நீதிமொழிகள் 5
Tamil Bible (BSI 1957) • 23 verses
1என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;
Relatedநீதிமொழிகள் 22:17 · வெளிப்படுத்தின விசேஷம் 2:11 · நீதிமொழிகள் 2:1 · நீதிமொழிகள் 4:20 · மாற்கு 4:23 · வெளிப்படுத்தின விசேஷம் 2:17
2அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.
Relatedநீதிமொழிகள் 16:23 · மல்கியா 2:6-7 · நீதிமொழிகள் 15:7 · உன்னதப்பாட்டு 4:11 · நீதிமொழிகள் 10:21 · சங்கீதம் 45:2
3பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.
Relatedநீதிமொழிகள் 2:16 · நீதிமொழிகள் 6:24 · நீதிமொழிகள் 7:5 · நீதிமொழிகள் 7:21 · சங்கீதம் 55:21 · வெளிப்படுத்தின விசேஷம் 17:2-6
4அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்.
Relatedபிரசங்கி 7:26 · சங்கீதம் 55:21 · சங்கீதம் 57:4 · எபிரெயர் 4:12 · நீதிமொழிகள் 9:18 · நியாயாதிபதிகள் 16:15-21
5அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.
6நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக் கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடி.யாது.
Relatedநீதிமொழிகள் 4:26 · சங்கீதம் 16:11 · நீதிமொழிகள் 5:21 · சங்கீதம் 119:59 · நீதிமொழிகள் 6:12-13 · நீதிமொழிகள் 30:20
7ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள்.
Relatedநீதிமொழிகள் 4:1 · நீதிமொழிகள் 7:24 · நீதிமொழிகள் 22:17-21 · நீதிமொழிகள் 3:21 · நீதிமொழிகள் 4:21 · எபிரெயர் 12:25
8உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே.
9சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.
Relatedநெகேமியா 13:26 · ஓசியா 4:13-14 · ஆதியாகமம் 38:23-26 · நியாயாதிபதிகள் 16:19-21 · நீதிமொழிகள் 6:29-35
10அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின்பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்.
11முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:
Relatedரோமர் 6:21 · வெளிப்படுத்தின விசேஷம் 22:15 · எண்ணாகமம் 5:27 · எபிரெயர் 13:4 · உபாகமம் 32:29 · நீதிமொழிகள் 7:23
12ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் பண்ணினதே!
Relatedநீதிமொழிகள் 12:1 · நீதிமொழிகள் 1:22 · நீதிமொழிகள் 15:5 · நீதிமொழிகள் 1:25 · நீதிமொழிகள் 1:7 · நீதிமொழிகள் 13:18
13என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே!
14சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய்.
Relatedநீதிமொழிகள் 13:20 · I கொரிந்தியர் 10:6-8 · II பேதுரு 2:10-18 · ஓசியா 4:11-14 · எண்ணாகமம் 25:1-6 · யூதா 1:7-13
15உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு.
16உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.
Relatedசங்கீதம் 128:3 · சங்கீதம் 127:3 · சங்கீதம் 68:26 · ஆதியாகமம் 24:60 · நியாயாதிபதிகள் 12:9 · உபாகமம் 33:28
17அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக.
18உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.
19அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.
Relatedஉன்னதப்பாட்டு 7:3 · உன்னதப்பாட்டு 4:5 · உன்னதப்பாட்டு 8:14 · உன்னதப்பாட்டு 2:9 · நீதிமொழிகள் 5:15 · உன்னதப்பாட்டு 2:17
20என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?
Relatedநீதிமொழிகள் 6:24 · நீதிமொழிகள் 7:5 · நீதிமொழிகள் 23:33 · நீதிமொழிகள் 23:27-28 · நீதிமொழிகள் 22:14 · I இராஜாக்கள் 11:1
21மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.
22துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.
Relatedநீதிமொழிகள் 11:5 · நீதிமொழிகள் 1:31-32 · சங்கீதம் 9:15 · எண்ணாகமம் 32:23 · நீதிமொழிகள் 1:18 · ஓசியா 4:11-14
23அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.
Relatedயோபு 36:12 · யோபு 4:21 · II பேதுரு 2:15-22 · நீதிமொழிகள் 14:32 · நீதிமொழிகள் 10:21 · சங்கீதம் 81:12
📖 நீதிமொழிகள்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS