அப்போஸ்தலருடைய நடபடிகள் 26
Tamil Bible (BSI 1957) • 32 verses
1அகிரிப்பா பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத் தொடங்கினான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:2 · யோவான் 7:51 · நீதிமொழிகள் 1:24 · நீதிமொழிகள் 18:17 · ரோமர் 10:21
2அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற சகல காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன்.
3விசேஷமாய் நீர் யூதருடைய சகலமுறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 6:14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:4 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:17
4நான் என் சிறுவயதுமுதற்கொண்டு, எருசலேமிலே என் ஜனத்தாருக்குள்ளே இருந்தபடியால், ஆதிமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லாரும் அறிந்திருக்கிறார்கள்.
5நம்முடைய மார்க்கத்திலுள்ள சமயபேதங்களில் மிகவும் கண்டிப்பான சமயத்துக்கு இசைந்தபடி பரிசேயனாய் நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு மனதிருந்தால் சொல்லலாம்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 23:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:5 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:5 · பிலிப்பியர் 3:5-6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:14
6தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயத்தீர்ப்படைகிறவனாய் நிற்கிறேன்.
Relatedதீத்து 2:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:15 · தானியேல் 7:13-14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:20 · ரோமர் 15:8 · மீகா 5:2
7இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சாட்டுகிறார்கள்.
Relatedயாக்கோபு 1:1 · I தீமோத்தேயு 5:5 · பிலிப்பியர் 3:11 · எஸ்றா 6:17 · லூக்கா 22:30 · மத்தேயு 19:28
8தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?
RelatedI கொரிந்தியர் 15:12-20 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:31-32 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:40-42 · லூக்கா 18:27 · பிலிப்பியர் 3:21
9முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேக காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன்.
RelatedI தீமோத்தேயு 1:13 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:8 · கலாத்தியர் 1:13-14 · பிலிப்பியர் 3:6 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:5 · யோவான் 15:21
10அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரம் பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 8:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:13-14 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:21 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:4-5 · I கொரிந்தியர் 15:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:19-20
11சகல ஜெப ஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ்சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள்பேரில் மூர்க்கவெறிகொண்டவனாய் அந்நியப்பட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 13:45 · மத்தேயு 10:17 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:19 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:5 · II பேதுரு 2:16
12இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 22:5-11 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:1-8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:10 · யோவான் 7:45-48 · I இராஜாக்கள் 21:8-10 · ஏசாயா 10:1
13மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன்.
Relatedவெளிப்படுத்தின விசேஷம் 21:23 · வெளிப்படுத்தின விசேஷம் 1:16 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:6 · மத்தேயு 17:2 · ஏசாயா 30:26 · ஏசாயா 24:23
14நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாமென்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 21:40 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:2 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 9:7 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:7-9 · I கொரிந்தியர் 10:22 · சகரியா 12:2
15அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே.
16இப்பொழுது நீ எழுந்து, காலூன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 22:14-15 · எசேக்கியேல் 2:1 · தானியேல் 10:11 · ரோமர் 15:16 · I தீமோத்தேயு 1:12 · கலாத்தியர் 1:12
17உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 9:15 · I தீமோத்தேயு 2:7 · எரேமியா 1:19 · ரோமர் 11:13 · கலாத்தியர் 2:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:28
18அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார்.
RelatedI பேதுரு 2:9 · எபேசியர் 1:18 · எபேசியர் 5:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:32 · ஏசாயா 42:7 · II கொரிந்தியர் 4:6
19ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழப்படியாதவனாயிருக்கவில்லை.
Relatedஏசாயா 50:5 · எசேக்கியேல் 2:7-8 · கலாத்தியர் 1:16 · எரேமியா 20:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:2 · யோனா 1:3
20முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்.
Relatedமத்தேயு 3:8 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:19 · II தீமோத்தேயு 2:25-26 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:38 · வெளிப்படுத்தின விசேஷம் 2:5 · II பேதுரு 1:5-8
21இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்யப் பிரயத்தனம் பண்ணினார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 21:30-31 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:22 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:12-15
22ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 24:14 · யோவான் 5:46 · ரோமர் 3:21 · லூக்கா 24:44 · லூக்கா 24:27 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:43
23தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுயஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான்.
Relatedஏசாயா 53:1-12 · லூக்கா 24:26 · கொலோசெயர் 1:18 · வெளிப்படுத்தின விசேஷம் 1:5 · சகரியா 12:10 · எபிரெயர் 2:10
24இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்தசத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.
RelatedI கொரிந்தியர் 2:13-14 · I கொரிந்தியர் 1:23 · II கொரிந்தியர் 5:13 · I கொரிந்தியர் 4:10 · மாற்கு 3:21 · எரேமியா 29:26
25அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 23:26 · தீத்து 2:7-8 · தீத்து 1:9 · I பேதுரு 3:9 · லூக்கா 1:3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:3
26இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 26:2-3 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:1-12 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:18-42 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 4:16-21 · மத்தேயு 27:29-54 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:22
27அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான்.
28அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 11:26 · மத்தேயு 10:18 · I பேதுரு 4:16 · II கொரிந்தியர் 4:2 · எசேக்கியேல் 33:31 · மாற்கு 10:17-22
29அதற்குப் பவுல்: நீர்மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.
Relatedஎபேசியர் 6:20 · ரோமர் 10:1 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 21:33 · கொலோசெயர் 1:28 · II கொரிந்தியர் 11:1 · I கொரிந்தியர் 7:7
30இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களுடனேகூட உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து,
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 18:15 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:23 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:22
31தனியே போய்: இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவது பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
Relatedஅப்போஸ்தலருடைய நடபடிகள் 23:29 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:9 · அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:18 · I பேதுரு 3:16 · II சாமுவேல் 24:17 · லூக்கா 23:14-15
32அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான்.
📖 அப்போஸ்தலருடைய நடபடிகள்All 28 chapters of this book
📚 Whole Bible66 books • 1,189 chapters
💻 Church SoftwareOffline Bible + 16,337 songs — free
🎵 Tamil Christian Songs16,337 lyrics & chords
Translation: Tamil Old Version (BSI) — 1957, and the World English Bible (public domain).
NITHYAM SONGS