I தீமோத்தேயு 3
Tamil Bible (BSI 1957) • 16 verses
1கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
Relatedதீத்து 1:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:28 · I பேதுரு 5:2 · I பேதுரு 2:25 · I தீமோத்தேயு 1:15 · யாக்கோபு 5:19-20
2ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.
Relatedதீத்து 1:6-9 · II தீமோத்தேயு 2:24 · ரோமர் 12:13 · I தீமோத்தேயு 5:9 · I பேதுரு 4:9 · I தீமோத்தேயு 3:10-11
3அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,
4தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.
Relatedதீத்து 1:6 · ஆதியாகமம் 18:19 · I தீமோத்தேயு 3:12 · தீத்து 2:2 · யோசுவா 24:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:2
5ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
RelatedI சாமுவேல் 3:13 · எபேசியர் 5:24 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:28 · எபேசியர் 5:32 · I தீமோத்தேயு 3:15 · எபேசியர் 1:22
6அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது.
RelatedI தீமோத்தேயு 6:4 · எபிரெயர் 5:12-13 · I பேதுரு 5:5 · I பேதுரு 2:2 · ஏசாயா 2:12 · II கொரிந்தியர் 12:7
7அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.
RelatedII கொரிந்தியர் 8:21 · கொலோசெயர் 4:5 · II தீமோத்தேயு 2:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:3 · I தீமோத்தேயு 6:9 · I கொரிந்தியர் 10:32
8அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும்,
Relatedபிலிப்பியர் 1:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:3-6 · I தீமோத்தேயு 5:23 · I தீமோத்தேயு 3:3 · தீத்து 2:3 · லேவியராகமம் 10:9
9விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும்.
10மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ்செய்யலாம்.
RelatedI தீமோத்தேயு 5:22 · I தீமோத்தேயு 3:13 · தீத்து 1:6-7 · I கொரிந்தியர் 1:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:1-2 · I தீமோத்தேயு 3:2
11அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும்.
Relatedதீத்து 2:3 · தீத்து 3:2 · I தீமோத்தேயு 3:2 · II தீமோத்தேயு 3:3 · I பேதுரு 5:8 · நீதிமொழிகள் 10:18
12மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்.
13இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.
Relatedமத்தேயு 25:21 · எபிரெயர் 6:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:8 · II தீமோத்தேயு 2:1 · மத்தேயு 20:28 · ரோமர் 12:7-8
14நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாய் வருவேனென்று நம்பியிருக்கிறேன்.
Relatedபிலேமோன் 1:22 · I கொரிந்தியர் 11:34 · I தெசலோனிக்கேயர் 2:18 · II கொரிந்தியர் 1:15-17 · எபிரெயர் 13:23 · III யோவான் 1:14
15தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது.
RelatedI பேதுரு 2:5 · எபேசியர் 2:21-22 · I தெசலோனிக்கேயர் 1:9 · I நாளாகமம் 22:13 · மத்தேயு 16:18-19 · I இராஜாக்கள் 2:4
16அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
📖 I தீமோத்தேயுAll 6 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS