II கொரிந்தியர் 7
Tamil Bible (BSI 1957) • 16 verses
1இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.
RelatedI தெசலோனிக்கேயர் 4:7 · I பேதுரு 2:11 · யாக்கோபு 4:8 · நீதிமொழிகள் 8:13 · சங்கீதம் 51:10 · I யோவான் 3:3
2எங்களுக்கு இடங்கொடுங்கள்; நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை.
RelatedII கொரிந்தியர் 11:9 · II கொரிந்தியர் 6:12-13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:33 · II யோவான் 1:10 · I தெசலோனிக்கேயர் 2:3-6 · II கொரிந்தியர் 1:12
3உங்களைக் குற்றவாளிகளாக்கும் பொருட்டாக இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களுடனேகூடச் சாகவும் கூடப் பிழைக்கவுந்தக்கதாக எங்களிருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே.
RelatedII கொரிந்தியர் 6:11-12 · பிலிப்பியர் 1:8-9 · II கொரிந்தியர் 12:15 · I தெசலோனிக்கேயர் 2:8 · ரூத் 1:16-17 · I கொரிந்தியர் 4:14-15
4மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன். எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.
RelatedII கொரிந்தியர் 1:4 · யாக்கோபு 1:2 · II கொரிந்தியர் 3:12 · I கொரிந்தியர் 1:4 · கொலோசெயர் 1:24 · ரோமர் 5:3
5எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.
RelatedII கொரிந்தியர் 2:13 · உபாகமம் 32:25 · யோபு 18:11 · I தெசலோனிக்கேயர் 3:5 · மத்தேயு 11:28-30 · கலாத்தியர் 4:11
6ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார்.
RelatedII தெசலோனிக்கேயர் 2:16-17 · II கொரிந்தியர் 1:3-4 · III யோவான் 1:2-4 · II கொரிந்தியர் 7:13 · எரேமியா 31:13 · ஏசாயா 57:18
7அவன் வந்ததினாலேமாத்திரமல்ல, உங்கள் வாஞ்சையையும், உங்கள் துக்கிப்பையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் கண்டு, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாய்ச் சந்தோஷப்பட்டேன்.
RelatedII யோவான் 1:4 · யூதா 1:3 · யாக்கோபு 4:9-10 · எபிரெயர் 2:1 · II கொரிந்தியர் 5:2 · கொலோசெயர் 2:5
8ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப்பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப்படுதிறதில்லை.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 3:19 · யோவான் 16:6 · எபிரெயர் 12:9-11 · II கொரிந்தியர் 2:2-11 · யாத்திராகமம் 5:22-23 · எரேமியா 20:7-9
9இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
Relatedலூக்கா 15:7 · எரேமியா 31:18-20 · சங்கீதம் 38:18 · பிரசங்கி 7:3 · II கொரிந்தியர் 13:8-10 · II கொரிந்தியர் 7:10-11
10தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லெளகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 3:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:18 · II தீமோத்தேயு 2:25-26 · II சாமுவேல் 12:13 · லூக்கா 18:13 · லூக்கா 15:10
11பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள்.
Relatedரோமர் 14:18 · I தீமோத்தேயு 5:21-22 · II தீமோத்தேயு 2:15 · எபேசியர் 5:11 · சங்கீதம் 2:11 · யூதா 1:23
12ஆதலால் நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயஞ்செய்தவனிமித்தமுமல்ல, அநியாயஞ்செய்யப்பட்டவனிமித்தமுமல்ல, தேவனுக்கு முன்பாக உங்களைக்குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற ஜாக்கிரதை உங்களுக்கு வெளிப்படும் பொருட்டே அப்படி எழுதினேன்.
RelatedII கொரிந்தியர் 2:9 · I தீமோத்தேயு 3:5 · II கொரிந்தியர் 2:3-4 · II கொரிந்தியர் 11:11 · II கொரிந்தியர் 11:28 · II கொரிந்தியர் 2:17
13இதினிமித்தம் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதலைடந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம்.
RelatedII கொரிந்தியர் 7:6 · ரோமர் 12:15 · ரோமர் 15:32 · I பேதுரு 3:8 · I கொரிந்தியர் 16:13 · I கொரிந்தியர் 12:26
14இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாய் நான் அவனுடனே சொன்ன யாதொன்றைக்குறித்தும் வெட்கப்படமாட்டேன்; நாங்கள் சகலத்தையும் உங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாய்ச் சொன்னதும் சத்தியமாக விளங்கிற்றே.
RelatedII கொரிந்தியர் 7:4 · II தெசலோனிக்கேயர் 1:4 · II கொரிந்தியர் 1:18-20 · II கொரிந்தியர் 8:24 · II கொரிந்தியர் 9:2-4 · II கொரிந்தியர் 7:6
15மேலும் நீங்களெல்லாரும் கட்டளைக்கு அமைந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கையில், அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாயிருக்கிறது.
Relatedபிலிப்பியர் 2:12 · I யோவான் 3:17 · II கொரிந்தியர் 2:9 · ஏசாயா 66:2 · சங்கீதம் 119:120 · சங்கீதம் 2:11
16ஆகையால் எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடநம்பிக்கை உண்டாயிருக்கிறதென்று சந்தோஷப்படுகிறேன்.
📖 II கொரிந்தியர்All 13 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS