சங்கீதம் 107
Tamil Bible (BSI 1957) • 43 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
RelatedI நாளாகமம் 16:34 · சங்கீதம் 106:1 · II நாளாகமம் 7:3 · சங்கீதம் 105:1 · சங்கீதம் 100:5 · லூக்கா 1:50
2கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு,
RelatedI பேதுரு 1:18-19 · லூக்கா 1:74 · கலாத்தியர் 3:13 · சங்கீதம் 31:5 · சங்கீதம் 106:10 · தீத்து 2:14
3கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்லக்கடவர்கள்.
Relatedசங்கீதம் 106:47 · ஏசாயா 43:5-6 · எரேமியா 29:14 · வெளிப்படுத்தின விசேஷம் 5:9 · எரேமியா 31:8 · எசேக்கியேல் 39:27
4அவர்கள் தாபரிக்கும் ஊரைக்காணாமல், வனாந்தரத்திலே அவாந்தரவழியாய்,
Relatedஉபாகமம் 32:10 · எசேக்கியேல் 34:12 · எசேக்கியேல் 34:6 · எண்ணாகமம் 14:33 · யோபு 12:24 · ஆதியாகமம் 21:14-16
5பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள்.
Relatedமாற்கு 8:2-3 · புலம்பல் 2:19 · நியாயாதிபதிகள் 15:18-19 · I சாமுவேல் 30:11-12 · ஏசாயா 44:12 · எரேமியா 14:18
6தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார்.
Relatedசங்கீதம் 50:15 · சங்கீதம் 91:15 · எரேமியா 29:12-14 · எபிரெயர் 4:15-16 · சங்கீதம் 107:28 · சங்கீதம் 107:19
7தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார்.
Relatedஎரேமியா 31:9 · சங்கீதம் 77:20 · எஸ்றா 8:21-23 · எபிரெயர் 11:9-10 · எபிரெயர் 12:22 · சங்கீதம் 107:36
8தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
Relatedசங்கீதம் 107:31 · சங்கீதம் 147:1 · தானியேல் 4:2-3 · சங்கீதம் 107:15 · சங்கீதம் 78:4 · சங்கீதம் 107:21
9அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
10தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள்,
11அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள்.
Relatedசங்கீதம் 106:43 · சங்கீதம் 78:40 · நீதிமொழிகள் 1:25 · ரோமர் 1:28 · I சாமுவேல் 2:5-8 · லூக்கா 7:30
12அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; சகாயரில்லாமல் விழுந்து போனார்கள்.
Relatedசங்கீதம் 22:11 · யாத்திராகமம் 5:18-19 · லூக்கா 15:14-17 · யாத்திராகமம் 2:23 · ஏசாயா 51:23 · யோபு 9:13
13தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.
Relatedசங்கீதம் 107:28 · சங்கீதம் 107:6 · சங்கீதம் 18:6 · நியாயாதிபதிகள் 4:3 · நியாயாதிபதிகள் 6:6-10 · II நாளாகமம் 33:12-13
14அந்தகாரத்திலும் மரணஇருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார்.
Relatedஏசாயா 42:16 · சங்கீதம் 116:16 · எபேசியர் 5:8 · I பேதுரு 2:9 · சகரியா 9:11-12 · சங்கீதம் 107:10
15கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,
16அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
17நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும் தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.
Relatedபுலம்பல் 3:39 · நீதிமொழிகள் 1:22 · சங்கீதம் 14:1 · ஏசாயா 57:17-18 · சங்கீதம் 38:1-8 · நீதிமொழிகள் 7:7
18அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்.
19தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.
Relatedசங்கீதம் 34:4-6 · சங்கீதம் 78:34-35 · சங்கீதம் 107:13 · சங்கீதம் 107:6 · சங்கீதம் 116:4-8 · எரேமியா 33:3
20அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.
Relatedமத்தேயு 8:8 · சங்கீதம் 103:3-4 · சங்கீதம் 147:15 · சங்கீதம் 147:3 · II இராஜாக்கள் 20:4-5 · யோபு 33:28-30
21அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து,
Relatedசங்கீதம் 107:8 · லூக்கா 17:18 · சங்கீதம் 107:15 · II நாளாகமம் 32:25 · சங்கீதம் 66:5 · சங்கீதம் 107:31
22ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக.
Relatedசங்கீதம் 50:14 · சங்கீதம் 9:11 · சங்கீதம் 118:17 · எபிரெயர் 13:15 · சங்கீதம் 116:17 · சங்கீதம் 105:1-2
23கப்பலேறி, கடல்யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 18:17 · சங்கீதம் 48:7 · எசேக்கியேல் 27:26 · ஏசாயா 42:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:9-28
24அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள்.
25அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும்.
26அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது.
27வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது.
28அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார்.
Relatedமத்தேயு 8:25 · சங்கீதம் 107:13 · சங்கீதம் 107:19 · சங்கீதம் 107:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:23-25 · யோனா 1:14
29கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது.
30அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார்.
Relatedயோவான் 6:21
31அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதியசயங்களினிமித்தமும் துதித்து,
Relatedசங்கீதம் 107:8 · சங்கீதம் 103:2 · வெளிப்படுத்தின விசேஷம் 15:3 · சங்கீதம் 107:21 · சங்கீதம் 107:15 · ரோமர் 1:20-21
32ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக.
Relatedசங்கீதம் 22:25 · சங்கீதம் 22:22 · சங்கீதம் 99:5 · சங்கீதம் 46:10 · சங்கீதம் 119:46 · ஏசாயா 25:1
33அவர் ஆறுகளை அவாந்தரவெளியாகவும், நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும்,
34குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர் நிலமாகவும் மாற்றுகிறார்.
Relatedஆதியாகமம் 14:3 · ஆதியாகமம் 13:10 · எசேக்கியேல் 47:11 · உபாகமம் 29:23-28 · ஆதியாகமம் 19:24-25 · ஆதியாகமம் 13:13
35அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி,
Relatedசங்கீதம் 114:8 · ஏசாயா 35:6-7 · ஏசாயா 41:17-19 · ஏசாயா 44:3-5 · II இராஜாக்கள் 3:16-20 · எசேக்கியேல் 47:6-12
36பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி,
37வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும்.
RelatedI கொரிந்தியர் 3:7 · II கொரிந்தியர் 9:10 · சகரியா 8:12 · எரேமியா 29:5 · ஏசாயா 37:30 · ஆகாய் 1:10-11
38அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார்.
Relatedயாத்திராகமம் 1:7 · ஆதியாகமம் 17:20 · ஆதியாகமம் 12:2 · சங்கீதம் 128:1-6 · உபாகமம் 7:14 · உபாகமம் 30:9
39பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள்.
Relatedயாத்திராகமம் 2:23-24 · II இராஜாக்கள் 10:32 · II இராஜாக்கள் 14:26 · நியாயாதிபதிகள் 6:3-6 · II நாளாகமம் 15:5-6 · II இராஜாக்கள் 8:3
40அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சிவரப்பண்ணி, வழியில்லாத அவாந்தர வெளியிலே அவர்களைத் திரியச்செய்து,
41எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார்.
42உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும்.
43எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS