I கொரிந்தியர் 15:43
5நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்.
Relatedபுலம்பல் 3:40 · I கொரிந்தியர் 11:28 · சங்கீதம் 139:23-24 · I கொரிந்தியர் 9:27 · வெளிப்படுத்தின விசேஷம் 2:5 · கலாத்தியர் 6:4
6நாங்களோ பரீட்சைக்கு நில்லாதவர்களல்லவென்பதை அறிவீர்களென்று நம்புகிறேன்.
7மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாதிருக்கும்படியாக, தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்களென்று காணப்படும்பொருட்டல்ல, நாங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்கள்போலிருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்பொருட்டே விண்ணப்பம்பண்ணுகிறேன்.
Relatedயாக்கோபு 1:12 · பிலிப்பியர் 1:9-11 · பிலிப்பியர் 4:8 · I தெசலோனிக்கேயர் 5:23 · II தீமோத்தேயு 2:15 · II தீமோத்தேயு 4:18
8சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும்.
Relatedநீதிமொழிகள் 21:30 · மாற்கு 9:39 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:28-30 · எபிரெயர் 2:3-4 · எண்ணாகமம் 16:28-35 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:1-11
9நாங்கள் பலவீனரும் நீங்கள் பலமுள்ளவர்களுமாயிருக்கையில், சந்தோஷப்படுகிறோம்; நீங்கள் நற்சீர் பொருந்தும்படிக்கும் விண்ணப்பம்பண்ணுகிறோம்.
RelatedII கொரிந்தியர் 13:11 · I கொரிந்தியர் 4:10 · I தெசலோனிக்கேயர் 3:10 · I பேதுரு 5:10 · II கொரிந்தியர் 12:5-10 · கொலோசெயர் 4:12
10ஆனதால் இடித்துப்போட அல்ல, ஊன்றக்கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடத்தில் வந்திருக்கும்போது, கண்டிதம்பண்ணாதபடிக்கு, நான் தூரமாயிருந்து இவைகளை எழுதுகிறேன்.
RelatedII கொரிந்தியர் 10:8 · II கொரிந்தியர் 2:3 · தீத்து 1:13 · II கொரிந்தியர் 10:2 · II கொரிந்தியர் 13:8 · I கொரிந்தியர் 4:21
11கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.
12ஒருவரையொருவர் பரிசுத்தமுத்தத்தோடு வாழ்த்துங்கள்.
13பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
Relatedபிலேமோன் 1:23-24 · I பேதுரு 5:13 · ரோமர் 16:21-23 · ரோமர் 16:16 · எபிரெயர் 13:24 · II யோவான் 1:13
14கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
📖 II கொரிந்தியர்All 13 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS