சங்கீதம் 92
Tamil Bible (BSI 1957) • 15 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும்,
Relatedசங்கீதம் 147:1 · சங்கீதம் 107:1 · சங்கீதம் 107:21-22 · எபேசியர் 5:19 · சங்கீதம் 135:3 · சங்கீதம் 33:1
2பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,
Relatedபுலம்பல் 3:22-23 · சங்கீதம் 89:1-2 · யோவான் 1:17 · ஏசாயா 63:7 · சங்கீதம் 42:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:25
3காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.
Relatedசங்கீதம் 33:2 · I நாளாகமம் 13:8 · சங்கீதம் 68:25 · நெகேமியா 12:27 · II நாளாகமம் 23:5 · சங்கீதம் 9:16
4கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடுவேன்.
RelatedII கொரிந்தியர் 2:14 · சங்கீதம் 8:6 · சங்கீதம் 126:3 · ஏசாயா 65:13-14 · லூக்கா 1:47 · யோவான் 16:22
5கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள்.
Relatedரோமர் 11:33-34 · ஏசாயா 55:8-9 · சங்கீதம் 40:5 · சங்கீதம் 139:17 · சங்கீதம் 145:3-4 · I கொரிந்தியர் 2:10
6மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.
RelatedI கொரிந்தியர் 2:14 · சங்கீதம் 94:8 · சங்கீதம் 73:22 · நீதிமொழிகள் 1:22 · சங்கீதம் 49:10 · சங்கீதம் 14:1
7துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.
Relatedசங்கீதம் 37:38 · சங்கீதம் 73:18-20 · சங்கீதம் 37:35-36 · I பேதுரு 1:24 · எரேமியா 12:1-2 · சங்கீதம் 37:1-2
8கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர்.
Relatedசங்கீதம் 83:18 · யாத்திராகமம் 18:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:22-24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1 · பிரசங்கி 5:8 · சங்கீதம் 102:26-27
9கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள்; உமது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள்; சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள்.
Relatedசங்கீதம் 37:20 · சங்கீதம் 89:10 · சங்கீதம் 21:8-9 · சங்கீதம் 68:1-2 · II தெசலோனிக்கேயர் 1:7-9 · மத்தேயு 7:23
10என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்.
Relatedசங்கீதம் 23:5 · சங்கீதம் 89:17 · சங்கீதம் 45:7 · II கொரிந்தியர் 1:21 · சங்கீதம் 75:10 · I யோவான் 2:20
11என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.
12நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
Relatedசங்கீதம் 1:3 · எரேமியா 17:8 · சங்கீதம் 104:16 · சங்கீதம் 52:8 · ஓசியா 14:5-6 · எண்ணாகமம் 24:6
13கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.
14கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,
15அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS