ஆதியாகமம் 49
Tamil Bible (BSI 1957) • 33 verses
1யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்.
Relatedஎண்ணாகமம் 24:14 · எரேமியா 23:20 · தானியேல் 10:14 · உபாகமம் 4:30 · எபிரெயர் 1:2 · சங்கீதம் 105:15
2யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்.
Relatedசங்கீதம் 34:11 · நீதிமொழிகள் 8:32 · நீதிமொழிகள் 23:22 · நீதிமொழிகள் 23:26 · நீதிமொழிகள் 6:20 · நீதிமொழிகள் 7:1
3ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
Relatedசங்கீதம் 78:51 · உபாகமம் 21:17 · சங்கீதம் 105:36 · ஆதியாகமம் 29:32 · ஆதியாகமம் 48:18 · I நாளாகமம் 5:1
4தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே.
Relatedஆதியாகமம் 35:22 · உபாகமம் 27:20 · I நாளாகமம் 5:1 · உபாகமம் 33:6 · I கொரிந்தியர் 5:1 · யாக்கோபு 1:6-8
5சிமியோனும், லேவியும் ஏகசகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.
6என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே.
Relatedஆதியாகமம் 34:30 · சங்கீதம் 26:9 · சங்கீதம் 16:9 · சங்கீதம் 64:2 · லூக்கா 12:19 · எரேமியா 15:17
7உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும்பண்ணுவேன்.
RelatedI நாளாகமம் 6:65 · யோசுவா 19:1-9 · I நாளாகமம் 4:24-31 · யோசுவா 21:1-45 · நீதிமொழிகள் 26:24-25 · II சாமுவேல் 13:15
8யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள்.
RelatedI நாளாகமம் 5:2 · ஆதியாகமம் 27:29 · எபிரெயர் 7:14 · உபாகமம் 33:7 · ஆதியாகமம் 29:35 · சங்கீதம் 18:40-43
9யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்?
Relatedஎண்ணாகமம் 24:9 · எண்ணாகமம் 23:24 · வெளிப்படுத்தின விசேஷம் 5:5 · மீகா 5:8 · ஓசியா 5:14 · எசேக்கியேல் 19:5
10சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
11அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சச்செடியிலும், தன் கோளிகைக்கழுதையின் குட்டியை நற்குல திராட்சச்செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான்.
Relatedஏசாயா 63:1-3 · வெளிப்படுத்தின விசேஷம் 7:14 · யோவேல் 3:18 · I இராஜாக்கள் 4:25 · I இராஜாக்கள் 4:20 · வெளிப்படுத்தின விசேஷம் 19:18
12அவன் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயும், அவன் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும்.
Relatedநீதிமொழிகள் 23:29
13செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன்வரைக்கும் இருக்கும்.
14இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.
Relatedஆதியாகமம் 30:18 · I நாளாகமம் 12:32 · உபாகமம் 33:18 · யோசுவா 19:17-23 · நியாயாதிபதிகள் 5:15-16 · நியாயாதிபதிகள் 10:1
15அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, பகுதிகட்டுகிறவனானான்.
Relatedமத்தேயு 23:4 · யோசுவா 14:15 · II சாமுவேல் 7:1 · சங்கீதம் 81:6 · எசேக்கியேல் 29:18 · நியாயாதிபதிகள் 3:11
16தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.
Relatedஉபாகமம் 33:22 · ஆதியாகமம் 30:6 · நியாயாதிபதிகள் 15:20 · நியாயாதிபதிகள் 13:24-25 · நியாயாதிபதிகள் 18:1-2 · நியாயாதிபதிகள் 18:26-27
17தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.
Relatedநியாயாதிபதிகள் 18:22-31 · I நாளாகமம் 12:35 · நியாயாதிபதிகள் 14:1-15 · நியாயாதிபதிகள் 16:22-30
18கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன்.
19காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.
RelatedI நாளாகமம் 5:11-22 · உபாகமம் 33:20-21 · ஆதியாகமம் 30:11 · I நாளாகமம் 3:18-22 · I நாளாகமம் 5:26 · ஆதியாகமம் 46:16
20ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான்.
21நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான்.
Relatedஉபாகமம் 33:23 · ஆதியாகமம் 30:8 · யோசுவா 19:32-39 · சங்கீதம் 18:33-34 · மத்தேயு 4:15-16 · நியாயாதிபதிகள் 5:18
22யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்.
Relatedஆதியாகமம் 41:52 · சங்கீதம் 1:1-3 · சங்கீதம் 128:3 · யோசுவா 17:14-17 · யோசுவா 16:1-10 · ஆதியாகமம் 46:27
23வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.
Relatedஆதியாகமம் 37:24 · சங்கீதம் 118:13 · ஆதியாகமம் 37:4 · சங்கீதம் 64:3 · ஆதியாகமம் 37:28 · யோவான் 16:33
24ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான்.
Relatedசங்கீதம் 132:2 · ஏசாயா 28:16 · சங்கீதம் 132:5 · யோபு 29:20 · சங்கீதம் 80:1 · II தீமோத்தேயு 4:17
25உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
Relatedஆதியாகமம் 35:11 · ஆதியாகமம் 28:13 · பிலிப்பியர் 4:19 · ஆதியாகமம் 43:23 · உபாகமம் 8:17 · உபாகமம் 33:13-17
26உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின் மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.
Relatedஉபாகமம் 33:15-16 · ஆபகூக் 3:6 · ஆதியாகமம் 27:39-40 · ஆதியாகமம் 28:3-4 · சங்கீதம் 132:18 · யோனா 2:6
27பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான்.
Relatedநியாயாதிபதிகள் 20:25 · நியாயாதிபதிகள் 20:21 · எசேக்கியேல் 22:27 · எண்ணாகமம் 23:24 · ஆதியாகமம் 46:21 · ஆதியாகமம் 35:18
28இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்.
Relatedஎஸ்தர் 8:11 · வெளிப்படுத்தின விசேஷம் 7:4 · எசேக்கியேல் 39:8-10 · எஸ்தர் 9:1-10 · எஸ்தர் 8:7 · ஆதியாகமம் 35:22
29பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு;
Relatedஆதியாகமம் 50:13 · ஆதியாகமம் 47:30 · ஆதியாகமம் 15:15 · ஆதியாகமம் 25:8-17 · II சாமுவேல் 19:37 · ஆதியாகமம் 35:29
30அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார்.
31அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன்.
Relatedஆதியாகமம் 25:9 · ஆதியாகமம் 35:29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:16 · ஆதியாகமம் 23:3 · ஆதியாகமம் 47:30 · ஆதியாகமம் 23:16-20
32அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான்.
Relatedஆதியாகமம் 23:17-20
33யாக்கோபு தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக் கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
📖 ஆதியாகமம்All 50 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS