சங்கீதம் 136
Tamil Bible (BSI 1957) • 26 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1கர்த்தரை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
RelatedI நாளாகமம் 16:34 · சங்கீதம் 118:1 · I நாளாகமம் 16:41 · சங்கீதம் 107:1 · சங்கீதம் 106:1 · II நாளாகமம் 20:21
2தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Relatedஉபாகமம் 10:17 · சங்கீதம் 97:9 · II நாளாகமம் 2:5 · தானியேல் 2:47 · யோசுவா 22:22 · யாத்திராகமம் 18:11
3கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
4ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Relatedசங்கீதம் 72:18 · சங்கீதம் 86:10 · யோபு 5:9 · யாத்திராகமம் 15:11 · வெளிப்படுத்தின விசேஷம் 15:3
5வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Relatedஆதியாகமம் 1:1 · சங்கீதம் 104:24 · எரேமியா 51:15 · சங்கீதம் 33:6 · நீதிமொழிகள் 8:22-29 · எரேமியா 10:12
6தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
7பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
8பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
9இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
10எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Relatedயாத்திராகமம் 12:29 · சங்கீதம் 78:51 · சங்கீதம் 135:8 · சங்கீதம் 105:36 · யாத்திராகமம் 12:12 · யாத்திராகமம் 11:5-6
11அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Relatedயாத்திராகமம் 12:51 · யாத்திராகமம் 13:3 · யாத்திராகமம் 13:17 · சங்கீதம் 105:37 · சங்கீதம் 78:52 · I சாமுவேல் 12:6-8
12பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Relatedஎரேமியா 32:21 · உபாகமம் 4:34 · சங்கீதம் 44:3 · யாத்திராகமம் 6:6 · உபாகமம் 11:2-4 · ஏசாயா 51:9-10
13சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Relatedசங்கீதம் 78:13 · சங்கீதம் 106:9-11 · யாத்திராகமம் 14:29 · யாத்திராகமம் 14:21-22 · சங்கீதம் 74:13 · எபிரெயர் 11:29
14அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
15பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Relatedசங்கீதம் 78:53 · சங்கீதம் 135:9 · நெகேமியா 9:10-11 · சங்கீதம் 65:5 · யாத்திராகமம் 15:10-13 · லூக்கா 1:71-74
16தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Relatedஉபாகமம் 8:15 · யாத்திராகமம் 13:18 · யாத்திராகமம் 15:22 · சங்கீதம் 77:20 · உபாகமம் 8:2 · எண்ணாகமம் 9:17-22
17பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
18பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Relatedஉபாகமம் 29:7
19எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
20பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
21அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Relatedசங்கீதம் 44:2-3 · யோசுவா 12:1-7 · சங்கீதம் 135:12 · நெகேமியா 9:22-24 · யோசுவா 13:1-21 · சங்கீதம் 105:44
22அதைத் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்திரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
23நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Relatedஏசாயா 63:9 · லூக்கா 1:48 · சங்கீதம் 113:7 · I சாமுவேல் 2:7-8 · சங்கீதம் 116:6 · சங்கீதம் 142:6
24நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Relatedயாத்திராகமம் 15:13 · சங்கீதம் 107:2 · உபாகமம் 15:15 · லூக்கா 1:68-74 · தீத்து 2:14 · ஏசாயா 63:9
25மாம்ச தேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
26பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS