சங்கீதம் 69
Tamil Bible (BSI 1957) • 36 verses
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150
1தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.
Relatedசங்கீதம் 69:14-15 · ஏசாயா 43:2 · புலம்பல் 3:54 · சங்கீதம் 42:7 · சங்கீதம் 69:2 · வெளிப்படுத்தின விசேஷம் 17:15
2ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.
Relatedசங்கீதம் 40:2 · மத்தேயு 7:25 · சங்கீதம் 32:6 · சங்கீதம் 88:6-7 · எரேமியா 38:6 · எரேமியா 38:22
3நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று.
Relatedசங்கீதம் 6:6 · சங்கீதம் 119:82 · சங்கீதம் 119:123 · ஏசாயா 38:14 · உபாகமம் 28:32 · சங்கீதம் 25:21
4நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதாயிற்று.
Relatedசங்கீதம் 35:19 · யோவான் 15:25 · சங்கீதம் 109:3-5 · சங்கீதம் 35:11-12 · II கொரிந்தியர் 5:21 · ஏசாயா 53:4-7
5தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
Relatedசங்கீதம் 38:9 · எரேமியா 16:17 · சங்கீதம் 19:12 · சங்கீதம் 17:3 · சங்கீதம் 44:20-21 · சங்கீதம் 38:5
6சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னிமித்தம் வெட்கப்பட்டுப் போகாதிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக.
Relatedசங்கீதம் 25:3 · சங்கீதம் 35:26 · லூக்கா 24:19-21 · சங்கீதம் 72:18 · ஏசாயா 49:23 · சங்கீதம் 7:7
7உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று.
8என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன்.
Relatedசங்கீதம் 31:11 · யோவான் 1:11 · யோவான் 7:5 · சங்கீதம் 38:11 · மத்தேயு 10:35-36 · மத்தேயு 26:70-74
9உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
Relatedரோமர் 15:3 · யோவான் 2:14-17 · சங்கீதம் 119:139 · மாற்கு 11:15-17 · I இராஜாக்கள் 19:10 · சங்கீதம் 89:41
10என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது.
11இரட்டை என் உடுப்பாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன்.
Relatedஎரேமியா 24:9 · யோபு 17:6 · I இராஜாக்கள் 9:7 · உபாகமம் 28:37 · ஏசாயா 22:12 · சங்கீதம் 44:13-14
12வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; மதுபானம் பண்ணுகிறவர்களின் பாடலானேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 4:26-27 · சங்கீதம் 35:15-16 · மத்தேயு 27:41-42 · யோபு 30:8-9 · தானியேல் 5:23 · உபாகமம் 16:18
13ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.
RelatedII கொரிந்தியர் 6:2 · ஏசாயா 49:8 · சங்கீதம் 55:16-17 · சங்கீதம் 91:15 · சங்கீதம் 40:10-11 · ஏசாயா 55:6
14நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும்.
Relatedசங்கீதம் 144:7 · எரேமியா 38:6-13 · சங்கீதம் 109:21 · சங்கீதம் 69:1-2 · சங்கீதம் 40:1-3 · புலம்பல் 3:55
15ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 12:15-16 · ஏசாயா 43:1-2 · யோனா 2:2-7 · சங்கீதம் 16:10 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:24 · சங்கீதம் 88:4-6
16கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும்.
Relatedசங்கீதம் 109:21 · சங்கீதம் 25:16 · சங்கீதம் 63:3 · மீகா 7:19 · சங்கீதம் 26:11 · சங்கீதம் 106:45
17உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.
Relatedசங்கீதம் 27:9 · சங்கீதம் 102:2 · மத்தேயு 27:46 · சங்கீதம் 70:1 · சங்கீதம் 143:9 · சங்கீதம் 13:1
18நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும்.
Relatedசங்கீதம் 111:9 · சங்கீதம் 22:1 · சங்கீதம் 22:19 · சங்கீதம் 49:15 · சங்கீதம் 10:1 · யோசுவா 7:9
19தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள்.
Relatedஎபிரெயர் 12:2 · ஏசாயா 53:3 · I பேதுரு 2:23 · சங்கீதம் 38:9 · சங்கீதம் 2:2-4 · சங்கீதம் 69:7-9
20நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்.
21என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள்.
22அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது.
RelatedI தெசலோனிக்கேயர் 5:3 · ரோமர் 11:8-10 · I பேதுரு 2:8 · ஏசாயா 8:14-15 · நீதிமொழிகள் 1:32 · மல்கியா 2:2
23அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும்.
Relatedதானியேல் 5:6 · ரோமர் 11:10 · ஏசாயா 6:9-10 · II கொரிந்தியர் 3:14 · ஏசாயா 21:3-4 · எரேமியா 30:6
24உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக.
Relatedசங்கீதம் 79:6 · ஓசியா 5:10 · வெளிப்படுத்தின விசேஷம் 16:1 · லூக்கா 21:22 · ஏசாயா 13:8 · லேவியராகமம் 26:14-46
25அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 1:20 · மத்தேயு 23:38 · எரேமியா 7:12-14 · லூக்கா 13:35 · ஏசாயா 6:11 · மத்தேயு 24:1-2
26தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே.
Relatedஏசாயா 53:4 · சகரியா 1:15 · மாற்கு 15:27-32 · ஏசாயா 53:10 · சகரியா 13:7 · I தெசலோனிக்கேயர் 2:15
27அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக.
Relatedஏசாயா 26:10 · நெகேமியா 4:5 · ரோமர் 1:28 · வெளிப்படுத்தின விசேஷம் 22:10-11 · II தெசலோனிக்கேயர் 2:11-12 · II தீமோத்தேயு 4:14
28ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக.
Relatedயாத்திராகமம் 32:32-33 · லூக்கா 10:20 · பிலிப்பியர் 4:3 · வெளிப்படுத்தின விசேஷம் 13:8 · எசேக்கியேல் 13:9 · வெளிப்படுத்தின விசேஷம் 20:12-15
29நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
Relatedசங்கீதம் 91:14-16 · சங்கீதம் 40:17 · சங்கீதம் 70:5 · சங்கீதம் 109:22 · சங்கீதம் 18:48 · சங்கீதம் 20:1
30தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன்.
Relatedசங்கீதம் 28:7 · சங்கீதம் 34:3 · சங்கீதம் 118:28-29 · சங்கீதம் 40:1-3 · சங்கீதம் 118:21 · சங்கீதம் 50:14
31கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும்.
Relatedஎபிரெயர் 13:15 · சங்கீதம் 50:13-14 · I பேதுரு 2:5 · எபேசியர் 5:19-20 · சங்கீதம் 50:23 · ஓசியா 14:2
32சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும்.
33கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.
Relatedசங்கீதம் 68:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:18-19 · சகரியா 9:11-12 · வெளிப்படுத்தின விசேஷம் 2:10 · லூக்கா 4:18 · சங்கீதம் 146:7
34வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிறயாவும் அவரைத் துதிக்கக்கடவது.
Relatedஏசாயா 49:13 · சங்கீதம் 150:6 · சங்கீதம் 96:11 · ஏசாயா 55:12 · ஏசாயா 44:22-23 · சங்கீதம் 148:1-14
35தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
Relatedஏசாயா 44:26 · ஏசாயா 46:13 · சங்கீதம் 51:18 · சங்கீதம் 102:16 · ஒபதியா 1:17 · சங்கீதம் 48:11-13
36அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள்.
📖 சங்கீதம்All 150 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS