வெளிப்படுத்தின விசேஷம் 19
Tamil Bible (BSI 1957) • 21 verses
1இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நீயாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 7:10-12 · வெளிப்படுத்தின விசேஷம் 11:15 · I நாளாகமம் 29:11 · மத்தேயு 6:13 · வெளிப்படுத்தின விசேஷம் 5:9-13 · வெளிப்படுத்தின விசேஷம் 19:3-4
2தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.
Relatedஉபாகமம் 32:43 · வெளிப்படுத்தின விசேஷம் 6:10 · வெளிப்படுத்தின விசேஷம் 16:5-7 · வெளிப்படுத்தின விசேஷம் 18:20 · உபாகமம் 32:35 · வெளிப்படுத்தின விசேஷம் 15:3
3மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.
Relatedஏசாயா 34:10 · வெளிப்படுத்தின விசேஷம் 18:18 · வெளிப்படுத்தின விசேஷம் 14:11 · வெளிப்படுத்தின விசேஷம் 18:9 · வெளிப்படுத்தின விசேஷம் 19:1 · யூதா 1:7
4இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 5:14 · சங்கீதம் 106:48 · நெகேமியா 8:6 · வெளிப்படுத்தின விசேஷம் 15:7 · எரேமியா 28:6 · நெகேமியா 5:13
5மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.
Relatedசங்கீதம் 134:1 · சங்கீதம் 148:11-13 · சங்கீதம் 150:6 · வெளிப்படுத்தின விசேஷம் 7:15 · சங்கீதம் 135:1 · வெளிப்படுத்தின விசேஷம் 11:18-19
6அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
Relatedசங்கீதம் 97:1 · வெளிப்படுத்தின விசேஷம் 14:2 · சங்கீதம் 29:3-9 · சங்கீதம் 93:1 · சங்கீதம் 99:1 · வெளிப்படுத்தின விசேஷம் 19:1
7நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 21:2 · வெளிப்படுத்தின விசேஷம் 21:9 · வெளிப்படுத்தின விசேஷம் 19:9 · II கொரிந்தியர் 11:2 · மத்தேயு 22:2 · யோவான் 3:29
8சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
Relatedஏசாயா 61:10 · வெளிப்படுத்தின விசேஷம் 7:13-14 · எபேசியர் 5:26-27 · சங்கீதம் 132:9 · வெளிப்படுத்தின விசேஷம் 3:18 · ரோமர் 13:14
9பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 22:6 · லூக்கா 14:15-16 · மத்தேயு 22:2-4 · வெளிப்படுத்தின விசேஷம் 19:7-8 · வெளிப்படுத்தின விசேஷம் 1:19 · வெளிப்படுத்தின விசேஷம் 21:5
10அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 10:25-26 · வெளிப்படுத்தின விசேஷம் 22:8-9 · யோவான் 5:39 · எபிரெயர் 1:14 · வெளிப்படுத்தின விசேஷம் 4:10 · யாத்திராகமம் 34:14
11பின்பு, பரலோகம் திறந்திருக்கக்கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
Relatedசங்கீதம் 96:13 · ஏசாயா 11:3-5 · சங்கீதம் 98:9 · சங்கீதம் 50:6 · வெளிப்படுத்தின விசேஷம் 6:2 · எரேமியா 23:5-6
12அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 19:16 · லூக்கா 10:22 · வெளிப்படுத்தின விசேஷம் 2:17-18 · மத்தேயு 11:27 · வெளிப்படுத்தின விசேஷம் 1:14 · மத்தேயு 28:18
13இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே.
Relatedயோவான் 1:1 · ஏசாயா 63:1-6 · யோவான் 1:14 · சங்கீதம் 58:10 · வெளிப்படுத்தின விசேஷம் 14:20 · I யோவான் 1:1
14பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந்தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள்.
Relatedயூதா 1:14 · வெளிப்படுத்தின விசேஷம் 7:9 · வெளிப்படுத்தின விசேஷம் 17:14 · வெளிப்படுத்தின விசேஷம் 19:8 · வெளிப்படுத்தின விசேஷம் 4:4 · வெளிப்படுத்தின விசேஷம் 19:11
15புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.
Relatedஏசாயா 63:2-6 · வெளிப்படுத்தின விசேஷம் 1:16 · வெளிப்படுத்தின விசேஷம் 2:27 · II தெசலோனிக்கேயர் 2:8 · சங்கீதம் 2:9 · ஏசாயா 11:4
16ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 17:14 · I தீமோத்தேயு 6:15 · தானியேல் 2:47 · பிலிப்பியர் 2:9-11 · வெளிப்படுத்தின விசேஷம் 19:12-13 · வெளிப்படுத்தின விசேஷம் 2:17
17பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து:
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 19:21 · வெளிப்படுத்தின விசேஷம் 8:13 · எசேக்கியேல் 39:17-20 · எரேமியா 12:9 · ஏசாயா 56:9 · ஏசாயா 34:1-8
18நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான்.
Relatedஎசேக்கியேல் 39:18-20 · I சாமுவேல் 17:46 · வெளிப்படுத்தின விசேஷம் 6:15 · எரேமியா 16:4 · எரேமியா 19:7 · எரேமியா 34:20
19பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 16:16 · வெளிப்படுத்தின விசேஷம் 16:14 · தானியேல் 8:25 · வெளிப்படுத்தின விசேஷம் 18:9 · தானியேல் 7:21-26 · தானியேல் 11:40-45
20அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 20:10 · வெளிப்படுத்தின விசேஷம் 21:8 · தானியேல் 7:7-14 · வெளிப்படுத்தின விசேஷம் 20:14-15 · II தெசலோனிக்கேயர் 2:8-11 · வெளிப்படுத்தின விசேஷம் 14:10
21மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.
📖 வெளிப்படுத்தின விசேஷம்All 22 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS