பிலிப்பியர் 1
Tamil Bible (BSI 1957) • 30 verses
1இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:
RelatedII கொரிந்தியர் 1:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:12-15 · ரோமர் 1:1 · கொலோசெயர் 1:1-2 · II தெசலோனிக்கேயர் 1:1 · I தீமோத்தேயு 3:8
2நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால்,
RelatedI கொரிந்தியர் 1:4 · I தெசலோனிக்கேயர் 1:2-3 · பிலேமோன் 1:4-5 · II தீமோத்தேயு 1:3 · எபேசியர் 1:15-16 · கொலோசெயர் 1:3-4
4நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,
RelatedI தெசலோனிக்கேயர் 1:2 · ரோமர் 1:9 · II யோவான் 1:4 · பிலிப்பியர் 2:2 · எபேசியர் 1:14-23 · கொலோசெயர் 2:5
5உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,
Relatedபிலிப்பியர் 4:14-15 · எபிரெயர் 3:14 · பிலிப்பியர் 1:7 · பிலேமோன் 1:17 · II கொரிந்தியர் 8:1 · எபேசியர் 3:6
6நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
RelatedI தெசலோனிக்கேயர் 5:23-24 · பிலிப்பியர் 2:13 · எபேசியர் 4:12 · எபிரெயர் 13:20-21 · சங்கீதம் 138:8 · I பேதுரு 5:10
7என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது.
RelatedII கொரிந்தியர் 7:3 · பிலிப்பியர் 1:5 · கொலோசெயர் 4:18 · II தீமோத்தேயு 2:9 · எபேசியர் 3:1 · பிலிப்பியர் 4:14
8இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.
Relatedரோமர் 1:9 · பிலிப்பியர் 4:1 · I தெசலோனிக்கேயர் 2:8 · II தீமோத்தேயு 1:4 · ரோமர் 9:1 · கொலோசெயர் 2:1
9மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும்,
RelatedI தெசலோனிக்கேயர் 3:12 · கொலோசெயர் 1:9 · பிலேமோன் 1:6 · II பேதுரு 1:5-6 · கொலோசெயர் 3:10 · I தெசலோனிக்கேயர் 4:9-10
10தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
Relatedரோமர் 12:2 · I தெசலோனிக்கேயர் 3:13 · I தெசலோனிக்கேயர் 5:23 · ரோமர் 2:18 · எபேசியர் 5:10 · I யோவான் 4:1
11நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.
Relatedஎபிரெயர் 12:11 · யோவான் 15:8 · யோவான் 15:4-5 · கொலோசெயர் 1:10 · கலாத்தியர் 5:22-23 · பிலிப்பியர் 4:17
12சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
RelatedII தீமோத்தேயு 2:9 · ரோமர் 8:28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:19-21 · ரோமர் 8:37 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:1-30
13அரமனையெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி,
RelatedII தீமோத்தேயு 2:9 · எபேசியர் 3:1 · பிலிப்பியர் 4:22 · எபேசியர் 6:20 · பிலிப்பியர் 1:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:29
14சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.
Relatedஎபேசியர் 6:19-20 · I தெசலோனிக்கேயர் 2:2 · லூக்கா 1:74 · கொலோசெயர் 4:4 · பிலிப்பியர் 1:7 · கொலோசெயர் 4:7
15சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
Relatedரோமர் 16:17-18 · பிலிப்பியர் 2:3 · II கொரிந்தியர் 11:13 · II கொரிந்தியர் 4:5 · I பேதுரு 5:2-4 · பிலிப்பியர் 1:16-18
16சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
RelatedII கொரிந்தியர் 2:17 · II கொரிந்தியர் 4:1-2 · யோபு 6:14 · பிலிப்பியர் 1:12 · சங்கீதம் 69:26 · பிலிப்பியர் 1:10
17சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
RelatedII தீமோத்தேயு 1:11-12 · பிலிப்பியர் 2:3 · II தீமோத்தேயு 4:6-7 · I கொரிந்தியர் 9:16-17 · பிலிப்பியர் 1:7 · II தீமோத்தேயு 4:16
18இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.
Relatedலூக்கா 9:50 · மாற்கு 9:38-40 · I கொரிந்தியர் 15:11 · பிலிப்பியர் 1:14-17 · I கொரிந்தியர் 14:15 · மத்தேயு 23:13
19அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன்.
Relatedரோமர் 8:28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:7 · II கொரிந்தியர் 1:11 · கலாத்தியர் 4:6 · ரோமர் 8:9 · எபேசியர் 6:18-19
20நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்.
RelatedI பேதுரு 4:16 · I கொரிந்தியர் 6:20 · ஏசாயா 54:4 · I தெசலோனிக்கேயர் 5:23 · I யோவான் 2:28 · எபேசியர் 6:19-20
21கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
Relatedகலாத்தியர் 2:20 · II கொரிந்தியர் 5:8 · II கொரிந்தியர் 5:1 · பிலிப்பியர் 1:23 · II கொரிந்தியர் 5:6 · பிலிப்பியர் 1:20
22ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.
RelatedI பேதுரு 4:2 · கலாத்தியர் 2:20 · பிலிப்பியர் 1:24 · II கொரிந்தியர் 10:3 · சங்கீதம் 71:18 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:17
23ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;
RelatedII கொரிந்தியர் 5:8 · சங்கீதம் 17:15 · வெளிப்படுத்தின விசேஷம் 14:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:59 · வெளிப்படுத்தின விசேஷம் 7:14-17 · யோவான் 17:24
24அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
25இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு,
Relatedபிலிப்பியர் 2:24 · II கொரிந்தியர் 1:24 · எபேசியர் 4:11-13 · ரோமர் 1:11-12 · ரோமர் 15:13 · ரோமர் 5:2
26உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன்.
RelatedII கொரிந்தியர் 1:14 · II கொரிந்தியர் 5:12 · பிலிப்பியர் 4:4 · பிலிப்பியர் 3:3 · பிலிப்பியர் 3:1 · II கொரிந்தியர் 7:6
27நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.
Relatedஎபேசியர் 4:1 · I கொரிந்தியர் 16:13-14 · II பேதுரு 3:14 · I கொரிந்தியர் 1:10 · பிலிப்பியர் 2:1-2 · கொலோசெயர் 1:10
28நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.
RelatedII தீமோத்தேயு 1:7-8 · II தெசலோனிக்கேயர் 1:5-6 · மத்தேயு 10:28 · ஏசாயா 51:7 · II தீமோத்தேயு 2:11-12 · I பேதுரு 4:12-14
29ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.
Relatedயாக்கோபு 1:2 · I பேதுரு 4:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:41 · ரோமர் 5:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22 · மத்தேயு 5:11-12
30நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.
📖 பிலிப்பியர்All 4 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS