பிலிப்பியர் 4
Tamil Bible (BSI 1957) • 23 verses
1ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள்.
Relatedபிலிப்பியர் 1:27 · I கொரிந்தியர் 16:13 · சங்கீதம் 27:14 · பிலிப்பியர் 2:16 · I கொரிந்தியர் 15:58 · எபிரெயர் 10:23
2கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன்.
Relatedஎபிரெயர் 12:14 · I கொரிந்தியர் 1:10 · மாற்கு 9:50 · I பேதுரு 3:8-11 · பிலிப்பியர் 2:2-3 · எபேசியர் 4:1-8
3அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷவிஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 3:5 · வெளிப்படுத்தின விசேஷம் 13:8 · லூக்கா 10:20 · பிலிப்பியர் 1:27 · வெளிப்படுத்தின விசேஷம் 21:27 · வெளிப்படுத்தின விசேஷம் 17:8
4கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
RelatedI தெசலோனிக்கேயர் 5:16-18 · ரோமர் 12:12 · யாக்கோபு 1:2-4 · பிலிப்பியர் 3:1 · மத்தேயு 5:12 · ரோமர் 5:2-3
5உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.
Relatedயாக்கோபு 5:8-9 · மத்தேயு 6:25 · தீத்து 3:2 · எபிரெயர் 10:37 · I பேதுரு 4:7 · வெளிப்படுத்தின விசேஷம் 22:7
6நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
Relatedநீதிமொழிகள் 3:5-6 · I பேதுரு 5:7 · மத்தேயு 6:25-33 · சங்கீதம் 55:22 · I தெசலோனிக்கேயர் 5:17-18 · மத்தேயு 7:7-8
7அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.
Relatedயோவான் 14:27 · ஏசாயா 26:3 · II தெசலோனிக்கேயர் 3:16 · கொலோசெயர் 3:15 · சங்கீதம் 29:11 · யோவான் 16:33
8கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
Relatedயாக்கோபு 3:17 · தீத்து 2:7 · ரோமர் 12:9-21 · II கொரிந்தியர் 8:21 · கலாத்தியர் 5:22 · I தெசலோனிக்கேயர் 5:21-22
9நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.
Relatedயாக்கோபு 1:22 · I தெசலோனிக்கேயர் 4:1-8 · பிலிப்பியர் 3:17 · II பேதுரு 1:10 · யோவான் 13:17 · ரோமர் 16:20
10என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை.
RelatedII கொரிந்தியர் 11:9 · கலாத்தியர் 6:6 · II கொரிந்தியர் 7:6-7 · கலாத்தியர் 6:10 · பிலிப்பியர் 1:3 · II கொரிந்தியர் 6:7
11என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
RelatedI தீமோத்தேயு 6:6-9 · எபிரெயர் 13:5-6 · மத்தேயு 6:31-34 · பிலிப்பியர் 3:8 · II கொரிந்தியர் 9:8 · II கொரிந்தியர் 6:10
12தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.
Relatedமத்தேயு 11:29 · II கொரிந்தியர் 12:7-10 · II கொரிந்தியர் 11:27 · II கொரிந்தியர் 11:9 · II கொரிந்தியர் 6:4-10 · உபாகமம் 32:10
13என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
Relatedஏசாயா 41:10 · II கொரிந்தியர் 12:9-10 · எபேசியர் 6:10 · கொலோசெயர் 1:11 · ஏசாயா 40:29-31 · எபேசியர் 3:16
14ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது.
Relatedஎபிரெயர் 13:16 · பிலிப்பியர் 1:7 · எபிரெயர் 10:34 · I இராஜாக்கள் 8:18 · கலாத்தியர் 6:6 · மத்தேயு 25:21
15மேலும், பிலிப்பியரே, சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
Relatedபிலிப்பியர் 1:5 · II கொரிந்தியர் 11:8-12 · II கொரிந்தியர் 12:11-15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:40-17:5 · II இராஜாக்கள் 5:16 · II இராஜாக்கள் 5:20
16நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள்.
17உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன்.
Relatedதீத்து 3:14 · எபிரெயர் 6:10 · II கொரிந்தியர் 9:9-13 · யோவான் 15:8 · I பேதுரு 5:2 · தீத்து 1:7
18எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்தபலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.
Relatedஎபிரெயர் 13:16 · பிலிப்பியர் 4:12 · II கொரிந்தியர் 9:12 · எபேசியர் 5:2 · பிலிப்பியர் 2:25-26 · II தெசலோனிக்கேயர் 1:3
19என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
RelatedII கொரிந்தியர் 9:8-11 · சங்கீதம் 84:11 · I பேதுரு 5:10 · சங்கீதம் 23:1-5 · I தீமோத்தேயு 6:17 · மீகா 7:7
20நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
Relatedரோமர் 11:36 · சங்கீதம் 115:1 · வெளிப்படுத்தின விசேஷம் 14:7 · வெளிப்படுத்தின விசேஷம் 7:12 · சங்கீதம் 72:19 · வெளிப்படுத்தின விசேஷம் 4:9-11
21கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் யாவருக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். என்னோடிருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
Relatedகலாத்தியர் 1:2 · பிலேமோன் 1:23-24 · எபேசியர் 1:1 · கொலோசெயர் 4:10-14 · ரோமர் 16:21-22 · பிலிப்பியர் 1:1
22பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
Relatedபிலிப்பியர் 1:13 · II கொரிந்தியர் 13:13 · ரோமர் 16:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:13 · எபிரெயர் 13:24 · I பேதுரு 5:13
23நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
📖 பிலிப்பியர்All 4 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS