ரோமர் 12
Tamil Bible (BSI 1957) • 21 verses
1அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை.
2நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
RelatedI பேதுரு 1:14 · எபேசியர் 4:22-24 · II கொரிந்தியர் 5:17 · கொலோசெயர் 3:10 · I யோவான் 2:15-17 · எபேசியர் 5:17
3அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.
Relatedகலாத்தியர் 6:3 · பிலிப்பியர் 2:3-8 · நீதிமொழிகள் 26:12 · ரோமர் 12:16 · I பேதுரு 5:5 · பிரசங்கி 7:16
4ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல,
RelatedI கொரிந்தியர் 12:27 · I கொரிந்தியர் 12:12-14 · எபேசியர் 4:15-16 · I கொரிந்தியர் 12:4 · எபேசியர் 4:4
5அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.
RelatedI கொரிந்தியர் 12:20 · I கொரிந்தியர் 12:27-28 · I கொரிந்தியர் 10:17 · எபேசியர் 4:25 · எபேசியர் 5:30 · கொலோசெயர் 2:19
6நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன்.
RelatedI பேதுரு 4:10-11 · I கொரிந்தியர் 7:7 · I கொரிந்தியர் 12:28-31 · I கொரிந்தியர் 12:4-11 · ரோமர் 12:3 · I கொரிந்தியர் 13:2
7ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,
RelatedI தீமோத்தேயு 5:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:1 · II தீமோத்தேயு 4:2 · எபேசியர் 4:11 · II தீமோத்தேயு 2:2 · சங்கீதம் 34:11
8புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன்.
RelatedII கொரிந்தியர் 9:7 · I தீமோத்தேயு 5:17 · I தீமோத்தேயு 3:4-5 · I கொரிந்தியர் 12:28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 15:32 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:15
9உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.
Relatedசங்கீதம் 34:14 · I பேதுரு 4:8 · I தீமோத்தேயு 1:5 · I யோவான் 3:18-20 · I பேதுரு 3:10-11 · I தெசலோனிக்கேயர் 5:21
10சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.
Relatedபிலிப்பியர் 2:3 · யோவான் 13:34-35 · எபிரெயர் 13:1 · I யோவான் 4:11 · I பேதுரு 3:8-9 · I பேதுரு 1:22
11அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
Relatedஎபிரெயர் 6:10-11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:25 · வெளிப்படுத்தின விசேஷம் 3:15-16 · நீதிமொழிகள் 13:4 · I பேதுரு 4:8 · கொலோசெயர் 3:22-24
12நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
Relatedரோமர் 15:13 · எபிரெயர் 10:36 · சங்கீதம் 62:8 · ரோமர் 5:2-4 · பிலிப்பியர் 4:6-7 · யாக்கோபு 5:7
13பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்.
Relatedஎபிரெயர் 13:16 · II கொரிந்தியர் 9:12 · I யோவான் 3:17 · எபிரெயர் 6:10 · கலாத்தியர் 6:10 · I பேதுரு 4:9
14உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.
RelatedI பேதுரு 3:9 · மத்தேயு 5:44 · I தெசலோனிக்கேயர் 5:15 · ரோமர் 12:21 · I கொரிந்தியர் 4:12-13 · லூக்கா 6:28
15சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.
RelatedI கொரிந்தியர் 12:26 · எபிரெயர் 13:3 · சங்கீதம் 35:13-14 · யோவான் 11:33-36 · யோபு 30:25 · லூக்கா 1:58
16ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள்.
RelatedI பேதுரு 3:8 · நீதிமொழிகள் 3:7 · யாக்கோபு 3:13-17 · பிலிப்பியர் 2:2-3 · ரோமர் 12:3 · எபிரெயர் 13:5
17ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள்.
Relatedநீதிமொழிகள் 20:22 · I தெசலோனிக்கேயர் 5:15 · I பேதுரு 3:9 · மத்தேயு 5:39 · II கொரிந்தியர் 8:20-21 · பிலிப்பியர் 4:8-9
18கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
Relatedஎபிரெயர் 12:14 · மத்தேயு 5:9 · ரோமர் 14:19 · II கொரிந்தியர் 13:11 · யாக்கோபு 3:16-18 · கலாத்தியர் 5:22
19பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.
Relatedஉபாகமம் 32:35 · எபிரெயர் 10:30 · நீதிமொழிகள் 24:29 · நீதிமொழிகள் 20:22 · ரோமர் 12:17 · I தெசலோனிக்கேயர் 4:6
20அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.
Relatedநீதிமொழிகள் 25:21-22 · மத்தேயு 5:44 · லூக்கா 6:27 · யாத்திராகமம் 23:4-5 · II இராஜாக்கள் 6:22 · I சாமுவேல் 24:16-19
21நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.
📖 ரோமர்All 16 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS