I சாமுவேல் 24
Tamil Bible (BSI 1957) • 22 verses
1சவுல் பெலிஸ்தரைப் பின்தொடர்ந்து திரும்பி வந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
RelatedI சாமுவேல் 23:28-29 · நீதிமொழிகள் 29:12 · I சாமுவேல் 23:19 · ஓசியா 7:3 · நீதிமொழிகள் 25:5 · எசேக்கியேல் 22:9
2அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான்.
RelatedI சாமுவேல் 26:2 · சங்கீதம் 37:32 · சங்கீதம் 104:18 · சங்கீதம் 38:12 · சங்கீதம் 141:6 · I சாமுவேல் 13:2
3வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு கெபி இருந்தது; அதிலே சவுல் மலஜலாதிக்குப் போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அந்தக் கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள்.
4அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான்.
RelatedI சாமுவேல் 26:8-11 · I சாமுவேல் 24:10 · I சாமுவேல் 26:23 · I சாமுவேல் 25:28-30 · I சாமுவேல் 24:18 · I சாமுவேல் 23:7
5தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்தது.
6அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவர் என்று சொல்லி,
RelatedII சாமுவேல் 1:14 · I சாமுவேல் 26:9-11 · ரோமர் 12:14-13:2 · யோபு 31:29-30 · I இராஜாக்கள் 21:3 · மத்தேயு 5:44
7தன் மனுஷரைச் சவுலின்மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடை பண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்து போனான்.
8அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப்பார்த்தபோது, தாவீது தரை மட்டும் முகங்குனிந்து வணங்கி,
RelatedI சாமுவேல் 25:23-24 · ரோமர் 13:7 · யாத்திராகமம் 20:12 · ஆதியாகமம் 17:3 · I சாமுவேல் 26:17 · I சாமுவேல் 20:41
9சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?
Relatedபிரசங்கி 7:21-22 · நீதிமொழிகள் 29:12 · சங்கீதம் 101:5 · சங்கீதம் 141:6 · நீதிமொழிகள் 17:4 · நீதிமொழிகள் 16:28
10இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன்மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன்.
11என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.
RelatedI சாமுவேல் 26:20 · I சாமுவேல் 23:14 · I சாமுவேல் 23:23 · யோவான் 15:25 · I சாமுவேல் 26:18 · II இராஜாக்கள் 5:13
12கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை.
Relatedநியாயாதிபதிகள் 11:27 · சங்கீதம் 43:1 · சங்கீதம் 35:1 · ஆதியாகமம் 16:5 · சங்கீதம் 94:1 · ரோமர் 12:19
13முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை.
14இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்?
RelatedI சாமுவேல் 26:20 · II சாமுவேல் 9:8 · I சாமுவேல் 17:43 · II சாமுவேல் 16:9 · I இராஜாக்கள் 21:7 · நியாயாதிபதிகள் 8:1-3
15கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.
16தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,
RelatedI சாமுவேல் 26:17 · லூக்கா 21:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:10 · ஆதியாகமம் 33:4 · யோபு 6:25 · நீதிமொழிகள் 15:1
17தாவீதைப் பார்த்து: நீ என்னைப்பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமை செய்தேன்.
Relatedமத்தேயு 5:44 · I சாமுவேல் 26:21 · ஆதியாகமம் 38:26 · ரோமர் 12:20-21 · யாத்திராகமம் 9:27 · மத்தேயு 27:4
18நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்று போடவில்லை.
RelatedI சாமுவேல் 26:23 · I சாமுவேல் 24:10 · I சாமுவேல் 26:8 · I சாமுவேல் 23:7 · I சாமுவேல் 23:12 · சங்கீதம் 31:8
19ஒருவன் தன் மாற்றானைக் கண்டு பிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக.
RelatedI சாமுவேல் 26:25 · நீதிமொழிகள் 25:21-22 · சங்கீதம் 18:20 · I சாமுவேல் 23:21 · நியாயாதிபதிகள் 17:2
20நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன்.
RelatedI சாமுவேல் 23:17 · மத்தேயு 2:3-6 · II சாமுவேல் 3:17-18 · யோபு 15:25 · மத்தேயு 2:13 · மத்தேயு 2:16
21இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என் சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என் தகப்பன் வீட்டாரில் என் பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் கர்த்தர்மேல் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்.
Relatedஆதியாகமம் 21:23 · II சாமுவேல் 21:6-8 · I சாமுவேல் 20:14-17 · எபிரெயர் 6:16 · ஆதியாகமம் 31:53 · ஆதியாகமம் 31:48
22அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.
📖 I சாமுவேல்All 31 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS