சங்கீதம் 55
Tamil Bible (BSI 1957) • 23 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும்.
RelatedI பேதுரு 3:12 · சங்கீதம் 86:6 · சங்கீதம் 61:1 · சங்கீதம் 27:9 · சங்கீதம் 80:1 · சங்கீதம் 64:1
2எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும்; சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன்.
3அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள்.
RelatedII சாமுவேல் 16:7-8 · சங்கீதம் 35:11 · சங்கீதம் 27:12 · சங்கீதம் 12:5 · மத்தேயு 26:59 · சங்கீதம் 54:3
4என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது.
Relatedசங்கீதம் 116:3 · மாற்கு 14:33-34 · II கொரிந்தியர் 1:8-10 · எபிரெயர் 5:7 · சங்கீதம் 18:4-5 · சங்கீதம் 88:3
5பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.
Relatedயோபு 21:6 · சங்கீதம் 119:120 · லூக்கா 22:44 · சங்கீதம் 88:15-16 · சங்கீதம் 42:6 · சங்கீதம் 61:2
6அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான்பறந்துபோய் இளைப்பாறுவேன்.
7நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா)
Relatedஎரேமியா 9:2 · II சாமுவேல் 15:14 · எரேமியா 37:12 · நீதிமொழிகள் 6:4-5 · II சாமுவேல் 17:21-22 · I சாமுவேல் 27:1
8பெருங்காற்றுக்கும் புசலுக்கும் தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன்.
9ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;
Relatedஎரேமியா 6:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:6-10 · II சாமுவேல் 15:31 · ஆதியாகமம் 11:7-9 · II சாமுவேல் 17:1-14 · எரேமியா 23:14
10அவைகள் இரவும்பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;
Relatedசங்கீதம் 59:14-15 · யோவான் 18:28 · ஏசாயா 59:6-15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:24 · சங்கீதம் 59:6 · எசேக்கியேல் 9:4
11கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; கொடுமையும் கபடும் அதின் வீதியைவிட்டு விலகிப்போகிறதில்லை.
Relatedசங்கீதம் 5:9 · ஏசாயா 59:7 · எரேமியா 5:26-27 · சங்கீதம் 10:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:51-52 · மத்தேயு 26:4
12என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.
Relatedசங்கீதம் 41:9 · யோவான் 13:18 · மத்தேயு 26:21-23 · சங்கீதம் 35:26 · யோவான் 18:2-3 · சங்கீதம் 38:16
13எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன்.
Relatedமீகா 7:5 · எரேமியா 9:4 · II சாமுவேல் 15:12 · மாற்கு 14:44-45 · II சாமுவேல் 16:23 · லூக்கா 22:47-48
14நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம்.
15மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் வாசஸ்தலங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் பொல்லாங்கு இருக்கிறது.
Relatedசங்கீதம் 59:13 · சங்கீதம் 64:7 · சங்கீதம் 109:6-20 · சங்கீதம் 9:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:18-20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:25
16நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.
17அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார்.
RelatedI தெசலோனிக்கேயர் 5:17 · எபேசியர் 6:18 · சங்கீதம் 141:2 · எபிரெயர் 5:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:1 · தானியேல் 6:10
18திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.
Relatedமத்தேயு 26:53 · I யோவான் 4:4 · சங்கீதம் 57:3 · சங்கீதம் 3:6-7 · II சாமுவேல் 22:1 · II நாளாகமம் 32:7-8
19ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா)
20அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய்த் தன் கையை நீட்டி தன் உடன்படிக்கையை மீறி நடந்தான்.
Relatedசங்கீதம் 89:34 · சங்கீதம் 7:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:1 · சங்கீதம் 120:6-7 · சங்கீதம் 109:5 · I சாமுவேல் 22:17
21அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.
Relatedசங்கீதம் 57:4 · நீதிமொழிகள் 5:3-4 · நீதிமொழிகள் 26:28 · சங்கீதம் 28:3 · லூக்கா 20:20-21 · நீதிமொழிகள் 26:24-26
22கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.
RelatedI பேதுரு 5:7 · சங்கீதம் 37:5 · பிலிப்பியர் 4:6-7 · மத்தேயு 6:25 · சங்கீதம் 62:6 · சங்கீதம் 16:8
23தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.
Relatedநீதிமொழிகள் 10:27 · சங்கீதம் 5:6 · யோபு 15:32 · சங்கீதம் 7:15-16 · சங்கீதம் 73:18 · ஏசாயா 38:17
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS