II கொரிந்தியர் 3
Tamil Bible (BSI 1957) • 18 verses
1எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ? அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ?
RelatedII கொரிந்தியர் 12:11 · II கொரிந்தியர் 10:12 · II கொரிந்தியர் 5:12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:27 · I கொரிந்தியர் 16:3 · I கொரிந்தியர் 4:15
2எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே.
Relatedரோமர் 1:8 · I கொரிந்தியர் 9:1-2 · I தெசலோனிக்கேயர் 1:8 · பிலிப்பியர் 1:7 · II கொரிந்தியர் 7:3 · I கொரிந்தியர் 3:10
3ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது.
Relatedஎசேக்கியேல் 11:19 · எரேமியா 31:33 · எபிரெயர் 8:10 · எபிரெயர் 10:16 · சங்கீதம் 40:8 · யாத்திராகமம் 31:18
4நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம்.
Relatedபிலிப்பியர் 1:6 · எபேசியர் 3:12 · I தெசலோனிக்கேயர் 1:8 · யாத்திராகமம் 18:19 · II கொரிந்தியர் 2:14
5எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது.
RelatedII கொரிந்தியர் 12:9 · பிலிப்பியர் 4:13 · I கொரிந்தியர் 15:10 · பிலிப்பியர் 2:13 · யோவான் 15:5 · யாக்கோபு 1:17
6புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது.
7எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே.
RelatedII கொரிந்தியர் 3:9-11 · I கொரிந்தியர் 13:10 · யாத்திராகமம் 31:18 · ரோமர் 10:4 · II கொரிந்தியர் 3:3 · யாத்திராகமம் 24:12
8ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?
Relatedஎபேசியர் 2:18 · I கொரிந்தியர் 3:16 · I பேதுரு 1:2 · ஏசாயா 59:21 · கலாத்தியர் 3:14 · II தெசலோனிக்கேயர் 2:13
9ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.
Relatedரோமர் 3:21-22 · எபிரெயர் 12:18-21 · II கொரிந்தியர் 5:21 · I கொரிந்தியர் 15:41 · ரோமர் 4:11 · ரோமர் 8:3-4
10இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல.
RelatedII பேதுரு 1:17 · ஆகாய் 2:7-9 · பிலிப்பியர் 3:7-8 · யோபு 25:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:13 · வெளிப்படுத்தின விசேஷம் 22:5
11அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே.
Relatedரோமர் 5:20-21 · எபிரெயர் 8:13 · எபிரெயர் 7:21-25 · II கொரிந்தியர் 4:1 · II கொரிந்தியர் 3:6-7 · எபிரெயர் 12:25-29
12நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம்.
RelatedII கொரிந்தியர் 7:4 · எபேசியர் 6:19-20 · யோவான் 16:29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:13 · பிலிப்பியர் 1:20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:29-31
13மேலும் ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை.
Relatedயாத்திராகமம் 34:33-35 · எபேசியர் 2:14-15 · கொலோசெயர் 2:17 · எபிரெயர் 10:1-9 · II கொரிந்தியர் 3:7 · கலாத்தியர் 3:23-24
14அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.
RelatedII கொரிந்தியர் 4:3-4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:18 · ரோமர் 11:25 · II கொரிந்தியர் 4:6 · எபேசியர் 1:17-20 · ரோமர் 11:7-10
15மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே.
16அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போகும்.
17கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.
18நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.
📖 II கொரிந்தியர்All 13 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS