சங்கீதம் 118
Tamil Bible (BSI 1957) • 29 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
RelatedI நாளாகமம் 16:34 · சங்கீதம் 107:1 · சங்கீதம் 106:1 · எரேமியா 33:11 · சங்கீதம் 118:29 · I நாளாகமம் 16:8
2அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக.
Relatedசங்கீதம் 115:9-11 · சங்கீதம் 145:10 · சங்கீதம் 135:19-20 · சங்கீதம் 147:19-20 · I பேதுரு 2:9-10 · எபிரெயர் 13:15
3அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக.
Relatedசங்கீதம் 134:1-3 · வெளிப்படுத்தின விசேஷம் 5:8-10 · வெளிப்படுத்தின விசேஷம் 1:6 · வெளிப்படுத்தின விசேஷம் 4:7-11 · I பேதுரு 2:5
4அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக.
5நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்.
Relatedசங்கீதம் 18:19 · சங்கீதம் 18:6 · சங்கீதம் 120:1 · சங்கீதம் 107:19 · சங்கீதம் 130:1-2 · சங்கீதம் 31:8
6கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்ன செய்வான்?
7எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன்.
Relatedசங்கீதம் 59:10 · சங்கீதம் 54:4 · சங்கீதம் 54:7 · சங்கீதம் 55:18 · சங்கீதம் 92:11 · சங்கீதம் 112:8
8மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
9பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
Relatedசங்கீதம் 146:3-5 · ஏசாயா 31:1 · எசேக்கியேல் 29:7 · ஏசாயா 31:8 · ஏசாயா 30:2-3 · ஏசாயா 30:15-17
10எல்லா ஜாதியாரும் என்னை வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
Relatedசங்கீதம் 88:17 · வெளிப்படுத்தின விசேஷம் 20:8-9 · சங்கீதம் 18:40 · சகரியா 14:1-3 · II சாமுவேல் 10:1-19 · II சாமுவேல் 8:1-18
11என்னைச் சுற்றிலும் வளைந்து கொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
12தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன்.
Relatedஉபாகமம் 1:44 · I சாமுவேல் 17:45 · சங்கீதம் 20:5 · பிரசங்கி 7:6 · சங்கீதம் 20:1 · சங்கீதம் 8:9
13நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவி செய்தார்.
Relatedசங்கீதம் 140:4 · சங்கீதம் 86:17 · மீகா 7:8 · சங்கீதம் 18:17-18 · மத்தேயு 4:1-11 · I சாமுவேல் 25:29
14கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.
Relatedஏசாயா 12:2 · சங்கீதம் 18:2 · யாத்திராகமம் 15:2-6 · சங்கீதம் 27:1 · மத்தேயு 1:21-23 · ஏசாயா 45:22-25
15நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீர சத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 2:46-47 · சங்கீதம் 89:13 · சங்கீதம் 60:12 · சங்கீதம் 98:1 · யாத்திராகமம் 15:6 · லூக்கா 1:51
16கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.
17நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன்.
Relatedயோவான் 11:4 · சங்கீதம் 71:17-18 · ஏசாயா 38:16-20 · சங்கீதம் 6:5 · சங்கீதம் 73:28 · ஆபகூக் 1:12
18கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை.
RelatedI கொரிந்தியர் 11:32 · யோபு 5:17-18 · II கொரிந்தியர் 6:9 · நீதிமொழிகள் 3:11-12 · II கொரிந்தியர் 1:9-11 · சங்கீதம் 94:12-13
19நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன்.
Relatedஏசாயா 26:2 · வெளிப்படுத்தின விசேஷம் 22:14 · சங்கீதம் 100:4 · சங்கீதம் 9:13-14 · ஏசாயா 38:20 · சங்கீதம் 66:13-15
20கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 21:24-27 · ஏசாயா 26:2 · சங்கீதம் 24:7 · ஏசாயா 35:8-10 · வெளிப்படுத்தின விசேஷம் 22:14-15 · சங்கீதம் 24:9
21நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.
Relatedசங்கீதம் 116:1 · யாத்திராகமம் 15:2 · சங்கீதம் 118:14 · ஏசாயா 49:8 · ஏசாயா 12:2 · சங்கீதம் 69:33-34
22வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று.
Relatedலூக்கா 20:17 · மத்தேயு 21:42 · I பேதுரு 2:4-8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:11 · மாற்கு 12:10-11 · எபேசியர் 2:20-22
23அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது.
Relatedயோபு 5:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:41 · எபேசியர் 1:19-22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:31-32 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:32-36
24இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.
Relatedசங்கீதம் 84:10 · ஏசாயா 58:13 · நெகேமியா 8:10 · II நாளாகமம் 20:26-28 · I இராஜாக்கள் 8:66 · வெளிப்படுத்தின விசேஷம் 1:10
25கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும்.
26கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
27கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப் பலியைக் கொண்டுபோய் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள்.
28நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன்.
29கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS