புலம்பல் 5
Tamil Bible (BSI 1957) • 22 verses
1கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும்.
Relatedசங்கீதம் 44:13-16 · சங்கீதம் 89:50-51 · புலம்பல் 3:19 · புலம்பல் 3:61 · ஆபகூக் 3:2 · சங்கீதம் 123:3-4
2எங்கள் சுதந்தரம் அந்நியர் வசமாகவும், எங்கள் வீடுகள் புறத்தேசத்தார் வசமாகவும் தாண்டிப்போயின.
Relatedஏசாயா 1:7 · செப்பனியா 1:13 · சங்கீதம் 79:1-2 · உபாகமம் 28:30-68 · ஏசாயா 5:17 · எசேக்கியேல் 7:24
3திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள்.
4எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கிக்குடிக்கிறோம்; எங்கள் விறகு விலைக்கிரயமாய் வருகிறது.
5பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை.
Relatedநெகேமியா 9:36-37 · புலம்பல் 1:14 · எரேமியா 28:14 · எரேமியா 27:11-12 · உபாகமம் 28:48 · எரேமியா 27:8
6அப்பத்தால் திருப்தியாகும்படி எகிப்தியருக்கும் அசீரியருக்கும் எங்களைக் கையளித்தோம்.
7எங்கள் பிதாக்கள் பாவஞ்செய்து மாண்டுபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம்.
Relatedஎரேமியா 16:12 · எரேமியா 31:29 · எசேக்கியேல் 18:2 · எரேமியா 14:20 · யாத்திராகமம் 20:5 · எரேமியா 31:15
8அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பாரில்லை.
9வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் அப்பத்தை தேடுகிறோம்.
Relatedஎசேக்கியேல் 4:16-17 · எரேமியா 40:9-12 · எசேக்கியேல் 12:18-19 · எரேமியா 41:18 · II சாமுவேல் 23:17 · நியாயாதிபதிகள் 6:11
10பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று.
11சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள்.
12பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை.
Relatedபுலம்பல் 4:16 · ஏசாயா 47:6 · புலம்பல் 2:10 · எரேமியா 52:25-27 · எரேமியா 52:10-11 · எரேமியா 39:6-7
13வாலிபரை எந்திரம் அரைக்கக்கொண்டுபோனார்கள்; இளைஞர் விறகு சுமந்து இடறிவிழுகிறார்கள்.
Relatedநியாயாதிபதிகள் 16:21 · மத்தேயு 23:4 · யோபு 31:10 · யாத்திராகமம் 23:5 · ஏசாயா 47:2 · யாத்திராகமம் 11:5
14முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று.
Relatedஎரேமியா 7:34 · வெளிப்படுத்தின விசேஷம் 18:22 · எசேக்கியேல் 26:13 · ஏசாயா 24:7-11 · உபாகமம் 16:18 · புலம்பல் 2:10
15எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று.
16எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே.
17அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின.
18பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது.
Relatedமீகா 3:12 · எரேமியா 9:11 · எரேமியா 17:3 · ஏசாயா 32:13-14 · I இராஜாக்கள் 9:7-8 · சங்கீதம் 74:2-3
19கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும்.
Relatedசங்கீதம் 102:12 · சங்கீதம் 45:6 · எபிரெயர் 1:8-12 · சங்கீதம் 145:13 · சங்கீதம் 102:25-27 · வெளிப்படுத்தின விசேஷம் 1:8
20தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன?
Relatedசங்கீதம் 44:24 · சங்கீதம் 13:1 · எரேமியா 14:19-21 · சங்கீதம் 77:7-10 · சங்கீதம் 74:1 · ஏசாயா 64:9-12
21கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும்.
Relatedசங்கீதம் 80:3 · சங்கீதம் 80:7 · சங்கீதம் 85:4 · சங்கீதம் 80:19 · எரேமியா 31:18 · சகரியா 8:3-6
22எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்பேரில் கடுங்கோபமாயிருக்கிறீரே!
Relatedசங்கீதம் 60:1-2 · ஓசியா 1:6 · எரேமியா 15:1-5 · எசேக்கியேல் 37:11 · ஏசாயா 64:9 · சங்கீதம் 44:9
📖 புலம்பல்All 5 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS