எபிரெயர் 13
Tamil Bible (BSI 1957) • 25 verses
1சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.
RelatedI யோவான் 4:20-5:1 · I பேதுரு 3:8 · I பேதுரு 1:22 · I பேதுரு 2:17 · II பேதுரு 1:7 · I யோவான் 2:9-10
2அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு.
Relatedமத்தேயு 25:35 · ஆதியாகமம் 18:1-19:3 · I பேதுரு 4:9 · ரோமர் 12:13 · மத்தேயு 25:43 · மத்தேயு 25:40
3கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கனுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
Relatedமத்தேயு 25:36 · எபிரெயர் 10:34 · ரோமர் 12:15 · I கொரிந்தியர் 12:26 · கொலோசெயர் 4:18 · I பேதுரு 3:8
4விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
Relatedஆதியாகமம் 2:24 · நீதிமொழிகள் 5:15-23 · I கொரிந்தியர் 7:2-16 · கலாத்தியர் 5:19 · ஆதியாகமம் 1:27-28 · கலாத்தியர் 5:21
5நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
6அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.
Relatedசங்கீதம் 118:6-9 · ஏசாயா 41:10 · ரோமர் 8:31 · சங்கீதம் 27:1-3 · சங்கீதம் 124:8 · எபிரெயர் 4:16
7தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
RelatedI தெசலோனிக்கேயர் 5:12-13 · எபிரெயர் 13:17 · பிலிப்பியர் 3:17 · எபிரெயர் 6:12 · I தெசலோனிக்கேயர் 1:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 14:23
8இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
Relatedமல்கியா 3:6 · யாக்கோபு 1:17 · வெளிப்படுத்தின விசேஷம் 1:8 · ஏசாயா 44:6 · எபிரெயர் 1:12 · சங்கீதம் 102:27-28
9பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே.
Relatedஎபேசியர் 4:14 · I தீமோத்தேயு 6:3-5 · எபேசியர் 5:6 · I யோவான் 4:1 · ரோமர் 14:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:30
10நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை.
RelatedI கொரிந்தியர் 10:20 · I கொரிந்தியர் 5:7-8 · I கொரிந்தியர் 9:13 · எண்ணாகமம் 7:5 · I கொரிந்தியர் 10:17-18 · எண்ணாகமம் 3:7-8
11ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும்.
Relatedலேவியராகமம் 16:27 · யாத்திராகமம் 29:14 · எண்ணாகமம் 19:3 · லேவியராகமம் 9:11 · லேவியராகமம் 6:30 · லேவியராகமம் 4:5-7
12அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.
Relatedஎபிரெயர் 9:12-14 · யோவான் 19:17-18 · மாற்கு 15:20-24 · I கொரிந்தியர் 6:11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:58 · எபேசியர் 5:26
13ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப் போகக்கடவோம்.
Relatedஎபிரெயர் 11:26 · I பேதுரு 4:14-16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:41 · மத்தேயு 16:24 · லூக்கா 6:22 · I கொரிந்தியர் 4:10-13
14நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித்தேடுகிறோம்.
Relatedபிலிப்பியர் 3:20 · கொலோசெயர் 3:1-3 · எபிரெயர் 11:12-16 · எபிரெயர் 12:22 · II பேதுரு 3:13-14 · எபேசியர் 2:19
15ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.
Relatedசங்கீதம் 107:21-22 · சங்கீதம் 50:14 · ரோமர் 12:1 · சங்கீதம் 145:1-21 · I பேதுரு 2:5 · ஓசியா 14:2
16அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்.
Relatedகலாத்தியர் 6:10 · II தெசலோனிக்கேயர் 3:13 · ரோமர் 12:13 · எபிரெயர் 6:10 · எபிரெயர் 13:1-2 · I தீமோத்தேயு 6:18
17உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.
RelatedI தெசலோனிக்கேயர் 5:12-13 · I தீமோத்தேயு 5:17 · எபிரெயர் 13:7 · I பேதுரு 5:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:28 · I பேதுரு 5:2-3
18எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்.
RelatedI தெசலோனிக்கேயர் 5:25 · II தெசலோனிக்கேயர் 3:1 · கொலோசெயர் 4:3 · I தீமோத்தேயு 1:5 · ரோமர் 15:30 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:16
19நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன்.
20நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,
Relatedயோவான் 10:11 · எபிரெயர் 10:22 · ரோமர் 15:33 · சங்கீதம் 23:1 · யோவான் 10:14 · II தெசலோனிக்கேயர் 3:16
21இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
Relatedபிலிப்பியர் 2:13 · II தெசலோனிக்கேயர் 2:17 · பிலிப்பியர் 4:13 · I பேதுரு 5:10-11 · I பேதுரு 2:5 · பிலிப்பியர் 1:11
22சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
RelatedI பேதுரு 5:12 · II கொரிந்தியர் 6:1 · எபிரெயர் 3:1 · கலாத்தியர் 6:11 · II கொரிந்தியர் 5:20 · எபிரெயர் 10:19-39
23சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனுடனேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன்.
Relatedபிலேமோன் 1:1 · I தெசலோனிக்கேயர் 3:2 · II தீமோத்தேயு 1:8 · பிலேமோன் 1:22 · ரோமர் 15:25 · ரோமர் 15:28
24உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
Relatedஎபிரெயர் 13:17 · எபிரெயர் 13:7 · பிலேமோன் 1:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:2 · கொலோசெயர் 1:2 · பிலிப்பியர் 4:22
25கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
📖 எபிரெயர்All 13 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS