வெளிப்படுத்தின விசேஷம் 16
Tamil Bible (BSI 1957) • 21 verses
1அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழுதூதருடனே: நீங்கள் போய் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன்.
Relatedசெப்பனியா 3:8 · எரேமியா 10:25 · வெளிப்படுத்தின விசேஷம் 15:1 · வெளிப்படுத்தின விசேஷம் 16:17 · சங்கீதம் 79:6 · வெளிப்படுத்தின விசேஷம் 16:2-12
2முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 8:7 · வெளிப்படுத்தின விசேஷம் 16:11 · வெளிப்படுத்தின விசேஷம் 13:15-18 · லூக்கா 16:20-22 · உபாகமம் 28:27 · யாத்திராகமம் 9:8-11
3இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம்போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 8:8-9 · யாத்திராகமம் 7:17-21 · வெளிப்படுத்தின விசேஷம் 11:6 · சங்கீதம் 105:29 · சங்கீதம் 78:44 · ஆதியாகமம் 7:22
4மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின.
Relatedயாத்திராகமம் 7:17-20 · வெளிப்படுத்தின விசேஷம் 8:10-11 · வெளிப்படுத்தின விசேஷம் 14:7 · ஓசியா 13:15 · ஏசாயா 50:2 · வெளிப்படுத்தின விசேஷம் 16:5
5அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 11:17 · வெளிப்படுத்தின விசேஷம் 1:8 · வெளிப்படுத்தின விசேஷம் 1:4 · சங்கீதம் 145:17 · II தெசலோனிக்கேயர் 1:5-6 · ஆதியாகமம் 18:25
6அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன்.
Relatedஏசாயா 49:26 · வெளிப்படுத்தின விசேஷம் 11:18 · வெளிப்படுத்தின விசேஷம் 6:10-11 · லூக்கா 11:49-50 · வெளிப்படுத்தின விசேஷம் 18:24 · மத்தேயு 23:30-37
7பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 19:2 · வெளிப்படுத்தின விசேஷம் 6:9 · வெளிப்படுத்தின விசேஷம் 15:3-4 · வெளிப்படுத்தின விசேஷம் 8:3-5 · ஏசாயா 6:6 · வெளிப்படுத்தின விசேஷம் 14:18
8நான்காம் தூதன் தன் கலசத்திலிலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைத் தகிக்கும்படி அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.
Relatedலூக்கா 21:25 · வெளிப்படுத்தின விசேஷம் 14:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:20 · யோனா 4:8 · வெளிப்படுத்தின விசேஷம் 7:16 · வெளிப்படுத்தின விசேஷம் 8:12
9அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 16:21 · வெளிப்படுத்தின விசேஷம் 2:21 · எரேமியா 5:3 · வெளிப்படுத்தின விசேஷம் 16:10-11 · லூக்கா 13:5 · வெளிப்படுத்தின விசேஷம் 11:13
10ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு,
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 9:2 · மத்தேயு 8:12 · ஏசாயா 8:21-22 · யாத்திராகமம் 10:21-23 · வெளிப்படுத்தின விசேஷம் 18:23 · மத்தேயு 22:13
11தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 16:9 · வெளிப்படுத்தின விசேஷம் 16:21 · வெளிப்படுத்தின விசேஷம் 11:13 · வெளிப்படுத்தின விசேஷம் 16:2 · வெளிப்படுத்தின விசேஷம் 2:21 · சங்கீதம் 136:26
12ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்குந்திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 9:14 · எரேமியா 51:36 · ஏசாயா 44:27 · ஏசாயா 41:25 · எரேமியா 50:38-40 · ஏசாயா 42:15
13அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 19:20 · II தெசலோனிக்கேயர் 2:9-11 · வெளிப்படுத்தின விசேஷம் 20:10 · I யோவான் 4:1-3 · வெளிப்படுத்தின விசேஷம் 16:14 · வெளிப்படுத்தின விசேஷம் 13:11-18
14அவைகள் அற்புதங்களைச்செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 17:14 · I தீமோத்தேயு 4:1 · வெளிப்படுத்தின விசேஷம் 20:8 · II கொரிந்தியர் 11:13-15 · யாக்கோபு 3:15 · I யோவான் 5:19
15இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்.
RelatedI தெசலோனிக்கேயர் 5:2-3 · மத்தேயு 24:42-43 · II பேதுரு 3:10 · வெளிப்படுத்தின விசேஷம் 3:18 · வெளிப்படுத்தின விசேஷம் 3:3-4 · லூக்கா 12:37-43
16அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான்.
Relatedசகரியா 12:11 · நியாயாதிபதிகள் 5:19 · யோவேல் 3:9-14 · II இராஜாக்கள் 23:29-30 · வெளிப்படுத்தின விசேஷம் 17:14 · வெளிப்படுத்தின விசேஷம் 19:17-21
17ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 21:6 · யோவான் 19:30 · எபேசியர் 2:2 · எபேசியர் 6:12 · தானியேல் 12:7-13 · வெளிப்படுத்தின விசேஷம் 15:5-6
18சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை.
Relatedதானியேல் 12:1 · வெளிப்படுத்தின விசேஷம் 4:5 · வெளிப்படுத்தின விசேஷம் 11:13 · வெளிப்படுத்தின விசேஷம் 11:19 · வெளிப்படுத்தின விசேஷம் 8:5 · வெளிப்படுத்தின விசேஷம் 6:12
19அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்குத் தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்குமுன்பாக நினைப்பூட்டப்பட்டது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 18:5 · வெளிப்படுத்தின விசேஷம் 17:18 · வெளிப்படுத்தின விசேஷம் 18:21 · வெளிப்படுத்தின விசேஷம் 18:10 · வெளிப்படுத்தின விசேஷம் 18:16-19 · வெளிப்படுத்தின விசேஷம் 18:2
20தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின.
21தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்; அந்த வாதை மகா கொடிதாயிருந்தது.
📖 வெளிப்படுத்தின விசேஷம்All 22 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS