சங்கீதம் 71
Tamil Bible (BSI 1957) • 24 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும்.
Relatedசங்கீதம் 31:1-3 · சங்கீதம் 25:2-3 · சங்கீதம் 22:5 · I பேதுரு 2:6 · எரேமியா 17:18 · ஏசாயா 45:17
2உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும்.
Relatedசங்கீதம் 31:1 · சங்கீதம் 17:6 · சங்கீதம் 143:11 · சங்கீதம் 116:1-2 · சங்கீதம் 17:2 · சங்கீதம் 34:15
3நான் எப்பொழுதும் வந்தடையத்தக்க கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.
Relatedசங்கீதம் 18:2 · நீதிமொழிகள் 18:10 · உபாகமம் 33:27 · சங்கீதம் 91:9 · சங்கீதம் 91:11-12 · சங்கீதம் 31:2-3
4என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.
Relatedசங்கீதம் 59:1-2 · சங்கீதம் 140:1-4 · II சாமுவேல் 17:1-2 · சங்கீதம் 17:8-9 · சங்கீதம் 17:13 · II சாமுவேல் 17:21
5கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.
Relatedஎரேமியா 17:7 · சங்கீதம் 39:7 · சங்கீதம் 119:81 · சங்கீதம் 71:17 · சங்கீதம் 119:166 · சங்கீதம் 22:9-10
6நான் கர்ப்பத்தில் உற்பவித்தது முதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.
Relatedஎரேமியா 1:5 · சங்கீதம் 22:9-10 · சங்கீதம் 139:15-16 · கலாத்தியர் 1:15 · ஏசாயா 49:1 · ஏசாயா 46:3-4
7அநேகருக்கு நான் ஒரு புதுமைபோலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்.
Relatedஏசாயா 8:18 · சங்கீதம் 62:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:13 · I கொரிந்தியர் 4:9 · எரேமியா 16:19 · II கொரிந்தியர் 6:8-10
8என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.
Relatedசங்கீதம் 35:28 · சங்கீதம் 146:2 · சங்கீதம் 104:1 · சங்கீதம் 71:15 · சங்கீதம் 71:24 · சங்கீதம் 145:1-2
9முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.
Relatedஏசாயா 46:4 · II தீமோத்தேயு 1:12 · சங்கீதம் 71:18 · சங்கீதம் 92:13-15 · சங்கீதம் 90:10 · II தீமோத்தேயு 4:18
10என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ப் பேசி, என் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
Relatedசங்கீதம் 31:13 · சங்கீதம் 83:3 · சங்கீதம் 56:6 · மத்தேயு 26:3-4 · எரேமியா 20:10 · சங்கீதம் 37:32-33
11தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்.
Relatedசங்கீதம் 7:2 · சங்கீதம் 50:22 · மத்தேயு 27:46 · சங்கீதம் 3:2 · சங்கீதம் 37:25 · தானியேல் 3:15
12தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.
Relatedசங்கீதம் 38:21-22 · சங்கீதம் 35:22 · சங்கீதம் 22:11 · சங்கீதம் 10:1 · சங்கீதம் 69:18 · சங்கீதம் 70:5
13என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள்.
Relatedஎரேமியா 20:11 · சங்கீதம் 71:24 · சங்கீதம் 109:29 · சங்கீதம் 35:26 · சங்கீதம் 35:4 · ஏசாயா 41:11
14நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
RelatedI யோவான் 3:3 · சங்கீதம் 130:7 · புலம்பல் 3:26 · சங்கீதம் 43:5 · சங்கீதம் 71:6 · எபிரெயர் 10:35
15என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.
Relatedசங்கீதம் 40:5 · சங்கீதம் 35:28 · சங்கீதம் 71:8 · சங்கீதம் 145:2 · சங்கீதம் 139:17-18 · சங்கீதம் 145:5-14
16கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.
Relatedபிலிப்பியர் 4:13 · பிலிப்பியர் 3:9 · சங்கீதம் 51:14 · மத்தேயு 6:33 · சங்கீதம் 29:11 · சகரியா 10:12
17தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.
Relatedசங்கீதம் 119:9 · சங்கீதம் 119:102 · சங்கீதம் 71:5 · உபாகமம் 4:5 · II சாமுவேல் 4:9 · சங்கீதம் 26:7
18இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும்வரைக்கும் என்னைக் கைவிடீராக.
Relatedஏசாயா 46:4 · சங்கீதம் 78:4 · சங்கீதம் 71:9 · சங்கீதம் 145:4-5 · சங்கீதம் 78:6 · சங்கீதம் 22:31
19தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்?
Relatedசங்கீதம் 35:10 · சங்கீதம் 36:5-6 · ஏசாயா 55:9 · சங்கீதம் 57:10 · யாத்திராகமம் 15:11 · சங்கீதம் 86:8
20அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.
Relatedசங்கீதம் 138:7 · ஓசியா 6:1-2 · சங்கீதம் 60:3 · சங்கீதம் 86:13 · எசேக்கியேல் 37:12-13 · சங்கீதம் 40:1-3
21என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்.
RelatedII சாமுவேல் 3:1 · சங்கீதம் 18:35 · ஏசாயா 12:1 · சங்கீதம் 86:17 · சங்கீதம் 32:10 · II கொரிந்தியர் 1:4-5
22என் தேவனே, நான் வீணையைக் கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக் கொண்டு உம்மைப் பாடுவேன்.
Relatedசங்கீதம் 92:1-3 · சங்கீதம் 33:2 · II இராஜாக்கள் 19:22 · சங்கீதம் 89:18 · ஆபகூக் 3:18-19 · ஏசாயா 12:6
23நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
Relatedசங்கீதம் 103:4 · சங்கீதம் 104:33 · லூக்கா 1:46-47 · வெளிப்படுத்தின விசேஷம் 5:9 · சங்கீதம் 34:22 · II சாமுவேல் 4:9
24எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS