II தீமோத்தேயு 3
Tamil Bible (BSI 1957) • 17 verses
1மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக.
RelatedII பேதுரு 3:3 · II தீமோத்தேயு 4:3 · I தீமோத்தேயு 4:1-3 · I யோவான் 2:18 · II தெசலோனிக்கேயர் 2:3-12 · யூதா 1:17
2எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,
Relatedபிலிப்பியர் 2:21 · ரோமர் 1:29-31 · யூதா 1:16 · சங்கீதம் 10:3 · II தீமோத்தேயு 3:4 · II பேதுரு 2:14-15
3சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
4துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,
RelatedI தீமோத்தேயு 3:6 · யூதா 1:4 · பிலிப்பியர் 3:18-19 · யூதா 1:8-9 · II பேதுரு 2:10-22 · ரோமர் 16:18
5தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
Relatedஏசாயா 29:13 · தீத்து 1:16 · மத்தேயு 23:27-28 · I தீமோத்தேயு 5:8 · ரோமர் 2:20-24 · மத்தேயு 7:15
6பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,
7எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
RelatedII தீமோத்தேயு 4:3-4 · எபேசியர் 4:14 · I தீமோத்தேயு 2:4 · யோவான் 5:44 · II தீமோத்தேயு 2:25 · எபிரெயர் 5:11
8யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 2:20 · யாத்திராகமம் 7:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:8-11 · I தீமோத்தேயு 6:5 · வெளிப்படுத்தின விசேஷம் 2:14-15 · II தீமோத்தேயு 4:15
9ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்.
RelatedII தீமோத்தேயு 3:8 · யாத்திராகமம் 7:12 · எரேமியா 28:15-17 · யாத்திராகமம் 9:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:11 · எரேமியா 37:19
10நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும்,
RelatedI தீமோத்தேயு 6:11 · தீத்து 2:7 · II பேதுரு 1:5-7 · பிலிப்பியர் 2:22 · I தீமோத்தேயு 4:6 · எபிரெயர் 13:9
11அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார்.
Relatedசங்கீதம் 34:19 · II கொரிந்தியர் 11:23-28 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:5-6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:45 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:19-21 · II பேதுரு 2:9
12அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
RelatedI பேதுரு 3:14 · I பேதுரு 4:12-16 · I பேதுரு 2:20-21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:22 · மத்தேயு 5:10-12 · மத்தேயு 16:24
13பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம் போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.
RelatedI தீமோத்தேயு 4:1 · தீத்து 3:3 · II தீமோத்தேயு 3:8 · II பேதுரு 2:20 · II தெசலோனிக்கேயர் 2:6-11 · II பேதுரு 3:3
14நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல்,
RelatedII தீமோத்தேயு 2:2 · I தெசலோனிக்கேயர் 2:13 · II தீமோத்தேயு 1:13 · I தெசலோனிக்கேயர் 1:5 · எபிரெயர் 10:22 · எபிரெயர் 6:11
15கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
Relatedசங்கீதம் 119:98-99 · லூக்கா 24:45 · நீதிமொழிகள் 22:6 · II பேதுரு 1:20-21 · மத்தேயு 22:29 · I கொரிந்தியர் 15:3-4
16வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
Relatedரோமர் 15:4 · எபிரெயர் 4:12 · II பேதுரு 1:19-21 · மாற்கு 12:24 · சங்கீதம் 19:7-11 · சங்கீதம் 119:9
17அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.
📖 II தீமோத்தேயுAll 4 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS