II நாளாகமம் 1
Tamil Bible (BSI 1957) • 17 verses
1தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார்.
RelatedI நாளாகமம் 29:25 · I இராஜாக்கள் 2:12 · ஆதியாகமம் 39:2 · ஆதியாகமம் 21:22 · யாத்திராகமம் 3:12 · ஆதியாகமம் 39:21
2சாலொமோன் ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், நியாயாதிபதிகளும், இஸ்ரவேல் எங்குமிருக்கிற வம்சங்களின் தலைவராகிய சகல பிரபுக்களுமான இஸ்ரவேல் அனைவரோடும் பேசி,
RelatedI நாளாகமம் 28:1 · I நாளாகமம் 27:1 · I நாளாகமம் 29:1 · II நாளாகமம் 30:2 · I நாளாகமம் 15:12 · II நாளாகமம் 34:29-30
3அவனும் அவனோடேகூடச் சபையார் அனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள்.
RelatedI நாளாகமம் 21:29 · I நாளாகமம் 16:39 · லேவியராகமம் 1:1 · யாத்திராகமம் 40:2 · உபாகமம் 34:5 · யாத்திராகமம் 40:34
4தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டுவந்தான்; கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்திலே பண்ணின தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் அங்கே இருந்தது.
RelatedI நாளாகமம் 15:25-28 · II சாமுவேல் 6:2 · II சாமுவேல் 6:17 · I நாளாகமம் 16:1 · I நாளாகமம் 15:1 · சங்கீதம் 132:5-6
5ஊரின் புத்திரனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் உண்டுபண்ணின வெண்கலப் பலிபீடமும் அங்கே கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள்.
Relatedயாத்திராகமம் 31:2 · யாத்திராகமம் 38:1-7 · யாத்திராகமம் 27:1-8 · I நாளாகமம் 2:19-20 · I நாளாகமம் 13:3
6அங்கே சாலொமோன் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கர்த்தரின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திப் பலியிட்டான்.
7அன்று இராத்திரியிலே தேவன் சாலொமோனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார்.
Relatedமத்தேயு 7:7-8 · I யோவான் 5:14-15 · யோவான் 16:23 · நீதிமொழிகள் 3:5-6 · மாற்கு 10:36-37 · மாற்கு 10:51
8சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீர்.
RelatedI நாளாகமம் 28:5 · ஏசாயா 55:3 · I நாளாகமம் 29:23 · II சாமுவேல் 22:51-23:1 · சங்கீதம் 89:49 · II சாமுவேல் 7:8-9
9இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்கு அருளின உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளத்தனை ஏராளமான ஜனத்தின்மேல் என்னை ராஜாவாக்கினீர்.
RelatedII சாமுவேல் 7:12-16 · ஆதியாகமம் 13:16 · சங்கீதம் 132:11-12 · சங்கீதம் 89:35-37 · ஆதியாகமம் 22:17 · I நாளாகமம் 28:6-7
10இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான்.
RelatedI இராஜாக்கள் 3:9 · நீதிமொழிகள் 2:2-6 · யாக்கோபு 1:5 · நீதிமொழிகள் 4:7 · நீதிமொழிகள் 3:13-18 · சங்கீதம் 119:34
11அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும், உன் பகைஞரின் பிராணனையும், நீடித்த ஆயுசையும் கேளாமல், நான் உன்னை அரசாளப்பண்ணின என்ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்க ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டபடியினாலும்,
Relatedயாக்கோபு 3:17 · நீதிமொழிகள் 23:7 · I சாமுவேல் 16:7 · I நாளாகமம் 29:17-18 · I இராஜாக்கள் 3:28 · யாக்கோபு 3:13
12ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார்.
Relatedயாக்கோபு 1:5 · II நாளாகமம் 9:22 · மத்தேயு 6:33 · எபேசியர் 3:20 · I நாளாகமம் 29:25 · பிரசங்கி 2:9
13இப்படிச் சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய், ஆசரிப்புக்கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலை அரசாண்டான்.
14சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தன; பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான்.
RelatedI இராஜாக்கள் 4:26 · I இராஜாக்கள் 10:26-29 · II நாளாகமம் 9:25 · I இராஜாக்கள் 9:19 · I இராஜாக்கள் 10:16 · உபாகமம் 17:16
15ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
RelatedII நாளாகமம் 9:27 · ஆமோஸ் 7:14 · யோபு 22:24-25 · I இராஜாக்கள் 10:27-29 · ஏசாயா 60:17 · II நாளாகமம் 1:12
16சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும் புடவைகளும் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டன; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்துக்கு வாங்கினார்கள்.
17அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியரின் சகல ராஜாக்களுக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டன.
RelatedII இராஜாக்கள் 10:29
📖 II நாளாகமம்All 36 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS